50 கோடிப்பூ
கேரளாவில் புதிய வகை காய்ச்சல் ஒன்று பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் கடந்த சில நாள்களாக குழந்தைகள் அதிகளவில் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பரிசோதித்ததில், தக்காளி காய்ச்சல் பாதிப்பு இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுவதால் தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டது; தக்காளிக்கும் தக்காளி வைரஸுக்கும் தொடர்பு இல்லை.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி அம்மாநில சுகாதாரத் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
கொல்லம் மாவட்டத்தில் நடத்திய கணக்கெடுப்பில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
தக்காளிக்கும் தக்காளி வைரஸுக்கும் தொடர்பு இல்லை
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் கூறியது:-
அதற்கு பதிலளித்த அவர், கேரளா கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம். சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுவதால் தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டது; தக்காளிக்கும் தக்காளி வைரஸுக்கும் தொடர்பு இல்லை. இருந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------
50கோடிகள் ரூபாய்,1000 பவுன்கள் நகைக்காக படுகொலை -
கார் ஓட்டுநரே சதி
சென்னையில் வயதான தம்பதியினரைக் கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கார் ஓட்டுநர் உள்பட இருவரை காவல்துறை கைது செய்துள்ளனர். ' வீட்டில் வேலைக்காக ஆட்களை தேர்வு செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம், நகைக்காக இந்தக் கொலை நடந்துள்ளது' என்கிறது காவல்துறை.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள துவாரகா மகாலட்சுமி தெருவில் வசித்து வந்தவர் 66 வயதான ஆடிட்டர் ஸ்ரீகாந்த். இவருக்குச் சென்னையில் பல்வேறு இடங்களில் சொத்துகள் உள்ளன. இவரது மகள் சுனந்தா அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீகாந்தும் இவரது மனைவி அனுராதாவும் மகளின் பிரசவத்துக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றிருந்தனர்.
இதன்பின்னர், நேற்று (7 ஆம் தேதி) துபாய் வழியாக சென்னை வந்துள்ளனர்.
இவர்களை அழைத்துச் செல்வதற்காக கார் ஓட்டுநர் கிருஷ்ணா வந்துள்ளார். ஆனால், மயிலாப்பூர் வீட்டுக்கு ஸ்ரீகாந்த் தம்பதியினர் வரவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதனால் பதற்றமடைந்த ஸ்ரீகாந்தின் மகள் சுனந்தா, அடையாறில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்து, 'பெற்றோர் வந்துவிட்டார்களா?' எனப் பார்க்குமாறு கூறியுள்ளார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்ததால் அருகில் இருந்தவர்களின் உதவியோடு கதவை உடைத்துப் பார்த்துள்ளனர்.
அங்கு ஸ்ரீகாந்த் தம்பதியினர் இல்லை. ஆனால், பொருள்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்துள்ளனர். இதையடுத்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு சுனந்தா கூறியுள்ளார். அங்கு கொடுக்கப்பட்ட புகார் மனுவில், 'கார் ஓட்டுநரான கிருஷ்ணா நேபாள நாட்டைச் சேர்ந்தவர். பணம், நகைக்காக ஸ்ரீகாந்த் தம்பதியைக் கடத்திச் சென்றிருக்கலாம்' எனத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, துணை ஆணையர் திஷா மிட்டல், உதவி ஆணையர் கவுதமன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
கார் ஓட்டுநர் கிருஷ்ணா
அப்போது, விமான நிலைய சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தபோது கார் ஓட்டுநர் கிருஷ்ணாவுடன் வயதான தம்பதியினர் காரில் ஏறிச் செல்வது பதிவாகியுள்ளது. மேலும், மாமல்லபுரம் அருகில் உள்ள சூளேரிக்காடு என்ற இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த்தின் பண்ணை வீட்டிலும் மயிலாப்பூர் வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர்.
கூடவே, கிருஷ்ணாவின் செல்போன் எண்ணை வைத்து பின்தொடர்ந்ததில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே செல்வது தெரியவந்துள்ளது. அங்குள்ள சோதனைச் சாவடியில் வைத்து கிருஷ்ணாவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவருடன் இருந்த ரவி என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதில் பத்தாண்டுகளாக ஸ்ரீகாந்தின் கார் ஓட்டுநராக கிருஷ்ணா பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவை மயிலாப்பூர் வீட்டில் வைத்துக் கொலை செய்த பின்னர், ஈசிஆர் சாலையில் உள்ள சூளேரிக்காடு பண்ணை வீட்டிலேயே புதைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்களிடம் இருந்து 8 கிலோ தங்கம், 50 கிலோ வெள்ளிப் பொருள்கள், 10 வைர மூக்குத்திகள், பிளாட்டினம் வளையல்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகவும் கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்தார்.
இதில், மயிலாப்பூரில் வயதான தம்பதியினர் கொல்லப்பட்ட பின்பு சடலத்துடன் உத்தண்டி சுங்கச்சாவடியை கிருஷ்ணாவும் அவரது நண்பரும் இன்னோவா காரில் கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
உத்தண்டியில் இருந்து சூளேரிக்காட்டில் உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் இருவரின் உடல்களைப் புதைத்த பின்னர் ஆந்திரா வழியாக நேபாளத்துக்குத் தப்பிச் செல்லும் வழியில் இவர்கள் பிடிபட்டதாகவும் காவல்துறை கூறுகிறது. இதையடுத்து, பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட ஸ்ரீகாந்த் தம்பதியினர் உடல்களைத் தோண்டியெடுக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பின் ஸ்ரீகாந்த் தம்பதியினரின் சடலத்தைக் கைப்பற்றி உடற் கூராய்வுக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
'' நகைக்காகத்தான் இந்தப் படுகொலை நடந்துள்ளது. கார் ஓட்டுநராக வேலைக்குச் சேர்ந்தவர் சரியில்லை.
பணம், நகைக்கு ஆசைப்பட்டு இதனைச் செய்துள்ளனர். இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
----------------------------------------------------------------------------