ஞாயிறு, 16 ஜூன், 2013

தந்தை..........!


 தந்தையர் தினம் 

அமெரிக்காவில் 1909ல், சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண், தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார்.

 அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார
, தனது தாயாரின் மறைவுக்கு பிறகு ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை, கடுமையான சிரமங்களுக்கிடையே தந்தை வில்லியம் பராமரிப்பதை கண்டார்.
 இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக இந்நாளை அறிவித்தார்.
"இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. உலகளவில் தந்தையர் தினம் பல்வேறு தேதிகளில் கொண்டாப்படுகிறது. மேலும் இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப-உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.
ஸ்போகேனில் சோனோரா டோடின் முயற்சியால் ஜூன் 19, 1910 அன்று முதல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 ஆம் ஆண்டில் விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஸ்போக்கனில் உள்ள சென்ட்ரல் மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபால் தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இதைப் பற்றி அவருக்கு தோன்றியது.[1] மேலும் ஜூன் 19, 1910 அன்று அவருடைய தந்தைக்காக ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினத்தை கடைப்பிடித்து அனைத்து தந்தையர்களையும் கெளரவப்படுத்துவதற்கான யோசனையை இவரே முதன்முதலில் பரிந்துரைத்தார்.
இது அதிகார்வப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆனது. இருந்தபோதும் YWCAஇல் இருந்த ஆதரவால் YMCA மற்றும் தேவாலயங்கள் போன்ற இடங்களில் இது காலெண்டர்களில் இல்லாத போதும் கொண்டாடப்பட்டது.[2] அன்னையர் தினம் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்ட போது, தந்தையர் தினம் குதூகலமாய் கொண்டாடப்பட்டது.[2] தவறான காரணங்களுக்காக இதற்கான விடுமுறைநாள் மெதுவாக கவனம் பெற்றது. ஸ்போக்ஸ்மன்-ரிவியூ என்ற உள்ளூர் செய்தித்தாளில் நகைச்சுவை உள்ளிட்ட அதிகமான பழிப்பு, பகடி மற்றும் ஏளனம் ஆகியவற்றிற்கு இது உள்ளானது.[2] சிந்தனையற்று ஊக்கவிக்கப்பட்டும் "முன்னோர்கள் தினம்", "புரொபசனல் செக்ரட்டரீஸ் தினம்" மற்றும் பல தினங்களைப் போன்று காலெண்டரை நிரப்புவதற்கு முதல் படியாகவே இதைப் பல மக்கள் பார்த்தனர் "தேசிய மேசைச் சுத்தப்படுத்தும் தினம்" போலத்தான் இதுவும் எனக் கருதினர்.[2]
1913 ஆம் ஆண்டில் இதற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.[3] அமெரிக்க ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் 1924 ஆம் ஆண்டில் இந்த யோசனைக்கு ஆதரவளித்தார்.[சான்று தேவை] மேலும் இதன் விடுமுறையை சட்டமயமாக்குவதற்காக வாணிக அமைப்புகளால் இதற்கான தேசிய செயற்குழு 1930 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.[4] 1966 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இதற்கு பெடரல் விடுமுறை அனுசரிக்கப்படப் போவதாக பொது அறிவிப்பை வெளியிட்டார்.
தந்தையர் தினம் மட்டுமின்றி பல நாடுகளில் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இது பெரும்பாலும் நவம்பர் 19இல் கொண்டாடப்படுகிறது."


"தமிழ் விக்கிப்பீடியா"

------------------------------------------------------------------------------------------------
மணிவண்ணன்
நடிகருமான மணிவண்ணன் (59) சென்னையில் சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
 கோவை மாவட்டம், சூலூரைச் சேர்ந்த மணிவண்ணன் இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக திரையுலகில் நுழைந்தார். "கல்லுக்குள் ஈரம்', "காதல் ஓவியம்', "அலைகள் ஓய்வதில்லை', "நிழல்கள்' உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியதுடன், பாரதிராஜாவின் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
  மணிவண்ணனுக்கு செங்கமலம் என்கிற மனைவி, மகள் ஜோதி, மகன் ரகுவண்ணன் ஆகியோர் உள்ளனர். மகள் ஜோதிக்கு திருமணம் முடிந்துவிட்டது.
"மாறன்', "நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.' ஆகிய படங்களில் நடித்துள்ள ரகுவண்ணனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
1982-ஆம் ஆண்டு வெளிவந்த "கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து "24 மணி நேரம்', "நூறாவது நாள்', "முதல் வசந்தம்', "பாலைவன ரோஜாக்கள்', "ஜல்லிக்கட்டு', "சின்னத்தம்பி பெரியதம்பி', "அமைதிப்படை' உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் முத்திரைப் பதித்தார். கடந்த மாதம் அவர் இயக்கத்தில் 50-ஆவது படமாக "நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.' வெளியானது.
 1988-ஆம் ஆண்டு வெளிவந்த "கொடி பறக்குது' படத்தின் மூலம் மணிவண்ணனை வில்லனாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாரதிராஜா.
அதைத் தொடர்ந்து வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர பாத்திரங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தினார். "உள்ளத்தை அள்ளித்தா', "அமைதிப்படை', "முகவரி', "காதலுக்கு மரியாதை', "சங்கமம்', "பொற்காலம்' உள்ளிட்ட 450-க்கும் அதிகமான படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக் கொண்டு வந்தார். இறுதியாக "நான் ராஜாவாகப் போகிறேன்' படத்தில் நடித்திருந்தார்.
வலது கால் பகுதியில் சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பின் பெரிதும் உடல் நலிவுற்றார்.
தமிழ் ஈழ ஆதரவு கொள்கைகளில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
அவரது வேண்டுகோளின்படி மணிவண்ணனின் உடல் மீது புலி உருவம் பொறிக்கப்பட்ட  கொடி போர்த்தப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------