வெள்ளி, 14 ஜூன், 2013

சீனாவை விஞ்சிய இந்தியா ?

2028ஆம் ஆண்டு வாக்கில் சீனாவை விஞ்சி உலகின் அதிக ஜனத்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் . ஐநா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
 இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளின் ஜனத்தொகையும் நூற்று 45 கோடியாக இருக்கும் என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

போகப்போக சீனாவின் ஜனத்தொகை மெதுவாக குறைந்துகொண்டு வரும் ஆனால் இந்தியாவின் ஜனத்தொகையானது 2050ஆம் ஆண்டுவரை அதிகரித்துக்கொண்டே போகும் என இந்த அறிக்கை கணித்துள்ளது.
தற்போது 700 கோடியாகவுள்ள உலகின் ஜனத்தொகை 2050ஆம் ஆண்டுவாக்கில் 940 கோடியாக அதிகரிக்கும் .
இதில் பெரும்பான்மையான ஜனத்தொகை அதிகரிப்புக்கு வளர்ந்துவரும் நாடுகளே காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஏற்கனவே கணிக்கப்பட்ட ஜனத்தொகை அதிகரிப்புகளை அதிகமான பெருக்கம் ஏற்படும் என்று தற்போது கணிக்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------
மார்க்ஸ் இவர்களை இப்போதும் மிரட்டுகிறார்!

                                                                                                                                            -அருணன்
2.எதிர்ப்பது மேற்கத்திய முதலாளித்துவத்தையே!

(நேற்றைய தொடர்ச்சி)

நூலின் முதல் பகுதியில் “மறைந்து போன மார்க்சியம்” பற்றிப் பேசிய எஸ். குருமூர்த்தி இரண்டாம் பகுதியில் “மங்கி வரும் மார்க்கெட்டு” பற்றி பேசுகிறார்.
முதலாளித்துவத்தைக் குறிக்கவே இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அது பொருத்தமானது அல்ல. “மார்க்கெட்” - சந்தை - எனப்படுவது விற்கிறவரும், வாங்குகிறவரும் சந்திக்கும் இடம்.

அது முதலாளித்துவத்தின் கண்டு பிடிப்பு அல்ல. வெள்ளைக்காரர்கள் இங்கே வருவதற்கு முன்பே வாரச்சந்தை, மாதச் சந்தை என்று கூடியதை தமிழர் களாகிய நாமறிவோம். ஆண்டான் - அடிமை யுகம் காலத்திலிருந்து இருக்கக் கூடிய சந்தையை ஏதோ முதலாளித் துவத்தின் கண்டுபிடிப்பு போலச் சொல்லி, அதை மார்க்சியர்கள் இப்போது தான் அங்கீகரித்திருக்கிறார்கள் என்பது போல எழுதிச் செல்கிறார்.
 இரண்டுமே தவறு.முதலாளித்துவத்தின் தனித்தன்மை சந்தையில் இல்லை; அது ஆலைமுறை என்கிற புதிய உற்பத்தி முறையிலும், அதற் கான மூலதன ‘உருவாக்கத்திலும்’ அதைத் தனியுடைமையாகக் கொண்ட முதலாளிகள் என்கிற புதிய வர்க்கம் பிறந்ததாலும், அதன் மறுபக்கமாக உழைப்பையே சொந்தமாகக் கொண்ட தொழிலாளர்கள் எனும் மற்றொரு புதிய வர்க்கம் உதயமானதிலும் உள்ளது. இப்படி இருவேறு முரண்பட்ட நலன்கள் கொண்ட வர்க்கங்கள் உருவாகி, அதனால் தவிர்க்க முடியாதபடி அவற்றுக்கிடையே போராட் டம் நடக்கிறது எனும் உண்மையை அங்கீ கரிக்க இவருக்கு மனமில்லை.
