சனி, 14 மே, 2022

2100 ஏக்கர் முறைகேடு

 தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே, தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி எனும் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்களுக்கு சொந்தமான சுமார் 2,117 ஏக்கர் விவசாய நிலத்தை, புதுக்கோட்டை சார்பதிவாளர் மோகன் தாஸ், முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இந்த நிலத்தில் 600-க்கும் மேற்பட்ட தனிநபர் வீடுகள், 800-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான விவசாயப் பட்டா நிலங்கள், கோயில்கள், குளங்கள், அரசு அலுவலகங்கள், காற்றாலைப் பண்ணைகள் போன்ற உள்கட்டமைப்புகள் உள்ளன.

வடசிலுக்கன்பட்டியில் 1043.37 ஏக்கரும், தெற்கு சிலுக்கன்பட்டியில் 1073.56 ஏக்கரும் தனக்குச் சொந்தமாக இருப்பதாகக் கூறி, திருநெல்வேலியைச் சேர்ந்த டி.எஸ்.செந்தில் ஆறுமுகம் சமீபத்தில் அந்த நிலத்தை கோவையைச் சேர்ந்த அன்புராஜ் கிஷோருக்கு விற்க முயன்றதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவலறிந்து  ஊர்மக்கள்,  புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த, தமிழக பதிவுத் துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டார்.
அதன்பேரில், திருநெல்வேலி டிஐஜி கவிதா ராணி மேற்பார்வையில், தூத்துக்குடி ஏஐஜி பால்பாண்டி விசாரணையைத் தொடங்கினார்.

இதில், விவசாய நிலங்கள் முறைகேடாக தனிநபர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து புதுக்கோட்டை சார் பதிவாளர் மோகன்தாஸை தற்காலிக பணிநீக்கம் செய்து, பதிவுத்துறை திருநெல்வேலி டிஐஜி கவிதா ராணி உத்தரவிட்டார்.

அத்துடன், முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட்டது. புதுக்கோட்டை சார் பதிவாளர் பொறுப்பை, ஏரல் சார் பதிவாளர் வள்ளியம்மாள் தற்காலிகமாக கவனித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

--------------------------------------------------------------------------

​உடலை குளிர்ச்சியாக்கும் விதைகள் .

அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக உடலில் பாதரசத்தின் அளவு குறைந்து, பசியின்மை உண்டாகும். இதனால் உடலின் வெப்பநிலை இன்னும் கூடுதலாக அதிகரிக்கச் செய்யும். அதை தனிப்பதற்கு உங்களுடைய டயட்டில் சில ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவை குறித்து இந்த பகுதியில் பார்க்கலாம்.

சமீபத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஹீட் வேவ் குறித்து எச்சரிக்கை மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. தேவையான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

வெளியில் அதிகப்படியாக வெயிலில் வர வேண்டாம் என்பது போன்ற அறிவிப்புகள் கூட வெளியாகின. ஏனெனில் அதிக வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்து உறிஞ்சப்பட்டு, நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


நம்முடைய வீடுகளில் எல்லா நேரங்களிலும் இருக்கிற சில உணவுப் பொருள்களை, அன்றாட சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் அவற்றை ஏதோ கடமைக்காக பயன்படுத்துவோம்.

உண்மையில் அவற்றின் மருத்துவ குணங்களும் அருமையும் நமக்குத் தெரிவதில்லை. அப்படி நம் எல்லோருடைய வீடுகளிலும் இருக்கக்கூடிய சில விதைகளைப் பற்றியும் அவை எப்படி நம்முடைய உடலின் வெப்பத்தை தணிக்க உதவும் என்றும் பார்க்கலாம்.


சீரகத் தண்ணீர் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு சன் ஸ்டிரோக்கினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது.

இந்த சீரகத் தண்ணீர் வயிறு உப்பசம், வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்சினைகளுக்கும் நல்லது. இது உடலை மிக லேசாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்கச் செய்யும்.

நாள் முழுக்க தண்ணீருக்குள் போட்டு ஊறவைத்து, வழக்கமாகக் குடிக்கும் தண்ணீருக்கு பதிலாகவும் குடிக்கலாம். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். குறிப்பாக காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் சீரகத் தண்ணீர் குடிப்பதனால் உடல் குளுமை பெறும்.


சோம்பில் உடலைக் குளிர்விக்கும் பண்புகள் நிறைந்திருக்கின்றன. இந்த சோம்பில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது வெயில் மற்றும் உடல் சூட்டின் காரணமாக ஏற்படும் தொற்றுக்களைச் சரிசெய்யவும் தடுக்கவும் உதவுகிறது.

கொளுத்தும் வெயிலில் வெளியே செல்வதன் மூலம் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் சோம்பு தண்ணீர் குடிப்பதன் மூலமும் உண்ணும் உணவில் சோம்பு அதிகம் சேர்க்கப்பட்டு இருந்தாலும் உடல் அந்த வெம்மையை நீக்கி, குளிர்ச்சிப்படுத்தும்.


ஏலக்காய் நம்முடைய உடலில் உள்ள தேவையற்ற வேதிப்பொருள்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இது வெறுமனே உடலை குளிர்ச்சியாக்குவது மட்டுமின்றி, அஜீரணக் கோளாறுகளை சரிசெய்கிறது.

நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் ஆகியவற்றையும் சரிசெய்து உடலை சௌகரியமாக வைத்திருக்க உதவுகிறது.

​உடலை குளிர்விக்கும் கொத்தமல்லி விதைகள் (coriander seeds)

-coriander-seeds

தனியா என்றழைக்கப்படுகிற கொத்தமல்லி விதைகள் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தையும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது.

உடலை சுத்தம் செய்து நீரேற்றத்துடன் வைத்திருக்கச் செய்யும். கொத்தமல்லி விதைகளில் உள்ள ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் ஜீரண மண்டலத்தை மேம்படுத்துகின்றன.

கொத்தமல்லி விதையில் உள்ள டயாபோரெடிக் பண்புகள் நம்முடைய உடலில் வியர்வையை உண்டாக்கி உடலின் வெப்பநிலையைக் குறைக்கச் செய்யும்.

காய்ச்சல் போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படும்போது கொத்தமல்லி குடிநீர் அல்லது கொத்தமல்லி காபி குடித்தால் காய்ச்சல் குறையும்.

சப்ஜா விதை என்று அழைக்கப்படும் இந்த விதைகள் துளசி செடியிலிருந்து கிடைக்கும் விதைகள் ஆகும்.

இயற்கையாகவே உடலைக் குளிர்விக்கும் கூலிங் ஏஜெண்ட் இந்த சப்ஜா விதையில் நிறைந்திருக்கிறது.

அசிடிட்டி, மலச்சிக்கல் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. இந்த சப்ஜா விதைகளை வாட்டர் பாட்டிலில் சிறிது போட்டு வைத்துவிட்டு அதை அப்படியே குடித்துக் கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, இந்த சப்ஜா விதைகளை சிறிது தண்ணீர் சேர்த்து 4-5 மணி நேரம் ஊற வைத்து அதை நீங்கள் குடிக்கும் ஜூஸ், ஸ்மூத்தி என எல்லாவற்றிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

-----------------------------------------------------------------------------