வியாழன், 26 மே, 2022

பரிந்துரைகள்

 ஒன்றிய பா.ஜ.க அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த வரியை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது கடந்த மே 19 அன்று அதிரடியான தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

அதில், “ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை ஒன்றிய அரசு நிர்பந்திக்க முடியாது. ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே வழங்கலாம்.. ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது.

 அப்படி செய்தால் அது கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும். இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தியுள்ளது என பல தரப்பிலிருந்தும் வரவேற்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், ஜி.எஸ்.டிக்கு எதிராக ஜிண்டால் நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசூடு, அண்மையில் வழங்கப்பட்ட ஜி.எஸ்.டி. தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார்.

அதில், “அந்த தீர்ப்பில் விவாதிக்கப்பட்ட கூட்டாட்சித் தத்துவம் குறித்த அம்சங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் அடங்கிய கட்டுரைகள் வெளியாவது ஆர்வத்தை தூண்டியுள்ளது. அந்த தீர்ப்பை வழக்கறிஞரும் படித்திருக்கலாம் என நம்புகிறேன்” என்று நீதிபதி சந்திரசூடு கூறியுள்ளார்.

---------------------------------------------------------------------------------

அனிலின் சி.பி.ஐ

ரு உயிர் போய் விடும் என்றால் மட்டுமே சட்ட முறைகளைப் பின்பற்றி துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய காவல்துறை “கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, மக்கள் போலீசை விரட்டினர்” என்று கூறி துப்பாக்கி சூட்டை எப்படி நியாயப்படுத்த முடியும்?

இந்தக் கேள்விகள் எதற்கும் சிபிஐ இன் குற்றப்பத்திரிகையில் விடை இல்லை. மேற்கண்ட குற்ற இறுதி அறிக்கையை விட மோசமான, பொறுப்புணர்வற்ற, புலனாய்வே இல்லாத ஒரு குற்றப் பத்திரிக்கையை நாடு இதற்கு முன் கண்டிருக்காது. 

இந்திய வரலாற்றிலேயே, மோசமான குற்றப் பத்திரிக்கை என இதைச் சொல்லலாம். குழந்தைகள் எழுதுவது போன்று கதை எழுதப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தின் நான்கு சுவர்களுக்குள் நடந்த ஜெயராஜ் – பென்னிக்ஸ், கொலையில் தொடர்புடைய காவல்துறையினர் இன்றுவரை சிறையில் உள்ளனர். 

ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த “ இரண்டாம் ஜாலியன் வாலாபாக் படுகொலை” அறைக்குள் நடக்கவில்லை. உலகமே பார்க்க, பட்டப்பகலில்,தொலைக் காட்சி கேமராக்கள் முன்பு நடந்தது. 

இரண்டு வழக்குகளையும் சிபிஐ தான் விசாரித்திருக்கிறது. ஸ்டெர்லைட் படுகொலை வழக்கு ஒரு சார்பாக முடிக்கப்பட்டதன் காரணம், அனில் அகர்வால் மோடி அரசுக்கு நெருக்கமானவர் என்பதுதான். 

அன்று அந்த துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப் பேசிய ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்பதையும் இங்கே நினைவு படுத்துகிறோம்.

தூத்துக்குடி படுகொலை எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டதோ, அதே போல இந்த குற்றப் பத்திரிகையும் திட்டமிட்டே ஸ்டெர்லைட்டுக்கும் அதன் கையாட்களுக்கும் ஆதரவாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.

மாநில – ஒன்றிய அரசுகளையும், மாசு கட்டுப்பாட்டுத் துறையையும், வருவாய்த்துறை, காவல்துறையையும் கைக்குள் போட்டுக் கொண்டு, தூத்துக்குடியை நஞ்சாக்கிய அனில் அகர்வாலின் கைக்குள் சிபிஐயும் அடக்கம்” என்ற உண்மை இந்த குற்றப்பத்திரிகையிலிருந்து தெரியவருகிறது.
சிபிஐ இன் கடுகளவும் நேர்மையற்ற உண்மைக்குப் புறம்பான இந்தக் குற்றப்பத்திரிகையாராலும்  ஏற்றுக்கொள்ளவே முடியாதது.

----------------------------------------------------------------------------------

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

மேல்சபைக்கான எம்.பி. தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளனர். எஸ்.கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரி ராஜன் ஆகியோர் திம.க வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் மூவரும் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். மேல்சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.

மக்களை மத்திய அரசு ஏமாற்றி வருகிறது:
கடந்த 40 நாட்களில் பெட்ரோல் விலை 11 ரூபாய் உயர்த்தி 9 ரூபாய் குறைத்துள்ளனர். இது மக்களை ஏமாற்றுவதற்காக மத்திய அரசு செய்து வருகின்றனர் என மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

பாஜகவில் இணையும் சரத்பாபு:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளராக இருந்த இ.சரத்பாபு நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது கிண்டி லீ மெரிடியன் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சி.டி.ரவி  முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளார். 

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பாலியல் சீண்டல்:

ஆண்கள் இல்லாத வீடுகளில் நோட்டமிட்டு பெண்கள் தனியாக இருக்கும்போது அவர்கள் வீட்டுக்குச் சென்று தண்ணீர் கேட்பது போலவும், வாடகைக்கு வீடு கேட்பது போலவும் நடித்து அவர்களை பலவந்தமாக பலாத்காரம் செய்து வந்தார். சிசிடிவி கேமராவில் பதிவுகளை வைத்து குற்றவாளியை பிடித்த மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்

கூட்டு பாலியல் வன்கொடுமை - 30 ஆண்டுகள் சிறை தண்டனை
மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு இந்த வழக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி கிருபாகரன் மார்த்தாண்டம் இருவரும் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டது எனக்கூறி, ரவிச்சந்திரன் மற்றும் சேகருக்கு தலா 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார். 

அன்னதானம் வழங்குவதில் பாரபட்சம்:
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலில் செயல் அலுவலர் மற்றும் சமையல் செய்யும் பெண் உட்பட 2 பேர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைகழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம்
சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக எஸ்.அமிர்த ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.