 அத னாலும் மார்க்கெட் ஆராய்ச்சிக்குள் தன் னை அடைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.எனினும் அத்தகைய அலசலிலிருந் தும் அவர் வந்து சேர்ந்த முடிவு என்னவோ இதுதான்: “1930களில் அமெரிக்கா சந் தித்த பெரும் பொருளாதாரச் தொய்வை விட மோசமானது (தற்போதைய நெருக் கடி) இது. வெறும் நிதி சார்ந்த அமைப்பின் வீழ்ச்சியல்ல இது; அவர்களுடைய முன் மாதிரியின் வீழ்ச்சி. அதாவது, ஆங்கிலோ சாக்சனிய கட்டற்ற சந்தை முன்மாதிரி யின் வீழ்ச்சி ஆகும்”.
அமெரிக்கா உரு வாக்கித் தந்துள்ள முதலாளித்துவமும் தோற்றுபோய் வருகிறது என்பது தான் குருமூர்த்தியின் கணிப்பு. முதலாளித்துவம் தோற்கத்தான் செய்யும், அதன் உள்முரண்கள் அவ்வளவு கடுமையானவை என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துக் காட்டியதில் தான் மார்க்சின் பெருமை உள்ளது.
ஒருபுறம் மார்க்சின் சித்தாந்தம் புதைந்து போய்விட் டது என்று கெக்கலி கொட்டிச் சிரித்தவர், மறுபுறம் அமெரிக்க மாடல் முதலாளித் துவமும் சிதைந்து வருகிறது என்று சொல்லி கன்னத்தில் கை வைக்கிறார். கவனியுங்கள், எல்லா வகை முதலாளித் துவத்தையும் எதிர்க்கவில்லை, அமெரிக்க பாணியை மட்டும்தான் எதிர்க்கிறார்!அமெரிக்க பாணி மீது இவருக்கு என்ன இவ்வளவு கோபம்? “தனிமனிதர் களின் அதிகரித்து வரும் அரசுச் சார் பினால் குடும்பத்தின் கடமைகள் தேசிய மயமாக்கப்பட்டு மிகப்பெரிய பொதுக் கடமையான மக்களின் சமூகப் பாது காப்பு, பிற பாதுகாப்புகள் என்ற பெரும் சுமையை அரசு தன் மேல் ஏற்றிக் கொண் டுள்ளது” - என்பதில் தான் இவருக்கு ஏக வருத்தம்!குருமூர்த்தியார் விஷயத்தை தலை கீழாக முன்வைக்கிறார்.
முதலாளித்துவ மானது குடும்ப அமைப்பைச் சீர்குலைக் கிறது என்பது உண்மை. சேமிப்பு என்பது இளையவர், முதியவரின் எதிர்காலப் பாது காப்புக்குத் தேவையாக இருந்தது. அவர் களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்கிற மனப்போக்கை உருவாக்கி, அதன் விளைவாக சேமிப்புப் பழக்கத்தை ஒழித் துக்கட்டி, ஊதியத்தை எல்லாம் நுகர் பொருளில் செலவழிக்கிற நுகர்வு கலாச் சாரத்தை உருவாக்கியது முதலாளித் துவம். இது இளையவரையும், முதியவரை யும் அனாதைகளாக்கியது. அந்தக் கட்டத் தில் அரசு தலையிட வேண்டிய அவசியம் உருவானது. அப்படித்தான் வேலையில் லாக் கால நிவாரணம், முதியோர் ஓய்வூதி யம், மருத்துவ மானியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அமெரிக்கா - ஐரோப்பாவில் தலையெடுத்தன. இங்கே சேர்த்துச் சொல்ல வேண்டிய விஷயம் அன்றைய சோவியத் ஒன்றியத்தின சோச லிசக் கட்டுமானம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் முன்னணியில் நின்றது.
