​பழைய ஓய்வூதியத் திட்டம்

 பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியாது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பேசியதாக கடந்த இரு தினங்களாக செய்திகள் பரவி வந்தன. 

இதுகுறித்து கூட்டணிக் கட்சிகளே குரல் எழுப்பி வரும் நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.

​பழைய ஓய்வூதியத் திட்டம்

undefined

2003ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சிபிஎஸ் (Contributory Pension Scheme) எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.


பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நெடுநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து முந்தைய ஆட்சிக்காலங்களிலும் தமிழ்நாடு அரசிடம் அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அரசு ஊழியர்களின் பெருவாரியான ஆதரவு திமுகவுக்கு கிடைத்தது.


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த இரு தினங்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பும், அதிருப்தியும் ஏற்பட்டது.


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என நிதியமைச்சர் கூறுவது அதிர்ச்சியளிப்பதாகவும், இதில் முதல்வர் தலையிட்டு உறுதிசெய்ய வேண்டும் எனவும் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.


​நிதியமைச்சர் பிடிஆர் உண்மையாகவே பேசியது என்ன?

undefined

சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களை பற்றி பேசினார். இறுதியாக, பழைய பென்சன் திட்ட விவகாரத்தில் முதல்வரும், அவை முன்னவரும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுத்துவேன் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பேசினார்.

மேலும் இவ்விவகாரம் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில், “தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவரை எழுப்பவே முடியாது. இது எதிர்க்கட்சிகளுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமமாக பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடுக்கும் முடிவு

undefined

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதியானது என்பது உறுதியாகிவிட்டது. இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்.

நடைமுறை சிக்கல்களைக் எடுத்துச் சொன்னால் எதிர் கட்சிகளைப் போல வே கூட்டணிக் கட்சிகளும் நடந்து கொள்கிறார்கள் எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

_____________________________

கடன் வாங்கலையோ கடன்.

தற்போது கடன் வழங்கும் மொபைல் ஆப்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இந்த மொபைல் ஆப்பை நமது மொபைல்போனில் பதிவிறக்கம் செய்தாலே போதும். 

வெறும் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி விவரத்தைக் கொடுத்தாலே கேட்கும் கடனைக் கொடுத்துவிடுவார்கள்.

ஆனால் அது நம்மை இந்து வட்டியை விட மோசமான நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும்.

 சமீபத்தில் மும்பையில் கடன் வழங்கும் மொபைல் ஆப் ஒன்றைப் பதிவிறக்கம் செய்த நபர், கடன் வாங்காமலேயே கடன் பெற்றதாகக் கூறி கடனைத் திருப்பிச் செலுத்தும்படி மர்ம நபர்கள் சித்ரவதை செய்தனர். இதனால் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார்.

தற்போது மும்பை மலாடு பகுதியைச் சேர்ந்த அனுராக் சிங் (27) என்ற வாலிபர் ஃபேஸ்புக்கில் வந்த கடன் கொடுக்கும் மொபைல் ஆப் தொடர்பான ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். உடனே Hedisy Loan App என்ற மொபைல் ஆப்பை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்தார்.

அதில் கேட்டபடி ஆதார் கார்டு, பான் கார்டு விவரங்களைப் பதிவேற்றம் செய்தார். அதோடு தனது வங்கி விவரங்களைப் பதிவிட்டு தனது மொபைலில் இருக்கும் தொடர்பு எண்களைப் பார்க்க அனுமதியும் கொடுத்திருந்தார். ஆனால் கடன் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. ஒரு சில நாள்களில் சிங் வங்கி கணக்குக்கு 3,805 ரூபாய் கிரெட் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது.

உடனே அதிர்ச்சியடைந்த சிங் அந்தப் பணத்தை திருப்பிக் கட்டிவிடத் திட்டமிட்டார். அதற்குள் பணம் வங்கிக்கு வந்து 6 நாள்கள் ஆகிவிட்டன. உடனே 6 நாள் வட்டி எவ்வளவு என்று கேட்டதற்கு 7 ஆயிரம் என்று போனில் பேசிய நபர் தெரிவித்தார்.

 உடனே எப்படி இவ்வளவு வட்டி என்று கேட்டதற்கு, போனில் பேசிய நபர் கண்டபடி திட்டியதோடு, உனது மொபைல் போனில் இருக்கும் தொடர்பு எண்களுக்கு மார்பிங் செய்த போட்டோக்களை அனுப்பி, உனது பெயரைக் கெடுத்துவிடுவேன் என்று மிரட்டினார். 

இது குறித்து சிங் கூறுகையில், ``கேட்காமல் கொடுத்த 3,805 ரூபாய் கடனுக்கு 7 ஆயிரம் வட்டி கட்டச் சொல்லி மிரட்டினர். 

அதோடு எனது நண்பர்களுக்கும் நான் கடன் எடுத்துவிட்டு கட்டவில்லை என்று கூறி மெசேஜ் அனுப்பிவைத்தனர். இதனால் அவர்கள் போன் நம்பரை பிளாக் செய்தனர். 

அதோடு இது குறித்து போலீஸிலும் புகார் செய்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

கடந்த மாதம் மும்பை அந்தேரியைச் சேர்ந்த ஸ்வரூப் (38) என்பவர் Crazy Cash என்ற மொபைல் ஆப்பைப் பதிவிறக்கம் செய்தார். ஆனால் கடன் பெறவில்லை. 

கடன் பெற்றதாக மொபைல் போனில் தொடர்ச்சியாக மிரட்டல் வந்தது. இது தொடர்பாக கடந்த மாதம் 16-ம் தேதி போலீஸில் புகார் செய்தார். ஆனால் இன்னும் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை.

 பாந்த்ராவைவ் சேர்ந்த சோஹைல் ஷேக் என்பவர் மொபைல் ஆப் மூலம் 3,500 ரூபாய் கடன் பெற்றார். ஆனால் அதற்கு 2,500 வட்டி கட்டச்சொல்லி மிரட்டல் வந்தது. 

இதனால் இது குறித்து கடந்த 3-ம் தேதி போலீஸில் புகார் செய்துள்ளார். இது போன்ற புகார்கள் அடிக்கடி மும்பை போலீஸாருக்கு வந்து கொண்டேயிருக்கின்றன. 

மொபைல் ஆப்பில் கடன் பெற்ற 19 வயதுப் பெண்ணுக்கு மார்பிங் செய்த போட்டோவை அனுப்பியது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். 

அதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் கர்நாடகாவைச் சேர்ந்த கடன் வசூலிப்பு ஏஜென்ட் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். பெரும்பாலான புகார்களில் கடன் கேட்டு மிரட்டும் ஏஜென்ட்டுகள் கைதுசெய்யப்படுவதில்லை.

இதனால் காவல்துறையும் கண்டு கொள்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.

--------------+++-------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?