திங்கள், 24 ஜூன், 2013

பூமி . விஞ்ஞானி எச்சரிக்கை...!"ஒவ்வொரு வினாடியும், பூமி மீது, அதிகப்படியான வெப்பம் திணிக்கப்படுகிறது. 
இது ஜப்பானின், ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைப் போல, நான்கு மடங்கு அதிகம்' என, ஆஸ்திரேலிய விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.
 குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தட்பவெப்ப தகவல் துறையைச் சேர்ந்த ஜான் குக், மேலும் கூறியதாவது:-
"பூமி மீது, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிகப்படியான கரியமில (கார்பன்-டை-ஆக்சைடு) வாயுவின் அடர்த்தி அதிகரித்து உள்ளது. இதனால் பூமியில், அதிகப்படியான வெப்பம் ஏற்படுகிறது.இது, ஜப்பானின், ஷிரோஷிமாவில், அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய அணுகுண்டு தாக்குதலை விட, நான்கு மடங்கு அதிகம். 
அதுவும் ஒவ்வொரு வினாடியும், புவி இவ்வாறு கடுமையான வெப்பத்திற்கு ஆட்படுத்தப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக நிலவி வரும் இந்த நிலை, இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் என்ன ஆகும் என, நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இந்த அதிகப்படியான வெப்பம், 90 சதவீதம் கடலுக்குத்தான் செல்கிறது. இதுதான், நிலப்பகுதியில் ஏற்படும் தட்பவெப்ப நிலைகளை காட்டும் அளவைக் கருவியைப்போல் செயல்படுகிறது.இதனால், நிலங்கள், பனி மலைகள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றின் மீது, இவை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

இதன் காரணமாக, விலங்குகள் முன்னதாகவே, பாலுறவில் ஈடுபடுகின்றன. இதனால், பல விரும்பத்தகாத அம்சங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. இதற்கு விலங்குகள் காரணமல்ல, பருவநிலை மாறுபாடுகளில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணம்.
வட கண்டத்தில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி வருகிறது.
 இதற்கு ஏற்றாற்போல் விலங்குகள் தங்களை மாற்றிக் கொள்கின்றன.இந்த புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்களே முக்கிய காரணம். 
கடந்த, 20 ஆண்டுகளாக, இதுகுறித்து நடைபெற்று வரும் ஆய்வுகளில், மனிதர்களின் தவறுகளால், புவி வெப்பமடைதல் வேகமாக நடைபெறுவதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்"
-.இவ்வாறு, அவர் கூறினார். 
பேய் மழையும்,கொழுத்தும் வெயிலும் இதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.மனிதன் இயற்கை வளங்களை தனது சுயநலத்துக்காக அழிப்பதாலேயே பூமியின் சமநிலை கெடுகிறது.அரசுகளும் இயற்கை வளங்களை பாதுகாக்காமல் கண்மூடி நிற்பதால் பூமி பந்தில் வெகு விரைவில் உயிரினங்கள் அழியும் நிலை உருவாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கடவுள்களின் பூமி என்ற பெயர் உண்டு. புனிதத்தலங்களாகக் கருதப்படும் ஆலயங்கள் நிறைந்திருப்பதாலும், புனிதநதிகளாகப் போற்றப்படும் கங்கை, யமு னை ஆகியவை உருவாவதாலும் இந்தப் பெயர். 
ஒரு வாரத்திற்கும் மேலாக இங்கு பெய்துவரும் கனமழையாலும், வெள்ளப்பெருக்கு ஊர்களுக் குள் பாய்ந்ததாலும், மலைச்சாலைகள் உடைந் ததாலும் ஏற்பட்டுள்ள இழப்புகள் தேசத்தையே கவலையுறச் செய்துள்ளன.
மறுகட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவேற கிட்டத்தட்ட ஓராண்டுகாலம் ஆகும் என்று மாநில அரசு கூறுகிறது. அந்தப் பணி களாவது முறையாகவும், நேர்மையாகவும் மேற் கொள்ளப்பட்டாக வேண்டும். 
