ஞாயிறு, 16 ஜூன், 2013

வாழைப்பழம் சாப்பிட்டால்,


வாழைப்பழம் சாப்பிட்டால்

வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும்.

 அதன் முழு நன்மைகள் பற்றி  தெரியாது.

 வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.

 அதில் நிறைந்துள்ள சத்துக்களைப்பற்றி

  வைட்டமின் `ஏ', வைட்டமின் `பி' 6, வைட்டமின் `சி', மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.
 இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.

அவ்வாறு சாப்பிட வாங்கும் வாழைப்பழத்தை கனிந்ததாகவே வாங்கினால், அது சீக்கிரம் பாழாகிவிடும். ஆகவே சிலர் காயாக வாங்குவார்கள்.
 அதனை விரைவில் பழுக்க வைப்பதற்கு  அதனை ஒரு  பேப்பரில் போட்டு சுற்றிவிட்டால், சீக்கிரம் பழுத்துவிடும்.

  சிலர் ப்ரிட்ஜில் வைப்பார்கள். அவ்வாறு வைத்தால், அது கருப்பாக மாறிவிடும்.
அதற்காக சாப்பிட கூடாது என்பதில்லை.
 சிலருக்கு நிறம் மாறிவிட்டால், கெட்டுப் போய்விட்டது என்று தூக்கிப் போட்டு விடுவார்கள் . இவ்வாறு நன்கு கனிந்த வாழைப்பழத்தை பலவாறு சாப்பிடலாம்.

குறிப்பாக வாழைப்பழத்தில் மட்டும் நன்மைகள் நிறைந்திருப்பதில்லை, வாழைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு வகையில் பயன்படுகிறது. மேலும் அதன் ஒவ்வொன்றிலும், நிறைய சத்துக்கள் உள்ளன. இப்போது அதில் வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
  அலர்ஜியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கும்.

  அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கி, ரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும். அதனால் தான் விளையாட்டு வீரர்களை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள்.

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டால் குடலியக்கமானது சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.

  மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

  மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.

புகைப்பிடித்தலை நிறுத்த வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.

. வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடினின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். மேலும் செரிமானமும் சீரான நடைபெறும்.

  பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால், மூளையின் செயல்பாடானது அதிகரிக்கும். எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, அன்றைய நாளை துவங்குங்கள்.
suran
 வாழைப் பழத்தில் உள்ள குறைந்த அளவு புரோட்டீன் மற்றும் உப்பு மற்றும் அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட் சிறுநீரகத்தில் ஏற்படும் தீவிர பிரச்சனைகளை போக்கும். அதிலும் இந்த பழத்தை தொடர்ந்து மூன்று நாட்களில், ஒரு நாளைக்கு 89 பழங்கள் சாப்பிட்டால், எந்த ஒரு பிரச்சனையானாலும் போய்விடும்.

  வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால்,அது மாதவிடாய் பிரச்சனைகளை குணமாக்க பெரிதும் உதவும். அதிலும் அதிகப்படியான ரத்தப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், வாழைப்பூவை சாப்பிட்டால், புரோஜெஸ்ட்ரோனின் அளவு அதிகரித்து, அதிகப்படியான ரத்தப் போக்கு குறையும்.

 உடல் எடை அதிகம் உள்ளவர்கள், டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்தால், உடல் எடை குறையும்.

  வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள செல்களில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர்மத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோயான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால், 40% பக்கவாதம் வருவது குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

  வாழைத்தண்டை ஜுஸ் போட்டு குடித்தால், சிறுநீரக கோளாறை போக்கலாம். இந்த ஜுஸ் சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும். குறிப்பாக சிறுநீரக கற்களை போக்குவதற்கு சிறந்த நிவாரணி. இதுபோன்று உடலில் ஏற்படும் அசாதாரண கோளாறுகளை நீக்கவல்ல வாழைப்பழத்தை தினமும் உண்டு உடல் உபாதைகள் இன்றி வாழ்வோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 "கூடங்குளம் அணு மின் நிலையம், எப்போது, செயல்படத் துவங்கும்' 

என்ற கேள்விக்கு, அமைச்சர் நாராயணசாமி, பதில் கூற மறுத்து விட்டார்."

