ஜூன் -2012. :ஒரு பார்வை..............,






ஜூன் 1: எகிப்தில் 31 ஆண்டுகளாக அமலில் இருந்த அவசர சட்டம் முடிவுக்கு வந்தது.

ஜூன் 3: நைஜீரியாவின் அபுஜா நகரில் இருந்து, லாகோஸ் நகருக்கு சென்ற டானா ஏர்லைன்ஸ் விமானம் தீ விபத்துக்குள்ளானதில் 153 பேர் பலி.
ஜூன் 4: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், 5.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜூன் 6: ஆப்கானிஸ்தானின் காந்தகார் பகுதியில், தற்கொலை படையினர் நடத்திய 2 தாக்குதல்களில் 41 பேர் பலி.

ஜூன் 13: இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் டேனியல் ஹில்லெல், 2012ம் ஆண்டுக்கான உலக உணவு பரிசை பெற்றார்.

ஜூன் 20: கிரீஸ் நாட்டின் புதிய பிரதமராக ஆன்டனிஸ் சமரா பதவியேற்பு.

ஜுன் 24: பராகுவே அதிபர் பெர்னான்டோ லுகோ மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் பதவி நீக்கம். புதிய அதிபராக, பிரடரிக்கோ பிரான்கோ பதவி ஏற்பு.

ஜூன் 27: வங்கதேசத்தில் பலத்த மழையினால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 83 பேர் பலி.

இந்தியா
 
ஜூன் 3: தடை உத்தரவை மீறி, அமர்நாத் கோவிலுக்கு யாத்திரை செல்ல முயன்ற, 600 யாத்ரீகர்கள் கைதாகி விடுதலை.

ஜூன் 5: மும்பை பல்கலை தயாரித்த, வினாத்தாளை "அவுட்'ஆக்கியது தொடர்பாக, பேராசிரியர்கள், பல்கலை உதவியாளர்கள் உட்பட 14 பேர் கைது.

ஜூன் 9: சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, ஆந்திர ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனு நிராகரிப்பு.
* உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள், லோக்சபா எம்.பி., ஆக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஜூன் 15: ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 15 இடங்களில் ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சி வெற்றி பெற்றது.
ஜூன் 24: மத்திய உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து. பெரும் சேதமில்லை.
* மகாராஷ்டிராவில் 2002ல் பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில், தூக்குத்தண்டனை பெற்ற கைதி இறந்து 5 ஆண்டுகளுக்குப்பின் கருணைமனு நிராகரிப்பால் விமர்சனம்.
* உத்தரபிரதேசத்தில் அம்ரோகா அருகே பேருந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 15 பேர் பலி.

தமிழகம்

ஜூன் 1: அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை, இந்தாண்டு முதல் முப்பருவ கல்வி முறை, தொடர் மதிப்பீடு முறை அறிமுகம்.

ஜூன் 4: அரசு அனுமதியின்றி குவாரி நடத்த துணை போனதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது.
* சேலம், அங்கம்மாள் காலனி, குடிசைகளை தீ வைத்த சம்பவத்தில், ரவுடிகளை தூண்டியதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது.
ஜூன் 7: சிவகங்கை லோக்சபா தொகுதி தேர்தல் வெற்றி தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை, ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி.