இந்தப் பேரிடர் நிலைமை ஏற்படுவது இது முதல் முறையல்ல. அவ்வப்போது இப்படிப்பட்ட நிலைமைகளை ஏற்படுத்துவதன் மூலம் இயற் கை ஒரு எச்சரிக்கையை மறுபடியும் மறுபடியும் விடுத்து வந்திருக்கிறது. இயற்கைச் சமநிலை விதிகளைக் கொஞ்சமும் மதிக்காமல் ‘வளர்ச் சித்திட்டங்கள்’ என்ற பெயரில் தான்தோன்றித் தனமாகவும் தாறுமாறாகவும் மேற்கொள்ளப் பட்ட அறிவியல்பூர்வமற்ற கட்டுமான நடவடிக் கைகள் குறித்த எச்சரிக்கைதான் அது. ஆலயங் களுக்காக மட்டுமல்லாமல், பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஆதாயங்களுக்காகவும் அந்தக் கட்டுமானங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு வந்தது. இதனால் வளமான வனங்கள் அழிக்கப் பட்டன. 
இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த வட் டாரம் என 130 கி.மீ. தொலைவுள்ள குறிப்பிட்ட பகுதியை அறிவிக்க வானிலை ஆய்வகம் உள் ளிட்ட துறைகள் முயன்றபோது, மாநில அரசு அதனால் சுற்றுலா நிறுவனங்கள் உள்பட தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறி தடுத்துவிட்டது. மத்திய அரசும் அதற்கு உடன்பட்டது.இவ்வாறு வனங்கள் அழிக்கப்பட்டதால்தான் வெள்ளத்தின் வேகத்தைத் தடுக்கக்கூடிய இயற்கை அரண் தகர்க்கப்பட்டது. மலைச் சாலைகள் கூட பக்கவாட்டு சரிவுப் பகுதிகளில் போதுமான அளவுக்கு வலுப்படுத்தப்படா மலே அமைக்கப்பட்டன. இயற்கையை அவ மதித்த இப்படிப்பட்ட அத்துமீறல்களின் விளை வாகவே இப்போது பேரழிவைச் சந்திக்க நேர்ந் திருக்கிறது.
கரியமிலவாயு, காற்றுமண்டலத்தில் 400 பிபிஎம்களை மே 9 அன்று அடைந்ததோடு, மேலும் வேகமாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. (பிபிஎம் என்பது யீயசவள யீநச அடைடiடிn என்ற அளவு). நாம் வாழுகின்ற பூமிக்கு ஆபத்து என்ற செய்தியை இது உரக்க அறிவிக்கிறது. இதில் மூன்று அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும்.
ஒன்று, 400 பிபிஎம்களை அடைய கரியமிலவாயுவின் அளவு உயர்ந்து வரும் வேகம். பசுங்கூட வாயுக்களின் அளவைக் கணக்கிடுவதில் நிபுணரான சார்லஸ் கீலிங் 1958 மார்ச் மாதத்தில் காற்றுமண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவைக் கணக்கிடத் தொடங்கியபோது ஓராண்டில் 0.5 பிபிஎம் என்ற விகிதத்தில் அது உயரும் வேகம் இருந்தது.
 1990-களில் இது மாறத் தொடங்கியது. இந்த நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளில் அது பாய்ச்சல் வேகத்தை அடைந்தது. 2007 - ஆம் ஆண்டிலிருந்து உலகப் பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்துவந்தாலும் கூட தொல் எரிபொருட்களின் கார்பன் வெளியீடுகள் 32 பில்லியன் டன்களை எட்டியிருக்கிறது.
