மீள் பார்வை

2012-ம் ,ஆண்டு ஜூன் ,-----------------------------------------------------
உலகம்

ஜூன் 1: எகிப்தில் 31 ஆண்டுகளாக அமலில் இருந்த அவசர சட்டம் முடிவுக்கு வந்தது.
ஜூன் 3: நைஜீரியாவின் அபுஜா நகரில் இருந்து, லாகோஸ் நகருக்கு சென்ற டானா ஏர்லைன்ஸ் விமானம் தீ விபத்துக்குள்ளானதில் 153 பேர் பலி.
ஜூன் 4: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், 5.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜூன் 6: ஆப்கானிஸ்தானின் காந்தகார் பகுதியில், தற்கொலை படையினர் நடத்திய 2 தாக்குதல்களில் 41 பேர் பலி.
ஜூன் 13: இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் டேனியல் ஹில்லெல், 2012ம் ஆண்டுக்கான உலக உணவு பரிசை பெற்றார்.
ஜூன் 18: இந்திய வம்சாவளி அமெரிக்க பேராசிரியர் அஞ்சலி ஜெயினுக்கு, அமெரிக்காவின் யேல் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம், அசோசியேட் டீன் பதவி வழங்கியது.
ஜூன் 20: கிரீஸ் நாட்டின் புதிய பிரதமராக ஆன்டனிஸ் சமரா பதவியேற்பு.
ஜுன் 24: பராகுவே அதிபர் பெர்னான்டோ லுகோ மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் பதவி நீக்கம். புதிய அதிபராக, பிரடரிக்கோ பிரான்கோ பதவி ஏற்பு.
ஜூன் 27: வங்கதேசத்தில் பலத்த மழையினால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 83 பேர் பலி.

இந்தியா

ஜூன் 3: தடை உத்தரவை மீறி, அமர்நாத் கோவிலுக்கு யாத்திரை செல்ல முயன்ற, 600 யாத்ரீகர்கள் கைதாகி விடுதலை.
ஜூன் 5: மும்பை பல்கலை தயாரித்த, வினாத்தாளை "அவுட்'ஆக்கியது தொடர்பாக, பேராசிரியர்கள், பல்கலை உதவியாளர்கள் உட்பட 14 பேர் கைது.
ஜூன் 9: சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, ஆந்திர ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனு நிராகரிப்பு.
* உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள், லோக்சபா எம்.பி., ஆக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஜூன் 15: ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 15 இடங்களில் ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சி வெற்றி பெற்றது.
ஜூன் 24: மத்திய உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து. பெரும் சேதமில்லை.
* மகாராஷ்டிராவில் 2002ல் பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில், தூக்குத்தண்டனை பெற்ற கைதி இறந்து 5 ஆண்டுகளுக்குப்பின் கருணைமனு நிராகரிப்பால் விமர்சனம்.
* உத்தரபிரதேசத்தில் அம்ரோகா அருகே பேருந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 15 பேர் பலி.

தமிழகம்

ஜூன் 1: அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை, இந்தாண்டு முதல் முப்பருவ கல்வி முறை, தொடர் மதிப்பீடு முறை அறிமுகம்.
ஜூன் 4: அரசு அனுமதியின்றி குவாரி நடத்த துணை போனதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது.
* சேலம், அங்கம்மாள் காலனி, குடிசைகளை தீ வைத்த சம்பவத்தில், ரவுடிகளை தூண்டியதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது.
ஜூன் 7: சிவகங்கை லோக்சபா தொகுதி தேர்தல் வெற்றி தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை, ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி.
ஜூன் 15: புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றி. தே.மு.தி.க., டெபாசிட் பெற்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
பென்டிரைவிற்கும் கடவுச் சொல் . ?
--------------------------------------------------------------------------------------

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன. இதில் Usb Flash Sequrity என்ற இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி எனப் பார்ப்போம்.

அளவில் சிறிய இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

தரவிறக்கச் சுட்டி: Usb Flash Sequrity

இந்த தளத்திலேயே மென்பொருள் மூலம் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். எனவே அதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

மென்பொருளில் உங்கள் பிளாஸ் டிரைவை(USB) தேர்ந்தெடுத்து பாஸ்வேர்ட் அமைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் பென்டிரைவை கணினியில் இணைக்கும்போது UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இரண்டு கோப்புகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அதில் UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இருகோப்புகளில் UsbEnter.exe என்ற கோப்பைத் தேர்ந்தெடுத்து உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து மீண்டும் உங்கள் பென்டிரைவை திறந்து பயன்படுத்தலாம்.