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட, உலகின், மிக மலிவான கம்ப்யூட்டரை, பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. 
பிரிட்டனை சேர்ந்த, "ராஸ்பரி பை பவுன்டேஷன்' கடந்த சில ஆண்டுகளாக, மலிவு விலை கம்ப்யூட்டர் தயாரிப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளது. இதன் பயனாக, 1,400 ரூபாய் விலையில், அதிநவீன தொழில் நுட்பத்திலான, மலிவு விலை கம்ப்யூட்டரை வடிவமைத்ததுள்ளது. 

 
suran

முதலில், ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே சந்தைப்படுத்தப்பட்ட, இந்த கம்ப்யூட்டர்கள், கடந்த வாரம் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளிலும், தற்போது அமெரிக்காவிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

மிகக் குறைந்த விலையில், வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர், 1750 ஹெட்ஸ் பிராஸசர், 256 மெகாபைட் ராம், 2.0 யு.எஸ்.பி. போர்ட், எச்.டி.எம்.ஐ., போர்ட், 1/8 ஆடியோ அவுட்புட், எச்.டி., வீடியோ கேமரா, எஸ்.டி., மெமரி கார்டு உள்ளிட்ட, பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
 மேலும் லினக்ஸ் கணினி மொழியில், இதற்கான ஆபரேடிங் சிஸ்டம் எழுதப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவில், அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே, இந்த கம்ப்யூட்டர்கள், அனைத்து நாட்டு மக்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளன."
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்மின் ஏழாம் தலைமுறை மூதாதையர்"இந்தியர்"

மனைவி கேட்டியுடன் இளவரசர் வில்லியம்
 கேட்டியுடன் , வில்லியம்
பிரிட்டிஷ் முடிக்குரியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் இளவரசர் வில்லியம்மின் தாய் வழி மூதாதையர் ஒருவர் இந்தியர் என மரபணுப் பரிசோதனைகள் காட்டியுள்ளதாக, பிரிட்டனின் தி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டனின் மிகப்பெரிய காலனியாக விளங்கிய இந்தியாவுடன் நிரூபிக்கப்பட்ட மரபணு வேர்களைக் கொண்ட முதல் பிரிட்டிஷ் அரசராக இளவரசர் வில்லியம் வரலாம்.
இளவரசர் வில்லியமின் தாய் டயானா வழியில்சுமார் ஏழு தலைமுறைகள் முந்திச் சென்றால், வில்லியம்மின் மூதாதையராக அமைந்திருக்கும் எலீஸா கிவார்க் என்ற பெண் பாதியளவிலாவது இந்தியர் என்று எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வில்லியமின் ஏழாம் தலைமுறை மூதாதையரான எலைஸா கீவர்க் இந்தியாவின் சூரத் நகரில் வாழ்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
இந்தப் பெண் ஆர்மீனியப் பெண் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டு வந்தது.
ஆனால் இந்தப் பெண்ணின் வழிவந்தவர்களுடைய மரபணுக்களை ஆராய்ந்ததில், அப்பெண் தாய் வழியிலோ தந்தை வழியிலோ இந்திய மரபணு கொண்டவராக இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது.
எலீஸா கீவர்க் யார் என்று மரபணு பரிசோதனைகளை நடத்தி இந்த விவரத்தைக் கண்டறிந்துள்ள பிரிட்டன்ஸ் டி என் ஏ நிறுவனத்தின் பேராசிரியர் ஜிம் வில்சன் பிபிசியிடம் விளக்கினார்.
"ஸ்கொட்லாந்து நிலச்சுவாந்தார் ஒருவரின் இளைய மகனான தியோடோர் ஃபோர்ப்ஸ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தவர் இந்த எலீஸா கீவர்க். இவர்கள் இருவருமாக சூரத்தில் ஒரு குடும்பம் நடத்தினர். மும்பைக்கு சற்று வடக்கேயுள்ள ஒரு ஊர் இது. பிரிட்டிஷ் கிழக்கு இந்தியல் கம்பெனியில் வேலைபார்த்த அந்த ஸ்கொட்லாந்து இளைஞனின் வீட்டுப் பணிகளுக்கு பொறுப்பாக இருந்தவர் இந்தப் பெண். இவர்களுக்கு குறைந்தது இரண்டு பிள்ளைகள் பிறந்தன. தம்முடைய மகள் கேட்டியையும் மகன் அலெக்ஸாண்டரையும் இவர்கள் இந்தியாவிலிருந்து ஸ்கொட்லாந்துக்கு அனுப்பிவைத்திருந்தனர். அதில் கேட்டி வழியில் வந்தவர்தான் டயானா."
பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் ஐரோப்பாவுக்கு வெளியிலான மரபணுக் கலப்பு இருப்பது நிரூபிக்கப்படுவது முதல் முறை.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran
-