 இதோடு காடுகளை அழிப்பதால் அதிகரிக்கும் 4 பில்லியன் டன்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காற்று மண்டலத்தில் 8 பில்லியன் டன்கள் கரியமிலவாயு சேர்ந்தால் அது ஒரு பிபிஎம் அளவுக்குச் சமம். 50 ஆண்டுகளுக்கு முன்னர் பூமி உள்வாங்கிய கரியமிலவாயுவின் அளவைவிட இரண்டு மடங்கு கரியமிலவாயு (ஓராண்டிற்கு 17-18 பில்லியன் டன்கள்) தற்போது உள்வாங்கப்படுகிறது. இருந்தபோதிலும் காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு சேரும் வேகம் அன்று சேர்ந்ததைவிட மூன்று மடங்காகி இருக்கிறது. கடந்த பத்தாண்டில் ஆண்டிற்கு 2 பிபிஎம் என்ற விகிதத்தில் அதிகரித்து வந்திருக்கிறது. 
கடல்நீர் அமிலமயமாகி பவளப்பாறைகளும் கடல்வாழ் உயிரினங்களும் பெரும் பாதிப்பினை அடைந்துவருகின்றன. கார்பன் வெளியீடுகள் இவ்வளவு வேகமாக அதிகரித்து அதன் காரணமாக பூமி சூடேறும் வேகமும் அதிகரிப்பதால் சுற்றுப்புறமும் உயிரினங்களும் தாவரங்களும் தங்களைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பறவைகள் முதன்முதலாக முட்டையிடுவது முன்னதாகவே நிகழத் தொடங்கிவிடுகிறது. தங்களுடைய இருப்பிடங்கள் சூடாகி வருவதால், பூமத்தியரேகை அருகே உள்ள உயிரினங்கள் அதை விட்டு விலகிச் செல்கின்றன அல்லது தரையிலிருந்து உயரமாக உள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன. 
அதன் விளைவாக மலைமீதும் துருவப் பிரதேசங்களிலும் வசிக்கும் உயிரினங்களுக்குத் தேவையான இடம் சுருங்கிக் கொண்டே வருகிறது. இந்த இனங்களே பருவநிலை மாற்றங்களினால் முதன்முதலாக அழிந்துபோகும் இனங்களாக அமைகின்றன.இரண்டாவதாக, கரியமிலவாயுவின் அளவு 400 பிபிஎம்களுக்கு மேலாக அதிகரிப்பது, பாதுகாப்பான அளவினைத் தாண்டிச் செல்வதாகும். உயிரினங்களும் மனித நாகரிகமும் தோன்றி வளர்ந்த நமது தாயகமான இந்த பூமியைப் பாதுகாக்க வேண்டுமெனில் கரியமிலவாயுவின் அளவு குறைக்கப்பட வேண்டும்.
 எக்காரணம் கொண்டும் 350 பிபிஎம்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்ந்து வரும் விஞ்ஞானி ஜேம்ஸ் ஹன்சன் எச்சரிக்கிறார்.மூன்றாவதாக, கரியமிலவாயுவின் அளவு பூமியின் வெப்பநிலையை கடந்த 5 கோடி வருடங்களாக எப்படி பாதித்து வருகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
3.4 கோடி வருடங்களுக்கு முன் காற்றுமண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவு குறைந்ததனால் அண்டார்டிக் பிரதேசத்தில் ஐஸ் படியத் தொடங்கியது.
 30 லட்சம் வருடங்களுக்கு முன் 240 பிபிஎம் அளவுக்கு கரியமிலவாயு குறைந்ததும் ஆர்டிக் பிரதேசத்தில் ஐஸ் உருவாகத் தொடங்கியது.
 அதனால்தான் பூமி சூடேறத் தொடங்கியதும் முதல் பலியாக ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஐஸ் உருகத் தொடங்கியது. கரியமிலவாயு வெளியீடுகள் காற்று மண்டலத் தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கக் கூடியவை. 
 உடனடியாக உலகம் விழித்துக் கொள்ள வேண்டும். கார்பன் அளவைக் குறைப்பதற்கான காலக் கெடுவை நாம் நீட்டிக் கொண்டே போக முடியாது.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------
Click Here