 அமெரிக்கா - ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் அத்தகைய திட்டங்கள் வேண்டு மென்று போர்க்கொடி தூக்கிய போது வேறு வழியின்றி அரைகுறைமனதோடு சில திட்டங்களை மேற்குலக முதலாளித்துவ நாடுகளும் அமல்படுத்தின.சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக் குப் பிறகு இந்த சமூகப் பாதுகாப்புத் திட் டங்களையும் வெட்டத் துணிகின்றன முத லாளித்துவ அரசுகள். எஜமானனைக் காட்டிலும் அதிக எஜமான விசுவாசம் காட்டுகிற குருமூர்த்தியார் இந்தத் திட்டங் கள் தான் அமெரிக்க பாணி முதலாளித் துவத்தின் மிகப்பெரிய ஊனம் என்கிறார், அதனால்தான் அது வீழ்ந்து வருகிறது என்கிறார்.
முதலாளித்துவம் உருவாக்கிய குடும்பச் சீரழிவு காரணமாகவே சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வந்தன, இப் போதும் தேவைப்படுகின்றன என்பதை மறைத்து விட்டு, இந்தத் திட்டங்கள் காரணமாகத் தான் குடும்ப அமைப்பு சீரழி கிறது என்று பெரும் போடாகப் போடுகிறார்.இந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டங் களும் இல்லையென்றால் முதலாளித் துவ உலகில் பாட்டாளிகளின் வாழ்வு மேலும்பரிதாபமாகிப் போகும்.
அதைப் பற்றிக் கவலைப்படாவிட்டாலும் அத னால் தீவிரமான வர்க்கப் போராட்டங் களும் சமூகப் பதட்டங்களும் ஏற்படும் என்பதை இந்த ஆர்.எஸ்.எஸ்.காரரைக் காட்டிலும் மேற்கத்திய முதலாளித்துவ அரசுகள் நன்கு உணர்ந்துள்ளன. அத னால் தான் இந்தத் திட்டங்களை ஒழித் துக் கட்ட வேண்டுமென்று அவை உள் ளூர ஆசைப்பட்டாலும் அப்படிச் செய்யா மல், அவ்வப்போது வெட்டிச் சுருக்கவே முயலுகின்றன.
ஜெர்மனியின் தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அமைச்சர் உர்சுலா வோன் டெர் லெயன் கூறுகிறார்: “எங்களது சமூகப் பாதுகாப்புத் திட்டம் நிலைப்படுத்தும் கருவியாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஓய்வூதியம், வேலையில்லாக் கால நிவாரணம் மற்றும் இதர உதவிகள் மக்களிடம் பணம் இருக்குமாறும், அதனால் சரக்குகளுக்கு உள்நாட்டில் தேவை இருக்குமாறும் பார்த் துக்கொள்கின்றன. எனவே, நெருக்கடியை நாங்கள் பெரிதாக உணரவில்லை” (டைம்ஸ் ஆப் இண்டியா, 7.6.2013)முதலாளித்துவ ஆட்சியாளர்களே சமூகப் பாதுகாப்புத்திட்டங்களின் தேவை யை இந்தப்படியாக உணர்ந்திருக்கும் போது குருமூர்த்தியார் குதர்க்கமாகச் சிந்திக்கிறார்.
