புலிகளை அழித்தது எப்படி?
இவ்வாறு தான் நடக்கும் என இலங்கை இராணுவம் முன்கூட்டியே கணக்குப் போட்டுள்ளது. இதனால் பல தடவைகள் புலிகள் நடத்திய சில சந்திப்புகள் மற்றும் அச்சந்திப்பில் கலந்துகொண்ட தலைவர்கள் அச் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் என பலவற்றை இராணுவம் அறிந்துள்ளது. கடலில் அமைக்கப்பட்ட தற்காலிகத் தளத்தில் பல தமிழர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு டிரான்ஸ்மீட்டர்கள் ஒவ்வொன்றும் அனுப்பும் உரையாடல்களை உடனடியாகவே மொழிபெயர்ப்புச் செய்யும் வசதிகளையும் இலங்கை இராணுவம் ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தையும் புலிகள் கண்டு பிடிக்கும்போது இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது. எந்த மரத்தில் அல்லது எந்தப் புதரில் எந்தவகையாக டிரான்ஸ்மீட்டர்கள் இருக்கும் என்று அதனைத் தேடியழிப்பதே பெரும்பாடாகப் போனது என இறுதிநேரத்தில் அங்கிருந்து தப்பிவந்த புலிகளின் உறுப்பினர் ஒருவர் அதிர்வுச் செய்தியாளருக்குத் தெரிவித்தார்.
மொத்தத்தில் நடந்து முடிந்த போரானது ஹை-ரெக் எனப்படும் அதிநவீன தொழில் நுட்ப்பத்தைக் கையாண்டு நடாத்தப்பட்ட யுத்தமாகும். இதனை வைத்துப் பார்க்கும்போது பொதுமக்கள் எங்கிருந்தார்கள் புலிகள் எங்கே இருந்தார்கள் என்பது இலங்கை இராணுவத்துக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்திருக்கும். இருப்பினும் அவர்கள் வேண்டும் என்றே பொதுமக்களைக் குறிவைத்துள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
நன்றி: அதிர்வு
_________________________________________________________________________________
லோக்பால் மசோதா இன்றைக்காவது நிறைவேறிடுமா?
மழையோடு விளையாடி.....