பண வீக்க அபாயம் .!

ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி

பணவீக்கம் - விலைவாசி உயரும் .

டாலாருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ60என வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பண வீக்க அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரூபாய்மதிப்பு வீழச்சி அடைந் துள்ளதால் பொருளாதார நிபுணர்களும் பங்குச் சந்தையாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
 ஒரே நாளில் பங்குசந்தை முதலீட்டாளர் களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. 1650 நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தும் அபாயத்தை தந்துள்ளது.நாட்டின் தலைமை பொருளாதார ஆலோச கர் ரகுராம் ராஜன் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க அரசு தயாராகி வருகிறதுஎன்றார்.இதுகுறித்து அவர் கூறுகையில்அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு ரூ60ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ரூபாய் நிலையில் தவ றாக ஏதும் நடக்கவில்லை.எனவே எதிர் மறை யான கவலைகள் வேண்டாம்.
பிரச்சனைகன் வரும்போது உரிய முறையில் நடவடிக் கைஎடுக்கிறோம். ரூபாய் மதிப்பு குறித்து அரசு கவனமாக ஆய்வு செய்து வருகிறதுஎன்றார்.திட்டக்குழு தலைவர் மாண்டேக் சிங் அலு வாலியா கூறுகையில் ரூபாய் மீது ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுக்கும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள் வதற்கான திறன் பாதிக்கப்படாதுஎன்றார்.
ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத வகை யில் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இது வரவேற்கதக்கது அல்ல என பங்குச் சந்தையாளர்கள் கவலை தெரிவித்தனர்.ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் வேகமாக சரிந்தன.டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமை யாக சரிவடைந்துள்ளதால் இறக்குமதி செலவு கள் கடுமையாகியுள்ளன. இது இந்தியாவிற்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். வெளிநாட்டில் இருந்து இந்தியா எண் ணெய் மற்றும் தங்கம் இறக்குமதிக்கு அதிக அளவில் செலவழிக்க வேண்டி இருக்கிறது.
தற்போது வரலாறு காணாத வகையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால் பண வீக்கம் ஏற்படுவதுடன் பொருட்கள் விலை கடுமை யாக உயரும் அபாயமும் உள்ளது.ரூபாய் வீழ்ச்சியை கட்டுப்படுத்தஉரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்ற மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் ராஜன் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் தங்க இறக்குமதிக்கு தடைவிதிக்க மாட்டோம்.
தற்போதைய நிலை மையை செபி கண்காணித்து வருகிறது. ரூபாய் நிலை ஒழுங்கற்று தாறுமாறாக இல்லை என்றும் தெரிவித்தார்.ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் பங்கு சந்தையில் சென்செக்சில் 526.41 புள்ளிகள் குறைந்து 18 ஆயிரத்து 719.29புள்ளியாக சரிந் தது. ரூபாய் மதிப்பு கடுமையான சரிவை கண்ட தால் பங்கு சந்தையில் ஒரே நாளில் 2.74 சதவீதம் சரிவு ஏற்பட்டது.
 கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இது வாகும். இந்திய பங்குச்சந்தையில 1650 நிறு வனங்களின் பங்குகள் மதிப்பு வீழ்ச்சி அடைந் தன.
ஆனால் 650 பங்குகள் மதிப்பு மட்டும் உயர்ந்தன. வியாழக்கிழமை மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
 இதனால் பங்குசந் தையில் முதலீடு செய்த நடுத்தர முதலீட்டா ளர்கள் பெரும் வேதனை அடைந்தனர்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பசுமை நுகர்வோர் காய்கறி,
-----------------------------------------

தமிழக அரசால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விட விலை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா  கடைகளை திறந்து வைத்தார்.

