மருத்துவர்களுக்கு தேவை மருத்துவம்?
டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் கவனக்குறைவால், ஆண்டுக்கு, 10 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கு யார் பொறுப்பேற்பது. ஆனால், தவறுக்கு தண்டனை கொலை அல்ல. அதே வேளையில், மருத்துவ துறையினரும் பொறுப்புடன் நடக்க வேண்டும். அரசு மருத்துவர்கள், கன்சல்டன்டாக, தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லலாம். ஆனால், தனியாக கிளினிக் நடத்தக் கூடாது. ஆனால் சட்டத்தை மீறி அதிகமான அரசு மருத்துவர்கள் மருத்துவமனையை தனியாக நடத்துகிறார்கள்.இதையும் அரசு கண்டு கொள்வதில்லை.இது மருத்துவர்களுக்கு உள்ள பணத்தாசையைத்தான் காட்டுகிறது.
“ இதுவரை, இச்சட்டத்தின் கீழ், யாரும் தண்டிக்கப்படவில்லை. இச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மற்றவர்களின் உயிர் காக்கும் டாக்டர்களின் உயிருக்கு, சமூக விரோதிகளிடமிருந்து, பாதுகாப்பு அளிக்க வேண்டும். அரசு ஏன் செய்யவில்லை?”என்று இந்திய மருத்த்வர் சங்க மாநிலத்தலைவர் தங்கவேலு கூறியுள்ளார்.
அதேபோல் சட்டம் அரசு மருத்துவர்கள் தனியே பணத்துக்காக கிளினிக் நடத்தக்கூடாது என்றும் கூறியுள்ளது.அதை ஏன் மருத்துவர்கள் கண்டுகொள்வதில்லை?
சேதுலட்சுமி செய்ததவறு சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதை கடுமையாக கண்டிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
ஆனால்,அரசு விதிகளின்படி, சேதுலட்சுமி, தனியாக கிளினிக் நடத்தவோ, தனியாக பிராக்டீஸ் பண்ணவோ கூடாது. அவர் தனியாக மருத்துவம் செய்யாமல் இருப்பதற்காக, 2,000 ரூபாய் அலவன்ஸ் பெற்று வருகிறார். விதிப்படி அவர், தனியாக பிராக்டீஸ் செய்யக் கூடாது. "அலவன்ஸ் வேண்டாம்' என எழுதி கொடுத்துவிட்டு, தனியாக பிராக்டீஸ் செய்யலாம். சேதுலட்சுமி அப்படி எழுதி கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவரின் கணவர் கல்லூரி பேராசிரியர்,மகன் கேரளாவிலும் மகள் வெளிநாட்டிலும் மருத்துவர்களாக உள்ளனர்.பணத்துக்கு குறைவில்லை.ஆனாலும் அருகில் உள்ளவர்களும் அவரிடம் சிகிச்சை பெறுபவர்களும் கூறுவதைப்பார்த்தால் சேது லட்சுமி சிகிச்சைக்கு அதிக கட்டணம் கேட்டு வந்ததுடன் அதை பெறுவதிலும் கண்டிப்பு காட்டி வந்துள்ளார்.
அதுதான் அவரின் உயிருக்கே கேட்டை விளைவித்து விட்டது.கொலை செய்த வன் ஏற்கனவே கொலை முயற்சி வழக்குகளில் சிக்கியுள்ள்வன்.
ஆனாலும் சேது லட்சுமியிடம் தொடர்ந்து குடும்பத்துடன் சிகிச்சை பெற்றுவருபவன்.மனைவி குழந்தை உண்டானது முதல் அவரிடம் காண்பித்து அவர் கூறியபடி சிகிச்சை பெற்று ஸ்கேன் எடுத்து பணத்தை செலவிட்டு வந்துள்ளான்.ஆனால் குழந்தை இறந்து விட்டது .அந்த சோகம் மனைவியும் சில நாட்களி உயிருக்கு போராடுகையில் சேதுலட்சுமியிடமே காண்பித்து வந்துள்ளான்.
சம்பவத்தன்று சேதுலட்சுமி உனது மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார் ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்க்கக் கூறியுள்ளார்.ஆனால் தனக்க தர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு மனைவியை அழைத்து செல்லக்கூறிவிட்டாராம்.கொலை செய்தவன் எவ்வளவோ கேட்டும் ஒன்றும் அசைந்து கொடுக்காததால் அவன் தெரிந்தவர்களிடமும்,வட்டிக்கும் கடன் வாங்கி மனைவியை ஆம்புலன்சில் அழைத்து சென்றுள்ளான்.மனைவி உணர்வின்றி இருப்பதை பார்த்து டாக்டரிடம் கேட்டதற்கு மயக்கம் என்றும் தானும் உடன் வருவதாக ஆம்புலன்சில் ஏறி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.இவ்வளவும் ஒருமணி நேரத்தில் நடந்துள்ளது.அந்த பெரிய மருத்துவமனை சென்றதும் அங்குள்ள மருத்துவர் பென்ணின் உடலைப்பார்த்துவிட்டு உடன் வந்த மருத்துவரிடம்”இந்த நிமிடம் வரை தான்தான் மருத்துவம் பார்த்ததாகவும் தனது பொறுப்புதான் எனவும்{/}எழுதி வாங்கிவிட்டு உள்ளே செர்த்து உடனே பரிசோதித்து விட்டு இப்பெண் இறந்து இரண்டு மணி நேரமாகிவிட்டது [?] என்ற அதிர்ச்சியை அவளது கணவருக்கு த்ந்து விட்டு மருத்துவமனை கட்டணத்தை செலுத்திவிட்டு செல்ல குறி வைட்டார்.