ஜூன் 15: புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றி. தே.மு.தி.க., டெபாசிட் பெற்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்களை உளவு பார்க்கும் அமெரிக்க அரசு 
மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை அமெரிக்கா திருடி வருகிறது என்று முன்னாள் சி.ஐ.ஏ ஊழியர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ வில் பணியாற்றியவர் எட்வர்டு ஸ்னோடன் (29) .
 பின்னர் இவர் அமெரிக்காவின் மற்றொரு உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில்( என்.எஸ்.ஏ.) 4 ஆண்டுகள் ஒப்பந்த ஊழியராக பூஸ் ஹமில்டன் மற்றும் டெல் கம்பெனிகளுக்காக பணியாற்றினார். 
அப்போது தேசிய பாதுகாப்பு ஏஜென்சி மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனம் வெறுத்த இவர் யாருக்கும் தெரியாமல் அமெரிக்காவில் இருந்து கடந்த மே மாதம் 20-ம் தேதி வெளியேறி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ,ஹாங்காங் நகருக்கு வந்தார். 
அங்கு அவர் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை செய்தியாளர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பேட்டி அளித்தார்.
 அப்போது அவர் கூறியதாவது:-
"அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு ஏஜென்சி என்ற உளவு அமைப்பு சிறந்த உளவு கட்டமைப்பு வசதியை கொண்டுள்ளது. இதனால் இந்த என்.எஸ்.ஏ அமைப்பு அனைத்து அமெரிக்கர்களின் ரகசிய தகவல் பரிமாற்றங்களை அவர்களுக்கு தெரியாமல் திருடுகிறது. மக்களின் தொலைபேசி பேச்சுக்கள், இன்டர் நெட் தகவல் பரிமாற்றங்களை என்.எஸ்.ஏ கண்காணித்துப் பதிவு செய்கிறது. இமெயில் பாஸ்வேர்டுகள், கிரிடிட் கார்டு ரகசிய எண்களையும் என்.எஸ்.ஏ அமைப்பு எளிதாக கைப்பற்றி விடுகிறது. 
இந்த வேலைகளை என்.எஸ்.ஏ அமைப்புக்காக நான் பார்த்து இருக்கிறேன். இதை ஏற்றுக்கொள்ள எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் வாழ விரும்பவில்லை. எனவே தான் அமெரிக்காவில் இருந்து தப்பி ஹாங்காங் நகருக்கு வந்து விட்டேன். நான் அமெரிக்காவில் உள்ள ஹவாய் நகரில் வசதியாக வாழ்ந்தேன். அங்கு ஆண்டுக்கு 2 லட்சம் டாலர் சம்பளம் பெற்றேன். 
அனைத்தையும் தியாகம் செய்து விட்டு இங்கு வந்து விட்டேன். இங்கு வந்தது ஹவாயில் இருக்கும் என் பெண் தோழிக்கு கூட தெரியாது. அங்குள்ள எனக்கு தெரிந்தவர்களிடம் நான் இனிமேல் தொடர்பு கொள்ள முடியாது. 
அங்கு எனக்கு தெரிந்தவர்களிடம் அமெரிக்க அரசு கெடுபிடி செய்யும் என்பது எனக்கு தெரியும். இதை நினைத்து இரவு தூக்கம் வராமல் தவிக்கிறேன். அமெரிக்க அரசு உலகம் முழுவதும் உள்ள தனிமனித சுதந்திரம், இன்டர் நெட் சுதந்திரம் ஆகியவற்றை முற்றிலும் அழித்து விட்டது. ஜார்ஜ் புஷ்சின் கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தப்போவதாக ஒபாமா அறிவித்தவுடன் ஒபாமாவின் மாயையில் இருந்து விடுபட்டு உலக மக்களுக்கு உண்மையை தெரிவிக்க முடிவு செய்தேன். இதனால் பல துன்பங்களை நான் அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்பதை நான் அறிவேன். அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. 
அமெரிக்காவின் ரகசிய சட்டங்கள், மக்களை உளவு பார்க்கும் அமெரிக்க அரசு ஆகியவற்றை பற்றி உலக மக்கள் தெளிவாக அறிந்து கொண்டால் நான் திருப்தி அடைவேன். 
ஹாங்காங் பேச்சு சுதந்திரம் கொண்ட பாரம்பரியமிக்க நகர் என்றார். என்.எஸ்.ஏ அமைப்பு அமெரிக்க மக்களை உளவு பார்த்ததற்கான சான்றுகளை அப்போது அவர் செய்தியாளர்களிடம் வழங்கினார். எட்வர்டு ஸ்னோடனின் இந்த செயல் அமெரிக்க மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
தனிப்பட்ட வாழ்க்கை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை பெரிதும் விரும்பும் அமெரிக்க மக்களை அமெரிக்க உளவு அமைப்பே உளவு பார்த்தது கடும் ஆத்திரம் கொள்ள செய்துள்ளது. அவர்கள் கோபம் அமெரிக்க அதிபர் ஒபாமா மீது திரும்பும் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் அஞ்சுகிறார்கள். 
இந்த நிலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ இது பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. எட்வர்டு ஸ்னோடன் ஹாங்காங் நகரில் 60 நாட்கள் தங்கி இருக்க அனுமதி பெற்று இருக்கிறார். 
ஆனால் அதற்குள் இவரை வெளியேற்றி தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா சீனாவிடம் கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