 அவற்றை அரசின் மீதான “பெரும்சுமை” என்று மிரட்டி, “இந்தச் சிதைவானது உண்மையில் தீவிரமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு கலாச்சாரச் சீரழிவே” என்று முத்தாய்ப்பு கொடுக்கிறார். சங்பரிவாரத் தினர் ஏழை, எளியவர்களின் நேர் எதிரி கள் என்பதை இதிலிருந்து சட்டென்று புரிந்து கொள்ளலாம்.முதலாளித்துவத்தில் குடும்ப அமைப்பு சீர்குலைவது பற்றி குருமூர்த்தி கவலைப்படுகிறாரே என்று தோன்றலாம். அவர் காப்பாற்ற விரும்புகிற குடும்ப அமைப்பு ஜனநாயகமயமானது அல்ல, மாறாக பழைய கட்டுப்பெட்டி அமைப்பு. அமெரிக்காவின் தற்போதைய நிலைமை யின் மோசமான அம்சங்கள் என்று இவர் பட்டியலிட்டிருப்பதில் இதுவும் ஒன்று; “1980ல் கூட ஆண்கள் வேலைக்குப் போவதும், பெண்கள் வீட்டில் இருப்பது மான முன்மாதிரியே பழக்கத்தில் இருந் தது. 2000 ஆண்டுவாக்கில் கணவன், மனைவி இருவருமே பணி புரியும் முன்மாதிரியே மேலாண்மை செலுத்து கிறது.”முதலாளித்துவத்தின் சில நல்ல கூறுகளில் ஒன்று தனது பொருளாதாரத் தேவை கருதி பெண்களையும் சுதந்திரத் தொழிலாளர்களாக மாற்றியிருப்பது.
நிலப் பிரபுத்துவம் பெண்களை அடுப்படியில் அடைத்துப் போட்டது என்றால் இது அவர்ளை ஆலைகளிலும் அலுவலகங் களிலும் வேலை பார்க்க வைத்தது. அத னால் அவர்கள் பொருளாதார ரீதியாகச் சொந்தக்காலில் நிற்க முடிந்து, காலங் காலமாகத் தொடர்ந்த ஆணாதிக்கப் போக்குகளை எதிர்த்துப் போராடும் சூழல் உருவானது. இது பொறுக்கவில்லை குருமூர்த்தியாருக்கு. அமெரிக்க பாணி முதலாளித்துவம் அழியப் போவதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார் இந்தப் புத்திசாலி! ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமூக சீர்திருத்தத்தின் பிரதான எதிரிகள், ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் மகா விரோதிகள் என்பதை இது துல்லியமாக வெளிப்படுத்துகிறது.குடும்பங்களின் சேமிப்பு குறைந்து போன நிலையில், அந்தக் குறைந்த சேமிப்பையும் பங்குச் சந்தையில் போட அவை பயப்படுகின்றன.
ஜெர்மனியிலும், ஜப்பானிலும் பங்குச் சந்தையில் குடும் பங்களின் முதலீடு மிகக் குறைவே. “ஐந்து வருடச் சேமிப்புக் கணக்குக்கு 1 சதவீத வட்டியே கிடைக்கும் சூழலில் கூட ஜப்பானியர்கள் தாங்கள் சேமிப்பின் 56 சதவிகிதத்தை ஜப்பானிய வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர்” என்கிறார் குருமூர்த்தி. இதற்கு நேர்மாறாக, அமெரிக் காவில் “பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கக் குடும்பங்கள் பங்குச் சந்தையின் முதலீடு செய்துள்ளன” என்றும் கூறுகிறார்.
இதற்கு மூல காரணம் அமெரிக்காவில் பங்குச் சந்தை மட்டுமல்லாது வங்கிகளது நடவடிக்கைகளும் ஊக வணிகமாக இருப்பது. எந்த நேரத்தில் எந்த வங்கி மூழ் கும் என்று சொல்ல முடியாது. சமீபத்தில், கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் சில தனியார் வங்கிகள் திவாலாகின. அவற்றில் பணம் போட்டவர்களின் கதி அதோ கதியானது.
மறுபுறம் கடன்காரர் களை நெருக்கிப் பிடித்ததில் அவர்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு தெரு வோரம் நின்றிருந்த கார்களில் குடிபுகுந்த அவலமும் ஏற்பட்டது!
