சமாதி மர்மம்

 வலைதளங்களைத் திறந்தாலே, சாமியார் நித்தியானந்தா தொடர்பான செய்திகள்தான் பரபரக்கிறது. 

அவர் மரணமடைந்துவிட்டதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, நித்தியானந்தாவின் சில போட்டோக்கள் அவரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. `திரும்ப வந்துட்டேனு சொல்லு' என அவரே கைப்பட எழுதியதாக ஒரு கடிதமும் வெளியானது.

 'தன்னுடைய தியான வகுப்புக்கு ஆள் கிடைக்காததால்தான், தான் இறந்துவிட்டதாக நித்தியானந்தாவே ஒரு வதந்தியைப் பரப்பி விளம்பரம் தேடுகிறார்' என நித்தியானந்தாவுக்கு எதிர்முகாமில் இருப்பவர்கள் சமூக வலைதளங்களில் எதிர்கருத்தை பதியவைக்கிறார்கள்.

 'உண்மையிலேயே நித்தியானந்தாவுக்கு என்னதான் ஆச்சு?', பரபரவென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள், பெங்களூரு, திருவண்ணாமலை, மதுரையிலுள்ள அவரின் ஆசிரமவாசிகள் எனப் பலரிடமும் பேசினோம்.


நித்தியானந்தா

"நித்தியானந்தா தினமும் காலை 3:40 மணிக்கு இமயமலையில் தான் கற்று வந்த தியானத்தை தொடங்கி, நடுவில் சில மணிநேரம் சமாதி நிலையிலிருந்து வெளியே வந்து எங்களுடன் இணையம் வழியாகப் பேசுகிறார். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தியான வகுப்பு தொடர்பான திட்டமிடல்களில் விவாதிக்கிறார். 

பிறகு, மீண்டும் சமாதி நிலைக்குச் செல்பவர் இரவு முழுவதும் தியான நிலையில் இருக்கிறார். அதிகாலை 3 மணிக்கு குளித்துவிட்டு மீண்டும் தியானத்தை தொடர்கிறார்.

 இதுபோல, தொடர்ந்து 21 நாள்கள் தியானத்தை மேற்கொள்ளவிருக்கிறார் நித்தியானந்தா.

அவருக்கு கால பைரவர் மீது அளப்பரிய நம்பிக்கை உண்டு. அவரை நோக்கி வைக்கப்படும் தியானமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். 

இந்தக் காலத்தில் வேப்பிலை, கிராம்பு உள்ளிட்ட சில மூலிகைகள் கலந்த சாறை மட்டுமே உட்கொள்வது நித்தியானந்தாவின் வழக்கம். தியானத்தின் மூலமாக மனித உடலை நீண்ட ஆண்டுகளுக்கு தளர்வடையவிடாமல் வைத்திருக்கும் சூட்சமத்தை ஏற்கெனவே நித்தியானந்தா கண்டறிந்துள்ளார். 

கடல் பிரயானங்களால், அவரது உடல், மனம் இரண்டும் சோர்வடைந்தது நிஜம்தான். இந்த தியானப் பயிற்சி விரைவில் முடிந்தவுடன், பக்தர்களுடன் அவர் கலந்துரையாடும் நிகழ்ச்சி வழக்கம் போல தொடரும். அவர் மரணிக்கவில்லை. விளம்பரத்திற்காக நடிக்கவும் இல்லை" என்றனர் விரிவாக.

இதனிடையே நித்தியானந்தா ஆசிரமத்திற்கு பல கோடி அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வந்ததாகக் கூறப்படுகிறது. அதில் ஏற்பட்ட பிரச்னைதான் இந்த சமாதிநிலை நாடகமெல்லாம் என்கிறது நித்தியானந்தாவுக்கு நெருக்கமாக இருந்து பிரிந்தவர்கள் தரப்பு. 

நம்மிடம் பேசிய நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்கள் சிலர், "இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, பல கோடி அமெரிக்க டாலர் பணத்தை தங்கக் கட்டிகளாக மாற்றிக் கொண்டார் நித்தியானந்தா. 

துபாய், இஸ்தான்புல் வழியாக பெருமளவில் இந்தத் தங்கக் கட்டிகள் கரீபிய தீவு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சர்வதேச வங்கியில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன. 

பேருந்து கட்டணம் உயர்வா?

அந்த வங்கிக் கணக்கின் பாதுகாவலர்களாக, அமெரிக்காவைச் சேர்ந்த தன் சீடர்கள் இருவரை நியமித்த நித்தியானந்தா, மாதம் ஒருமுறை அந்த தங்கக் கட்டிகளை ஆய்வு செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அவர்கள் மூலமாகத்தான் கைலாசாவை சில ஆப்பரிக்க நாடுகள் அங்கீகரிப்பதற்கு உண்டான வேலைகள் நடந்தன. 

இதற்காக வறுமையில் வாடும் சில மேற்கு, மத்திய ஆப்பரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை அணுகிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையே, ஐ.நா அரங்கில் 'கைலாசா' பிரதிநிதியைப் பேச வைத்தோம், அமெரிக்க மேயர்களிடமிருந்து வாழ்த்துக் கடிதங்களைப் பெற்றிருக்கிறோம் என அந்த அமெரிக்க சீடர்கள் இருவரும் தனித்தனியாக 'பில்' போட்டுக் கொண்டனர். 

தான் ஏமாற்றப்படுவது தெரிந்தும், தனக்கு வேறு வழியில்லாததால் அவர்களை நம்பியே நித்தியானந்தா இருக்க வேண்டியதாகிவிட்டது. 