இந்த இடத்தில் நீங்களாக இருந்தால் என்ன மனநிலையில் இருப்பீர்கள்?
அதன் பின் அவள்கணவன் சேது லட்சுமியை மனைவி,குழந்தைகளக்கொன்ற உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று எச்சரித்து விட்டு சென்றுவிட்டான்.அவன் எச்சரிக்கையில் பயந்து போன மருத்துவர் உடனே காவல்நிலையத்தில் புகார் தந்துவிட்டார்.[குற்றம் உள்ள நெஞ்சு]
வழக்கம் போல் நமது காவல் துறையினர் அதை கண்டு கொள்ளவில்லை.
இன்று அந்த அலட்சியம் சேது லட்சுமியின் உயிரைப்பறித்து விட்டது.
கிட்டதட்ட ”ரமணா’ படப்பாணியில் பணம்பறிக்கப்பட்டுள்ளது குற்ற வாளியிடம் இருந்து.ஆனால் இதில் குற்றவாளி பணத்தை திருப்பி பறிக்க வில்லை .மருத்துவரின் உயிரை பழிக்கு பழியாக்கிவிட்டான்.அவன் செய்தவை நியாயம் என்றோ?கொலை பரிகாரம் என்பதற்கோ இவ்வளவு நடந்தநிகழ்வுகளை இங்கு சுட்டிகாட்டவில்லை.இதை எழுதும் நானும் சம்பவ இடமான தூத்துக்குடியைச்சேர்ந்தவன்.அதுவும் அப்பகுதியில் அடிக்கடி செல்பவன் என்பதால் நேரில் அப்பகுதியில் விசாரித்தவைகளை எழுதுகிறேன்.
காரணம் .இந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு நமது சேவை மனப்பான்மை மருத்துவர்கள் நடத்தும் வேலை நிறுத்தங்கள் தேவை இல்லை என்றும்,அதனால் நோயர்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களும் தேவையற்றவை.இவ்வளவு போராடும் டாக்டர்கள் பணத்துக்காக உயிரற்ற உடல்களை வைத்து வி[லை]ளையாடுவதை இனி நிறுத்துவோம்.பணத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் மனிதர்கள் நலத்தையும் கவனத்தில் கொள்வோம் என்ற உறுதி மொழியையும் எடுப்பார்களா?
இரண்டு ரூபாய் அனாசின் கடையில் வாங்கிப்போட்டால் குணமாகக்கூடிய சாதா தலைவலிக்கு கூட ஸ்கேன்,இ.சி.ஜி.என்று ஆயிரக்கணக்கில் செலவு வைத்து பின் தெரியாத மொழியில் அதே அனாசின் குடும்ப மாத்திரையை கொடுப்பதும் நிற்க்குமா? அதனால் நோயாளி பணத்தையும் இழந்து-தனக்கு ஏதோ பெரிய வியாதிதான் வந்து விட்டதோ?என்று மன உளைச்சலுக்கும் ஆளாகிவிடுவதை கவனத்தில் கொண்டு சிகிச்சை அளிப்பார்களா?
இவை எல்லாம் மருத்துவர் சேதுலட்சுமியின் கொலை ஏற்படுத்திய மன அலைகள்தான்.மருத்துவர் சேதுலட்சுமியை குறைகாணவேண்டும் என்றோ கொலைகாரன் செயலை நியாயப்படுத்தவோ பதிவிட வில்லை.
மருத்துவர்கள் இக்கொலையை வைத்துக்கொண்டு ஆடும் போராட்டங்கள்.யாரை நோக்கி? வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றதுடன் விடாமல்.ஆர்ப்பட்டங்கள்-வேலை நிறுத்தங்கள் செய்வதால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? என்று பார்த்ததின் விளைவுதான் இது.நோயுற்றோர்க்கு சேவை என்பதில் இருந்து விலகி பணத்துக்காக மட்டும் என்றாகிப்போவதின் எதிர்விளைவுகள்தான் இது போன்ற சம்பவங்கள்.அதை தாங்கள் தான் சரி செய்து கொள்ள வேண்டும்.போராட்டமோ,அரசோ மற்றையரோ அல்ல என்பதை இந்த[மருத்துவம்]படிதவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வன்மையாக கொலை காரனை கண்டித்து போராடுவதால் அவன் தனது கொலையை வாபஸ் வாங்கி அதனால் சேதுலட்சுமி உயிர் வந்து விடுமா?
மருத்துவர் பாதுகாப்பு சட்டம் ஏற்றினால் மருத்துவர்கலை யாருமே கொலை செய்ய இயலாதா? அது அவர்கள் கையில்தான் உள்ளது.சாலையில் சும்மா நடந்து போகிறவரையே ஆள்மாறாட்டத்தில் போட்டுத்தள்ளிவிட்டு “சாரி” சொல்கிற காலகட்டத்தில் இருக்கிறோம் நாம்.
________________________________________________________________________________