பிளாப்பி(Floppy) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு பதிலாக இக்காலத்தில் பயன்படுபவைகள் இந்த Flash Drive or pendrive or Usb. இவை எந்தளவுக்கு பயன்மிக்கதாக இருக்கிறதோ, அந்தளவுக்கு ஆபத்தையும் விளைவிக்கக்கூடியவை. அதாவது யாரிடமிருந்தும்(கணினி) வைரஸ் வந்தாலும் பெற்றுக்கொண்டு உடனே அதை நம்முடைய கணினிக்கு பரப்பிவிடும் செயலைச் செய்துவிடும். ஆகவே வைரஸ் சாப்ட்வேர் மூலம் சோதனை செய்து கொள்வது நல்லது.

USB -இதிலுள்ள தகவல்களை பாதுகாக்கவும், இதன் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கும் உதவ ஒரு மென்பொருள் உண்டு.
http://www.usbalert.nl/usbalert/download.php
மேற்கண்ட சுட்டியின் வழிசென்று Install wizard என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

இதில் போர்ட்டபிள் வெர்சனும் உள்ளது. தேவையெனில் Portable version-ஐ தரவிறக்கிக்கொள்ளலாம். மென்பொருளை தரவிறக்கி நிறுவியவுடன் TaskBar-ல் USB alert செய்திப்படம் காட்டும்.

இம்மென்பொருள் Windows XP, Windows Vista (32 / 64 bit), Windows 7 (32 / 64 bit) இயங்குதளங்களில் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக நாம் பென்டிரைவ் கணினியில் இணைத்தவுடன் அலர்ட் மெஜேஸ் வருமல்லவா? அதைப்போன்றே இம்மென்பொருளை நிறுவியவுடனும் அலர்ட் மெசேஜ் வரும். பிறகு அந்த ஐகானை சொடுக்கி Eject என்பதை கிளிக் செய்து பென்டிரைவ் கணினியிலிருந்து நீங்கிவிடலாம்.

ஒவ்வொரு முறையும் USB Pendrive இந்த முறையில் எடுக்கும்போது பென்டிரைவ் பாதுகாப்பாக நீங்குவதோடு, சேமிக்கப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.

USB என்பதன் விரிவாக்கம் Universal Serial Bus என்பதன் சுருக்கமே ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Disc தான் இந்த பென்டிரைவ்.

இந்த USB என்று சொல்லக்கூடிய Pendrive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்துவது எப்படி எனப் பார்ப்போம்.

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாப்பதால் நம்முடைய கோப்புகள், தகவல்கள் களவு போகாமல் பாதுகாக்கலாம். வேறு ஒருவர் பயன்படுத்தவதை தடுக்க முடியும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்இடி விளக்கு.:கண் பார்வைக்கு பாதிப்பு--------------------------------------------------------------------------------------------
"எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு" ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், ‘லைட் எமிட்டிங் டையோடு’ விளக்குகள் அறிமுகம் ஆனது.
suran
இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது.
 இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், செல்போன்கள், டிவி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது.
 தற்போது மக்களிடம் எல்இடி பல்புகளை பற்றி, மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.
 சென்னையில் குடிசைகளுக்கு இந்த வகை பல்புகளை இலவசமாக வழங்குவது குறித்து மாநகராட்சியும் ஆலோசித்து வருகிறது.
ஆனால், எல்இடி பல்புகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் தற்போது பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.
 மேட்ரிட்டில் உள்ள கம்ப்லூடென்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் செலியா சான்செஜ் ரமோஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு, எல்இடி பல்புகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர்.

"எல்இடி பல்புகள் சுற்றுச்சூழலுக்கு சிறப்பானது என்றாலும், அதில் இருந்து நீல மற்றும் செங்கரு நீல (வயலட்) கதிர்கள் வெளியாகின்றன. இவை சிறிய அலைவீச்சை கொண்ட சக்திவாய் ந்த கதிர்கள். இவை அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், குளுமையாக இருப்பதால் சாதாரணமாக அதை பார்த்து கொண்டிருக்க முடியும்.
 இதுபோன்று எல்இடி விளக்குகளின் வெளிச்சத்தை பார்க்கும்போது, அது கண்ணின் விழித்திரையை பாதிக்கும். கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மை கொண்டது. மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்கக்கூடியது அல்ல. எல்இடி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண் பார்வைக்கு ஆபத்து அதிகம். "-இவ்வாறு  முடிவை வெளியிட்டுள்ளனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?