பாயும் சிறுத்தை.......
அசாம் மாநிலம் ஹவ்காத்தியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் திடிரென புகுந்த சிறுத்தை ஒன்றுமக்களைத்தாக்கியதில் ஒருவர் பலியானார்.5 பேர்கள் படுகாயமடைந்தனர்.
.[07-01-2012 ]
சரியும் செல்போன் விலை,
உலகில் உள்ள முன்னணி மொபைல் நிறுவனங்களுடன் போட்டி போட்டு நம்மூர்களில் விற்பனையில் சாதனை செய்து வரும் ஜி-5 நிறுவனம், மேலும் தன்னுடைய மொபைல் போன்கள் விலையை 30 சதவீதம் வரை குறைக்கவுள்ளது.
சீனநாட்டில் உள்ள மொபைல் நிறுவனம் ஜி-5. இதன் மொபைல் போன்கள் இந்தியாவிலும் பிரபலமாகி அதிக அளவு விற்பனையாகி வருகிறது. இன்று தமிழகத்தில் அதிகமானோர் வைத்திருக்கும் மொபைல் ஜி-5 தான் இதற்கு முக்கிய காரணம் ஜி-5 மொபைல் போன்களின் விலை நோக்கியா,சாம்சங் போன்ற மொபைல்களைவிட மிகக்குறைவு, ஆனால் மல்டிமீடியா வசதிகள் அனைத்தும் உள்ளன.உழைப்பும் -விலையும் மக்களை கவர்ந்துள்ளது.இதனால் ஜி-5 மொபைல்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு.அதிக விற்பனை.சிலர் இரண்டு,மூன்று மொபைல்கள் வாங்கும் அளவு மோகம் அதிகம் உள்ளது.
தற்போது மொபைல் போன்களில் பெருகி வரும் தொழில்நுட்பம் காரணமாக ஜி-5 நிறுவனமும்,மற்ற முன்னணி மொபைல் நிறுவனங்களுக்கு போட்டியாக தொழில் நுட்பத்தினை கொடுக்கும் வகையில் மொபைல் போன்களை தயாரித்து வருகிறது. அது போன்ற மொபைல்களின் விலையை குறைத்து, இந்தியாவில் வெளியிட்டால் சிறப்பான விற்பனையை எட்டும் என்று ஜி-5 கருதுகிறது. இதனால்தனது மொபைல்களின்விலையை 30% வரை குறைக்க திட்டமிட்டிருக்கிறது. விலை குறைவாக இருந்தாலும் இந்த மொபைல்கள் அனைத்தும் 1.8 இஞ்ச் தொடுதிரை, மியூசிக் பிளேயர், கேமரா மற்ற தொழில் நுட்பவசதிகளையும் கொண்டிருக்கும். இத்தனை வசதிகள் கொண்ட ஜி-5 மொபைலை வெறும் ரூ.1,000 முதல் ரூ.4,500 விலையிலுமே வாங்கி விடலாம்.
ஜி-5 மொபைல்களின் படை எடுப்பினால் நோக்கியா உட்பட்ட மற்ற மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள்தயாரிப்பின் விலையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இவர்கள்10000/-விலையில் தரும் மொபைல் ஜி-5 வில் வெறும் 2000/-க்குள் வாங்கிவிடலாம்.
---------------------------------------------------------------------------------------------------------
இரு மலைகளுக்கிடையே கட்டப்பட்ட கோவில்.
_________________________________________________________________________________
நிவாரணப்பணியா? அல்லது --------?
புதுச்சேரி, கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில், 96 லட்சம் ரூபாய் செலவில் நிவாரணப் பணிகளை நித்தியானந்தா மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
‘தானே’ புயலால் புதுச்சேரி, கடலூர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏம்பலத்தில் உள்ள நித்தியானந்தா பீடத்தில் இருந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை அளித்து வருகிறோம்.
கடந்த 3ம் தேதியிலிருந்து, ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் 25 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, போர்வைகள் வழங்கப்படுகின்றன. தினந்தோறும் 40 ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உள்ளாட்சித் துறை சாலைகளை சீர் செய்வதற்கு, நாளை (இன்று) 20 ஜே.சி.பி., 20 டிராக்டர்கள் புதுச்சேரிக்கு வந்து பணிகளை மேற்கொள்ளும். நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக 25 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
மொத்த நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, 96 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, ஏம்பலத்தில் அமைந்துள்ள என் பீடத்தில் இலவச மருத்துவமனை கட்ட ஒதுக்கிய நிதியாகும். இருப்பினும், புயல் பாதிப்பிற்காக அந்த தொகை பயன்படுத்தப்படுகிறது.
இந்தாண்டு இறுதிக்குள் இங்கு இலவச மருத்துவமனை கட்டப்படும். பீடத்தின் சார்பில் 10 நாடுகளில் இருந்து 600 பேர் இங்கு வந்து, நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இன்னும் 200 பேர் வருகின்றனர்.
புயலில் சேதமடைந்த படகுகள், வீடுகள், மீன் வலைகளை கணக்கிட்டு, தேவையான உதவிகளை மேற்கொள்ள உள்ளோம். தியான நிகழ்ச்சிகள் மூலம் வரும் நிதியை கொண்டு சேவை செய்கிறோம். எங்கள் சேவையை பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மன தைரியம் கொடுத்தால் போதும் என்று கூறுகின்றனர். என்று நித்தியானந்தா செய்தியாளர்களிடம்
கூறியுள்ளார்.
நித்தியானந்தா கூறுவதை செய்தியாளர்கள் சரியாகக் கேட்டார்களா?
அவர் கூறியது நிவாரணப்பணிகளா?அல்லது நிர்வாணப்பணியா?
தானேயால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து சேவை செய்வதாக காமெடி செய்து தனது இழந்தப்பெயரை புதுப்பிக்க எண்ணியுள்ளாரா?
________________________________________________________________________
அமைச்சரின் கிண்டல்?_
அமைச்சர் விசுவநாதன் ஒரு கூட்டத்தில்பேசும்போது” தேர்தலின் போது முதல்வர் ஜெயலலிதா சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
2012ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் மின்சாரம் பற்றாக்குறை முழுமையாக போக்கப்படும். மேலும் அடுத்த மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் வகையில், மின்சாரத்தில் மிகை மாநிலமாக தமிழகம் திகழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று நகைச்சுவையாகபேசியுள்ளார்.
எங்கு நகைச்சுவையாக பேசுவது என்று அவருக்கு தெரியவில்லை.அவரது பேச்சைக் கூட்டத்தில் கேட்கும் யாராவது உண்மை என்று நம்பி இந்த ஆண்டு இறுதியில் மின்சாரத்தை எங்கே என்று கேட்டால் என்ன பதில் இவர் சொல்வார்?
முதல்வர் ஜெயலலிதாவுக்குத்தானே வீண் கெட்டப்பெயர்.
அமைச்சர் விசுவநாதன் மேடைகளில் இனிமேல் இப்படி நடக்காத விடயங்களி நடப்பதுபோல் நக்கல்,நையாண்டி,கிண்டல் செய்து பேசுவதை தவிர்க்க வேண்டும்.ஏனென்றால் மக்கள் மேடைகளில் கூறப்படும் வாக்குறுதிகளை இன்னும் நடக்கும் என நம்புகிறார்கள்.
இல்லை என்றால் இப்போது அ.தி.மு.க.ஆட்சி அமைத்து விசுவநாதன் அமைச்சராகியிருக்க இயலுமா?
.________________________________________________________________