பாடம் கற்காத மேதைகள்
இந்தியப் பிரதமரும் நவீன தாராளமய மேதாவிகளும் இந்தியப் பொருளாதாரம் தன் னுடைய மந்த வளர்ச்சி நிலையிலிருந்து மீண்டு எழுந்து வருகிறது என்று என்னதான் வாய்ச்சவடால் அடித்தாலும் அவற்றைப் பொய்ப்பிக்கக்கூடிய வகையில் உலக வங்கி வளர்முக நாடுகளுக்கு அதிலும் குறிப்பாக இந் தியாவிற்கு ஓர் எச்சரிக்கையை விடுத்திருக் கிறது. அதாவது, 2008-09ஆம் ஆண்டில் ஏற் பட்டுள்ள உலகப் பொருளாதார மந்த நிலை மையைப் போன்ற அல்லது அதைவிட மோச மான விதத்தில் ஒரு நெருக்கடியை எதிர் கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்பதே அந்த எச்சரிக்கையாகும். உலக வங்கியின் பொருளாதாரப் பிரிவுத் தலைவர் ஜனவரி 18 புதனன்று பேசுகையில், ‘‘உலகப் பொருளாதாரம் என்னும் சக்கரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளில் பொரு ளாதார மந்தம் அதிகமான அளவிலும், வளர் முக நாடுகளில் குறைந்த அளவிலும் தற் போது இருந்தபோதிலும், இவை ஒன்றை யொன்று மாற்றிக்கொள்ளும் நிலை - அதா வது வளர்முக நாடுகளில் அதிகமான அள விலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குறைந்த அளவிலும் மாறும்,’’ என்று கூறி யிருக்கிறார். இதனை லண்டன், ஃபைனான் சியல் டைம்ஸ் ஏடு வெளியிட்டிருக்கிறது. உலக வங்கியின் பொருளாதாரம் தொடர்பான முன்னறிவிப்புகள் 2011 ஜூனில் அது கூறி யதைவிட குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறை வாகவே இருந்தன. ஆனால் 2011இல் அது மிகவும் பயந்துகொண்டே அறிவித்த யூகங்கள் அனைத்தும் அநேகமாக மெய்யாகிவிட்டன. உலகப் பொருளாதாரம் 2012இல் 2.5 விழுக் காடும், 2013இல் 3.6 விழுக்காடும் வளரக் கூடும். (இவ்விரண்டு ஆண்டுகளுக்கும் 3.6 விழுக்காடு வளர்ச்சி இருக்கக்கூடும் என் பது உலக வங்கியின் யூகமாகும்.) ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தில், பொருளாதார நிலைமை 2012இல் வீழ்ச்சியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வளர்ந்த முத லாளித்துவ நாடுகளிலும் வளர்ச்சி விகிதம் 2.1 விழுக்காடு அளவிற்கே இருந்திடும். இந்தியாவில் நிதிச் சீர்திருத்தங்களை மேலும் தாராளமயமாக்குவதன் மூலம் அந்நிய நாடுகளிலிருந்து நிதி மூலதனம் ஏராளமாக இந்தியாவிற்குள் வந்து கொட்டும் என்றும் அதன் மூலம் நம் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் உந்துவிசை ஏற்படும் என்கிற ஆட்சியா ளர்களின் நம்பிக்கைகளும் உலக வங்கியின் எச்சரிக்கையை வைத்துப் பார்க்கும்போது பொய்த்துப்போகும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மூலதனத்தைக் கொண்டு வந்து கொட்டக்கூடிய அளவிற்கு பணக்கார நாடு களிடம் பணம் ஏதும் இல்லை என்று உலக வங்கி தெளிவாக உணர்ந்துள்ளது. இவ்வாறு நிலைமைகள் இருந்த போதி லும்கூட, ஐ.மு.கூட்டணி-1 ஆட்சிக் காலத் தின்போது இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்திய தாராளமய நிதிச் சீர்திருத்தங்கள் தொடர்பான சட்டங்களை, இப்போது மீண்டும் வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது கொண்டுவர ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கம் முடிவு செய்திருப்ப தாகவே தோன்றுகிறது. உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து அப்போது இந்தியா தப்பியதற்குக் காரணமே இவ்வாறு இடது சாரிக் கட்சிகள் நிதிச் சீர்திருத்தங்களைத் தடுத்து நிறுத்தியதால்தான் என்கிற நம் முடைய சொந்த அனுபவத்திலிருந்து அரசாங் கம் பாடம் கற்றுக்கொள்ள மறுப்பதோடு மட்டு மல்லாமல், இப்போது உலக வங்கி அளித் துள்ள எச்சரிக்கையையும் கண்டுகொள் ளாது, கண்மூடித்தனமாகச் செயல்பட அர