”அணை”யும் பிரச்னையை



 தூண்டும் மத்திய அரசு.
முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக எழுந்த விவகாரத்தின் அடிப்படையில்,  டேம் 999 என்ற படத்தை தமிழக அரசு தடை செய்தது.

தமிழகத்தில் விதிக்கப்பட்ட இந்தத் தடையை நீக்கக் கோரி, அப்படத்தின் இயக்குநர் சோஹன் ராய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில்மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, 'முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தில் தற்போது பதற்றம் குறைந்து வருகிறது. டேம் 999 திரைப்படத்துக்கு அனுமதி அளித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். இந்தத் திரைப்படத்தில் காட்டப்படுவது முல்லைப் பெரியாறு அணையைப் போல் இருக்கிறது. 999 என்பது தமிழகம் – கேரளாவுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைக் குறிப்பது போல் உள்ளது,' என்று தமிழக அரசின் சார்பில் கூறப்படப்பட்டது. 
இதையடுத்து, மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி நீதிபதிகள், "தணிக்கை வாரியம் அனுமதி அளித்துவிட்ட பிறகு, திரைப்படங்களுக்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை," என்று கூறினார்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இப்படத்தை திரையிட்டால் எப்படி பதற்றம் ஏற்படும் என்பது பற்றி இம்மாதம் 25-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துனர்.

மத்திய அரசு கூறுவது வேடிக்கையானது.மாநிலமக்கள் தங்களுக்கு எதிரானது என கருதும் படத்தை வெளியிட்டு பதட்டத்தை ஏற்படுத்துவது எந்த வகையிலும் நியாமமாகாது. வன்முறை வெடித்த பின் தலையை சொரிய வேண்டுமா?
தணிக்கை வாரியம் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புபடிதான் செயல்படுகின்றனரவர்களின் வாக்கு வேதவாக்காக இல்லை
ஒருபடத்திற்கு வன்முறை காட்சிகளை தாராளமாக அனுமதிக்கும் அவர்கள் மற்றொரு படத்திற்கு ’வெட்டிடுவேன்”என்ற வசனத்தையே வன்முறையை தூண்டுவதாக அறிவிக்கிறார்கள்
பாய்ஸ் படம் உட்பட பலபடங்களில் அமெரிக்கக்கொடியை கண்டபடி பயன்படுத்த அனுமதித்த அதே தணிக்கையாளர்கள்தான் ‘உடும்பன்”படத்தில் தலையில் அக்கொடியை கட்டிவருவதை வெட்டியிருக்கிறார்கள்.


முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னை ஒரு இருமாநில உணர்வுபூர்வமான பிரச்னை.அதனால் ஏற்பட்ட போராட்டங்கள்,கலவரங்கள்,தீவைப்புகள் மத்திய அரசுக்கு தெரியாததல்ல.தணிக்கை வாரிய உறுப்பினர்களுக்கும்,ஏன் நீதிபதிகளுக்கும் தெரியாத ஒரு ரகசியம் அல்ல.
இப்போது சற்று தணிந்துள்ள பதட்டத்தை மீண்டும் அதிகமான அளவில் தமிழகம் முழுக்க ஏற்படுத்த வேண்டும்.தமிழ்நாட்டு மக்களும்,கேரள மக்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தென்னகம் கலவர பூமியாவதைதான் மத்திய அரசு விரும்புகிறதா?அப்படி என்றால் தாராளமாக புத்தர்கள் நிரம்பிய தணிக்கை அனுமதி படி 999வை வெளியிடுங்கள்.ஆனால் அதனால் ஏற்படும் நிகழ்வுகளுக்கு மன்மோகன் -சோனியா அரசுதான் பொறுப்பு.


அப்படி தமிழகத்தில் அந்த அணை999 படத்தை வெளியிட மத்திய அரசுக்கு என்ன கட்டாயம்?
மத்திய அரசு இந்த விவகாரத்தில் இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்ததே அநியாயம்.
இப்போது தணிந்துவரும் பதட்டத்தை மீண்டும் கலவரமாக்க மத்திய அரசுக்கு என்ன கட்டாயம் வந்தது? ஒரு வேளை அந்த999 படத்தை எடுத்தவர்களே மன்மோகன் காங்கிரசுதானோ? 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?