காய்கறி                                                               விலை (ஒரு கிலோ)
 ------------                                                             ------------------------------------
                                                         மலிவு விலை கடை    -கோயம்பேடு மார்க்கெட்  -மயிலாப்பூர்
                                                                          --------------------------------------------------------------------------------------------------          
பல்லாரி                                                       ரூ. 20           ரூ. 20 , 22                         ரூ. 29
சி.வெங்காயம்                                             ரூ. 60              ரூ. 85                             ரூ. 85
தக்காளி                                                        ரூ. 30               ரூ. 40                            ரூ. 45
உருளை                                                       ரூ. 20                ரூ. 18                            ரூ. 35
கேரட்                                                           ரூ. 40                ரூ. 30                            ரூ. 30
பீன்ஸ்                                                           ரூ. 50               ரூ. 45                            ரூ. 30
முட்டைக்கோஸ்                                          ரூ. 18               ரூ. 10 , 12                    ரூ. 12
கத்தரி                                                            ரூ. 25               ரூ. 15                            ரூ. 15
முள்ளங்கி                                                    ரூ. 16                ரூ. 12                            ரூ. 12
புடலை                                                          ரூ. 25               ரூ. 16                            ரூ. 15
வெண்டை                                                    ரூ. 24                ரூ. 30                          ரூ. 20
அவரை                                                          ரூ. 40               ரூ. 35                          ரூ. 30
பீட்ரூட்                                                           ரூ. 20               ரூ. 20                          ரூ. 18
காலிபிளவர்                                                   ரூ. 15               ரூ. 15 , 20                  ரூ. 15
சேனை கிழங்கு                                             ரூ. 25               ரூ. 20                          ரூ. 20
கோவக்காய்                                                   ரூ. 20               ரூ. 15                          ரூ. 15
பச்சை மிளகாய்                                            ரூ. 30               ரூ. 25                          ரூ. 25
பாகற்காய்                                                     ரூ. 25                ரூ. 20                         ரூ. 25

இந்த கடைகளில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விட சில காய்கறிகளின் விலை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சில காய்கறிகள் விலை பசுமை அங்காடிகளில் ரூ.2 முதல் ரூ.3 வரை குறைவாக உள்ளது. சிலவற்றின் விலை கோயம்பேட்டில் குறைவாக உள்ளது. சில்லறை கடைகளிலும் விலைகள் குறைவாக உள்ளது.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
"உலகின் மிகச் சிறந்த ஆவணங்களில் ஒன்றாக,
 இந்தியாவிற்குக் கடல் மார்க்கமாக, முதன் முறையாகச் சுற்றுப்பயணம் வந்த, வாஸ்கோடகாமாவின் ஆவணங்களும் சேர்க்கப்பட்டு உள்ளன.
ஐரோப்பிய நாடான, போர்ச்சுகல்லிலிருந்து, 15ம் நூற்றாண்டில், கடல் மார்க்கமாக, இந்தியாவிற்கு வந்தவர், வாஸ்கோட காமா. இவர், கோழிக்கோடு துறைமுகத்திற்கு, மே, 20, 1498ல் வந்தடைந்தார்.
இந்நிலையில், அவருடன் வந்திருந்த ஒருவர், தங்களது பயண அனுபவங்களை தொகுத்து எழுதியிருந்தார். இதை, தற்போது, "யுனெஸ்கோ' அமைப்பு, அங்கீகரித்து, மிகச்சிறந்த ஆணவமாகத் தேர்ந்தெடுத்து உள்ளது.
"இந்த ஆவணங்களை இன்றைய தலைமுறையினர் படிப்பதன் மூலம், வாஸ்கோட காமாவின் பயண அனுபவங்களை தெரிந்து கொள்ளமுடியும்' என, யுனெஸ்கோ தெரிவித்து உள்ளது.
இந்த ஆவணத்தில், பயணத்தின்போது நேர்ந்த அபாயம், நோய்கள், கடற்கரைப் பகுதி மக்களுடனான சந்திப்பு, பரிசப் பொருட்கள் பரிமாற்றம் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
அதுபோல், அந்த நூற்றாண்டின், விலங்குகள், மரங்கள், தாவரங்கள், பறவைகள், உணவு முறைகள், இசை மற்றும் கடற்பயண உபகரணங்கள், விலை மதிக்கத்தக்க கற்கள், கிராமங்கள், போன்றவை குறித்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. யுனெஸ்கோ மூலம், கடந்த, 1992ல், ஐந்து கண்டங்களில் இருந்து, திரட்டப்பட்ட சிறந்த ஆவணங்களில், இதுவரை, 299 வகையான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன."

 ------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?