சாங்கம் முன்வந்திருப்பதுபோல் தோன்று கிறது. இன்சூரன்ஸ் துறையில் உள்ள கட்டுப் பாடுகளை நீக்கி, அந்நிய நிதி மூலதனத்தை உள்ளே கொண்டுவருவதற்கும், வங்கி சீர் திருத்தங்கள் மூலமாக அந்நிய வங்கிகள் இந் தியாவில் உள்ள தனியார் வங்கிகளை கபளீ கரம் செய்வதற்கு அனுமதித்திடவும், ஓய்வூ திய நிதியங்களை தனியாரிடம் தாரை வார்க் கவும் சட்டங்களைக் கொண்டுவர விரும்புவ தோடு மட்டுமல்லாமல், ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்கள் முடிவடைந்தபின் சில்லரை வர்த்தகத்துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு வாசலைத் திறந்து விட வும் அரசாங்கம் அனைத்து விதமான நட வடிக்கைகளையும் எடுத்திருப்பது போலவே தோன்றுகிறது. அரசாங்கத்தின் இத்தகைய முடிவுகள் நாட்டில் மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகளை ஏற்படுத்தும் என்றும், மேலும் நாட்டின் பெரும்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் கடுமையாக சீர் குலைத்திடும் என்றும் நாம் இப்பகுதியில் முன்வைத்த வாதங்கள் எதற்கும் அரசாங்கம் பதிலளிக்க இதுவரை முன்வரவில்லை. சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இந்தியாவில் கொள்ளை லாபமீட்டுவதற்காக அந்நிய நிதி மூலதனம் வந்து குவிந்திடும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதே இதற்கு முக் கிய காரணமாகும். இவ்வாறு வந்து குவியும் மூலதனத்தின் மூலம் பங்குச்சந்தை வர்த்தக மும் உயரும் என்றும் அதன் மூலம் நாட்டில் ஒருசிலர் மேலும் ஒளிரக்கூடிய வாய்ப்பினை அளித்திடலாம் என்றும் அது நம்புகிறது. இத் தகைய அரசின் முடிவானது சில்லரை வர்த் தகத்திலும் கோடானுகோடி இந்திய மக்கள் வாழ்க்கையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத் தும் என்பதைப் பற்றி அது கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. ஆயினும் மன்மோகன் சிங் அரசாங்கம் எதிர்பார்க்கக்கூடிய அள விற்கு, அந்நிய மூலதனம் இந்தியாவிற்குள் வந்து கொட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே உலக வங்கியின் யூகங்களின் மூலம் தெரிகிறது. அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக அரசாங்கம் முன்வைத்திடும் வாதங்கள் அனைத்துமே அது, இந்தியாவுக்கான எரி சக்தி பாதுகாப்பு என்ற பெயரில் என்ரான் நிறு வனத்திற்கு ஏராளமான சலுகைகள் அளித்த போது அவற்றை நியாயப்படுத்தி அளித்திட்ட வாதங்களையே ஒத்திருக்கிறது. என்ரானுக்கு என்ன நடந்தது என்பது இன்று எல்லோருக் குமே தெரியும். ‘‘எல்லாம் நன்றாகவே நடக் கிறது’’ என்று நினைத்திட்ட அனைவருக் கும் பேரிடரை அது கொண்டு வந்தது. அதே போன்று, அந்நிய நேரடி முதலீட்டை சில் லரை வர்த்தகத்துறையில் அனுமதிப்பது என் பதும் விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக் கும் நலம் பயக்கும் என்று சொல்வதும் வெறும் கண்துடைப்பேயாகும். உலகப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளை எதிர்கொண்டு தடுத்து நிறுத் தக்கூடிய வல்லமை இன்றைய தினம் வளர் முக நாடுகளில் சீனத்திற்கு மட்டுமே உண்டு என்று உலக வங்கி கூறுகிறது. ஆயினும் அது வும் கூட, 2008இல் சீனாவிடம் இருந்த வல் லமை அளவுக்குத் தற்போது இல்லை என் றும் உலக வங்கி எச்சரிக்கிறது. நவீன நிதிச் சீர்திருத்தங்களை மேலும் தாராளமயமாக்குவதன் மூலம் உலகப் பொரு ளாதார மந்தத்தின் பாதிப்புகளிலிருந்து இந் தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடி யாது என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. நம் நாட்டில் நெருக்கடியை மேலும் மோசமான தாக மாற்றிடவே இது