பொருளாதாரம் தனியார்மயமான பிறகு அந்த வங்கிகளில் போடப்படும் தங்களது சேமிப்புக்கு பாதுகாப்பு இல்லை என் பதை அறியும் மத்திய தர வர்க்கம் பங்குச் சந்தைப் பக்கம் திரும்பியது. அங்கும் பாது காப்பு இல்லை. விஷயம் என்னவென்றால் அமெரிக்காவில் எங்கும் பாதுகாப்பு இல்லை என்பது தான்.இதைத் தவிர்க்க வங்கி - இன்சூரன்ஸ் போன்ற நிதி நிறுவனங்களாவது பொதுத் துறையில் இருக்க வேண்டுமென்பது தான் இதிலிருந்து பெறப்படும் பாடம். இந் தியாவின் நிதி மேலாண்மை தற்போதைய உலக நெருக்கடியை ஓரளவு சமாளித்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் நமது பொதுத்துறை வங்கிகள் - ஈட்டுறுதி நிறுவனங்கள். இந்த உண்மையை ஒப்புக் கொண்டு நிதித்துறையைத் தனியார்மய மாக்காதே என்பாரா குருமூர்த்தியார்? அதுதான் இல்லை. அப்படியெல்லாம் தப்பித்தவறியும் சொல்லவில்லை.
நிச்சய மற்ற பொருளாதார எதிர்காலமே முத லாளித் துவத்தின் உள்ளார்ந்த விதி எனும் உண்மையைப் போட்டு உடைக்கவோ, அதை ஓரளவாவது கட்டுக்குள் வைத் திருக்க அரசின் தலையீடு வேண்டுமென் பதை வலியுறுத்தவோ அவர் தயாராயில்லை.எனவே, பொதுத்துறையின் பெருமை யை அல்ல, பழைய குடும்ப அமைப்பின் புனிதத்தைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகிறார்.
அதை இழந்துவிட்ட அமெரிக்கா சகலத்தையும் இழந்து விட்டது என்கிறார்.
 “கம்யூனிசம் வீழ்ந்ததை விட வேகமாக முதலாளித் துவ மேற்கும் வீழ்ந்துவிடும்” என்று உற் சாகமாகக் கூறுகிறார்.
இந்த விஷயத்தில் அமெரிக்கபாணி முதலாளித்துவமே உலகின் இறுதி இலக்கு, அதை அடைந்துவிட்டதால் மனித குல வரலாறே முடிந்து போனது என்பதாக ஆணவத்தோடு முரசறைந்த ஃபிரான்சிஸ் ஃபுகுயாமாவின் கருத்தை யும் மறுதலிக்கிறார். தனது சமீபத்திய நூல் ஒன்றில் கலாச்சாரத்திற்கு உள்ள பங் களிப்பைத் தான் புறக்கணித்துவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் கொஞ்சம் மகிழ்ந்து போகிறார்.
ஆகவே, கலாச்சாரத்தை - அதாவது புனித குடும் பத்தை - கைவிட்டுவிட்ட முதலாளித் துவ மேற்கு வீழத்தான் செய்யும் என்று ஆணையிட்டுச் சொல்கிறார்!அப்படியென்றால் அதனிடத்தில் என்ன வந்து உட்காரும்? உலகம் “ஒரு மாற்றுப் பொருளாதார மாதிரியைத் தேடி நகர்ந்து கொண்டிருக்கிறது” என்கிறார்.
-அருணன்
 நமக்கு ஆர்வம் பிறக்கிறது. ஆஹா!
 ஆர்.எஸ்.எஸ். காரரும் மாற்றுப் பொருளா தாரம் பற்றிப் பேசுகிறாரே!
ஆனால், கவனத்தில் வையுங்கள் “முதலாளித்துவ மேற்கு வீழ்ந்து விடும்” என்று தான் சொல்கிறாரே தவிர முத லாளித்துவமே வீழ்ந்து விடும் என்று சொல்லவில்லை. இவர் முன்வைக்கிற மாற்றுப் பொருளாதாரம் “முதலாளித்துவ கிழக்கு” ஆகும்.
அதுதான் இவரது நூலின் அபத்தமான உச்சக்கட்டம்.
அந்த மாற் றின் லட்சணத்தை, அதாவது அவலட் சணத்தை அடுத்துக் காண்போம்.
(நாளை முடியும்)