சமீபத்தில், கரீபிய தீவிலுள்ள தங்கக் கட்டிகளை தங்களால் ஆய்வு செய்ய முடியவில்லை என அந்த அமெரிக்க சீடர்கள் நித்தியானந்தாவிடம் கை விரித்திருக்கிறார்கள். 

பல கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய அந்த தங்கம் தன் கையைவிட்டுப் போய்விடுமோ என்கிற பதற்றம் நித்தியானந்தாவைத் தொற்றிக் கொண்டது.

தனக்குத் தெரிந்த சில இடைத்தரகர்கள் மூலமாக அந்த வங்கியைத் தொடர்பு கொண்டபோது, 'தங்கத்தையெல்லாம் கடந்த மாதமே எடுத்துச் சென்றுவிட்டனர்' என்கிற பதில்தான் கிடைத்திருக்கிறது. இதில்தான் நிலைகுலைந்து போயிருக்கிறார் நித்தியானந்தா. 

அல்பேனியாவைச் சேர்ந்த சில மாஃபியாக்கள் கூட்டணியுடன், அந்த தங்கக் கட்டிகள் அனைத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் அமெரிக்க சீடர்கள். இதில், கேரளாவைச் சேர்ந்த சிலரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். தற்போது அந்த சீடர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே யாருக்கும் தெரியவில்லை.




நித்தியானந்தா

பணத்தின் மீது நித்தியானந்தாவுக்கு ஆசை இல்லை. கிலோ கணக்கில் நகைகளை அள்ளிப் போட்டுக் கொள்வதுகூட மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தானே தவிர, அவற்றின் மீதுகூட நித்தியானந்தாவுக்கு விருப்பம் இருந்ததில்லை. 

ஆனால், தன்னுடைய நாட்டைக் கட்டியமைப்பதற்கு வைத்திருந்த தங்கம் மாயமானது தெரிந்தவுடன், என்ன செய்வது என்றே அவருக்குப் புரியவில்லை. தனக்குத் தெரிந்த சில ஐரோப்பிய துணைத் தூதர்கள் மூலமாக, அல்பேனிய மாஃபியாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைந்தார். அதுவும் கைகூடவில்லை. இப்படியே உட்கார்ந்திருந்தால் வேலைக்கு ஆகாது என்பது தெரிந்தவுடன்தான், தியானப் பயிற்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். 

அந்த பயிற்சி வகுப்புக்கு முன்னதாக, 'நித்தியானந்தா மரணமடைந்துவிட்டார்' என்கிற வதந்தியைக் கிளப்பினால், தன்னைப் பார்ப்பதற்கு நிறைய பேர் பயிற்சி வகுப்பில் இணைவார்கள், அதன்மூலமாக கல்லாவை நிரப்பிக் கொள்ளலாம் என்பதே நித்தியானந்தாவின் திட்டம். அந்தத் திட்டம்தான் 'சமாதி நிலை' என்கிற ரூபத்தில் அரங்கேறுகிறது" என்றனர் விலாவரியாக.

நித்தியானந்தாவின் பேச்சுதான் அவ்வப்போது அதிரடிக்கும். இப்போது, அவரைச் சுற்றி நடப்பதும் அதிரடி சரவெடியைக் கிளப்புகிறது.

அவரை இந்தியாவுக்கு ப் பிடித்துக் கொண்டுவந்தால் மட்டுமே எல்லா  சர்ச்சைகளுக்கு எல்லாம் விடை கிடைக்கும்.

-----------------------------------------------------------------------------

கோதுமையின் விலை  வரலாற்று உச்சத்தை ரா எட்டியது, 

கோதுமையின் விலை திங்களன்று புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது, 

கோடை கால வெளியில் உற்பத்தியை பாதித்ததால் பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்ய இந்தியா முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து ஐரோப்பிய சந்தை துவங்கியதும் ஒரு டன்னுக்கு 435 யூரோ-வாக ($453) விலை உயர்ந்ததுள்ளது.


கோதுமையின் விலை திங்களன்று புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது, கோடை கால வெளியில் உற்பத்தியை பாதித்ததால் பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்ய இந்தியா முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து ஐரோப்பிய சந்தை துவங்கியதும் ஒரு டன்னுக்கு 435 யூரோ-வாக ($453) விலை உயர்ந்ததுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போர் கோதுமை உற்பத்தியில் பெரியது அளவிலான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும் சேர்ந்து உலகின் மொத்த கோதுமை ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதி 8.14 பில்லியன் டாலராக இருந்தது, உக்ரைன் சுமார் 3.11 பில்லியன் டாலர் கோதுமையை ஏற்றுமதி செய்தது. தற்போது இரு நாடுகளுக்கு மத்தியிலான போரின் காரணமாகக் கோதுமை உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு உருவாகி விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்ட பட்டியலில் கோதுமையைச் சேர்த்து உள்ளது. 

இந்தத் தடை மூலம் இந்திய மக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அண்டை நாடுகளுக்கும், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் உதவி செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையிலும், தத்தம் அரசின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்றுமதிகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் முதன்முறையாக இந்தியாவில் இருந்து 50,000 டன் கோதுமையைத் துருக்கி ஆர்டர் கொடுத்துள்ளது. 

இது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குப் பயனளிக்கும் அதே வேளையில், இது நாட்டில் கோதுமை விலையை மேலும் அதிகரிக்கும் நிலை உருவானது.



----------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?