---------------------------------------------------------------------------------------------------------------
பணக்காரர்கள் அதிகம் 
-----------------------------------

உலக நாடுகளில் பணக்காரர்கள் அதிகம் வாழும் நாடுகளில் கத்தார் முதலிடத்தில் உள்ளது என்று சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 உலகில் எண்ணெய் வளம் நிறைந்த நாடுகளில் ஒன்று கத்தார். இங்கு ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 143 பேர் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உடையவர்களாக உள்ளனர். இந்நிலையில் மற்ற அரபு நாடுகளில் ஒன்றான குவைத் பணக்காரர்கள் வாழும் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. அங்கு 11.5 சதவிகித பணக்காரர்கள் உள்ளனர்.
 பஹ்ரைன் - 4.9 விழுக்காடு பணக்காரர்களுடன் 7வது இடத்தில் உள்ளது.
 ஐக்கிய அரபு குடியரசு-4 விழுக்காடு பணக்காரர்களுடன் ஒன்பதாவது இடத்தைப்பிடித்துள்ளது என்று பாஸ்டன் ஆலோசனைக்குழுவின் 13-ம் ஆண்டு ஆய்வறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது.
 கடந்த 2012ஆம் ஆண்டில், மத்தியக் கிழக்கு நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் பணக்காரர்களின் வளர்ச்சி விகிதம் 9.1 என்ற சதவிகிதத்தில் இரு மடங்கு ஆகியுள்ளது. மேலும் 2017ஆம் ஆண்டிற்குள், இந்த இரு நாடுகளின் தனியார் சொத்து மதிப்பானது 6.5 டிரில்லியன் டாலர் என்ற அளவை எட்டக்கூடும் எனவும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கப் போவது எண்ணெய் வளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனாகும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது.
 பாஸ்டன் ஆலோசனைக் குழுவானது உலக அளவில் வியாபார உத்திகளுக்கும் மற்றும் நிர்வாக மேம்பாட்டிற்கும் ஆலோசனை மையமாகச் செயல்பட்டு வருகின்றது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலை
பல்வேறு முதுநிலை, இளநிலை படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முதுநிலை
பொருளாதாரம், கல்வியியல், ஆங்கிலம், இந்தி, வரலாறு, அரசியல் அறிவியியல், உளவியல், கிராம மேம்பாடு, சமூகவியல், சுற்றுலா மேலாண்மை, எம்.காம்/ எம்.சி.ஏ., போன்ற பல்வேறு முதுநிலை
படிப்புகளுக்கும் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இளநிலை
இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், தாவரவியல், ஆங்கிலம், இந்தி, உளவியல், பி.காம்/பி.சி.ஏ., போன்ற பல்வேறு இளநிலை படிப்புகளுக்கும் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்படிவத்தை பல்கலையின் கிளை மையத்திலோ, பயிற்சிமையத்திலோ பெற்று விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் 200 ரூபாய்.

கடைசி நாள் ஜூன் 15.

அதிக விவரங்களுக்கு www.ignou.ac.in
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?