இட்டுச் செல்லும். வசதி படைத்தவர்களுக்கு வரிச் சலுகை களை வாரி வழங்குவதை விடுத்து, அத் தொகைகளை அவர்களிடமிருந்து வசூ லித்து, பொது முதலீட்டில் இட்டு, நம் நாட் டிற்குத் தேவையான சமூக மற்றும் பொரு ளாதார கட்டமைப்பு வசதிகளை உருவாக் கிட வேண்டும். அதன்மூலம் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கிட வேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்து கிறோம். நாட்டில், நாட்டு மக்களின் உள் நாட்டுத் தேவைகள் அதிகரிக்கும்போது அதன் மூலம் ஓர் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டமுடியும். மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது, 1981 இலிருந்து 22 ஆண்டுகள் தொடர்ந்து பிரதம ராக இருந்தவர், ஒரு மலேசியப் பொன் மொழியை உதிர்த்திருக்கிறார். (இதேபோன்று அனைத்து நாகரிகங்களிலும் பொன்மொழி கள் இருப்பதைக் காண முடியும்) அதாவது, ‘நீ செல்லும் பாதையைத் தவற விட்டு விட்டா யானால், தொடங்கிய இடத்திலிருந்தே மீண் டும் நடக்கத் தொடங்கு’ என்பதே அதன் பொருள். ஆயினும் உலக முதலாளித்துவம் இத்தகைய அறிவுரைகளிலிருந்து பாடம் எதுவும் கற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாய் இருக்கிறது. மாறாக, நவீன தாராள மயக் கொள்கைகள், மக்கள் நலத் திட்டங் களுக்கு அளித்திடும் சலுகைகளை மேலும் வெட்ட வேண்டும் என்று கூறிக்கொண் டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் நிலைமைகளை மேலும் மோசமாக்கி, நெருக் கடியை மேலும் அதிகமாக்கிடும். நியுயார்க் ரெவ்யு ஆஃப் புக்ஸ் சமீபத்தில், ‘‘ஜான் மேனார்ட் கீன்ஸ் போதனைகளை எப்படி நாம் மறந்திட முடியும்?’’ என்று கூறி யிருக்கிறது. 1930களில் மாபெரும் பொருளா தார மந்தநிலை ஏற்பட்ட சமயத்தில், கீன்ஸ் அவர்கள் அரசு பொது முதலீடுகளை அதிக ரித்திட வேண்டும் என்றும் அதன் மூல மாகவே முதலாளித்துவம் முழு வேலை வாய்ப்பை எய்திட முடியும் என்றும் கூறி யிருப்பதை நினைவுகூர்க. இது ஒன்றே முத லாளித்துவத்தைப் பாதுகாத்திடும். இவ்வாறு முதலாளித்துவத்தை சோசலிசம் எடுத்துக் கொள்வதிலிருந்து பாதுகாத்திட முடியும் என்பதே அவரது கூற்றாகும். நாம் கூறும் ஆலோசனைகள் எதையும் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக மன்மோகன் சிங் அரசாங்கமானது நவீன தாராளமய நிதிச் சீர்திருத்தங்களை வெறித்தனமாகப் பின்பற் றும் கொள்கையையே தொடர்கிறது. இது நம் நாட்டின் பொருளாதாரத்திற்கும், நாட்டு மக் களில் பெரும்பான்மையானவர்களுக்கும் பேரழிவினையே ஏற்படுத்திடும். முதலாளித் துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தவிர்க்க முடியாத ஒன்றே. மனித குலத்திற்கு உண் மையான விடுதலை, முதலாளித்துவ அமைப்பு முறையைத் தூக்கி எறிவதன் மூலமே வர முடியும். அதேசமயத்தில், நம் நாட்டில், ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கமானது தன்னுடைய நவீன தாராளமயக் கொள்கைகளின் திசை வழியை, பொது முதலீடுகளை அதிகப் படுத்தி, நம் நாட்டிற்குத் தேவையான உள் கட்டமைப்பு வசதிகளையும், பெரிய அளவில் வேலைவாய்ப்பையும் உருவாக்கக்கூடிய விதத்தில், மாற்றியமைத்திட ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கத்திற்குக் கடும் நிர்ப்பந் தங்கள் அளித்திட வேண்டியது அவசியம். அதன் மூலம் மட்டுமேதான் நாம் நம் மக் களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திட முடியும். தமிழில்: ச.வீரமணி[தீக்கதிர்] |
______________________________________________________________________________
_________________________________________________________________________________