9- வது முறையாக மா ற் ற ம் .
"பல கோடி சொத்துக்களை வாங்கிக் குவித்த புகாரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த செல்ல பாண்டியன், நீக்கப்பட்டுள்ளார்.அமைச்சர் முகமது ஜான் இரட்டை இலை சின்னத்தை முடக்க, கடிதம் கொடுத்தவர் என்ற உண்மை தெரிந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக, கூறப்படுகிறது."
செல்ல பாண்டியன், 2011 ஜூலை முதல், 2013, மார்ச் 31 வரை, தூத்துக்குடியில், பலகோடி ரூபாய் மதிப்பு வீடு, கட்டடங்களை வாங்கிக் குவித்ததாக, ஆதாரங்களுடன் புகார்கள் சென்றன. சிவகாசி அம்மன்கோவில்பட்டியில், ஒரு தீப்பெட்டி ஆலையை, செல்ல பாண்டியன், விலைக்கு வாங்கியதாகவும் புகார் சென்றது. சொத்து குவிப்பு தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு தொடர, ஒரு அமைப்பினருக்கு, கவர்னர் அனுமதி அளித்து உள்ளதாக தெரிகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசார், உளவுத்துறையினர் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்தனர். அதை பார்த்த முதல்வர், அதிர்ந்து போனதாக, கட்சியினர் கூறுகின்றனர்.
தொழிலாளர் நலத்துறை மாநாட்டிற்காக, ஜூன் 4ல், ஜெனிவா சென்ற செல்ல பாண்டியன், உடனடியாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.
கட்சியினரை அரவணைத்து செல்லாத புகாருடன், சொத்துக் குவிப்பு ஆதாரங்களும் சிக்கியதால், அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலர் பதவிகள் பறிக்கப்பட்டன.
தூத்துக்குடி, தி.மு.க.,வில், வடக்கு மாவட்ட செயலராக இருந்தவர் செல்ல பாண்டியன். அக்கட்சியின், மண்டல பொறுப்பாளராக இருந்தவரும், தற்போதைய மாவட்ட செயலருமான, பெரியசாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2001ல், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர், செயலர், மாநில இணைச் செயலர் பதவிகளை வகித்தார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஒன்றரை ஆண்டுக்கு முன், அறநிலையத் துறை அமைச்சராக இருந்த, சண்முகநாதனிடம் இருந்து, அமைச்சர், மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டு, செல்ல பாண்டியனிடம் வழங்கப்பட்டது.
தற்போது, செல்ல பாண்டியனிடம் இருந்து இரு பதவிகளும் பறிக்கப்பட்டு, சண்முகநாதனிடம் வழங்கப்பட்டு உள்ளது.
சட்டசபை, லோக்சபா தேர்தல் நடப்பதற்கு முன், இவரை, மாவட்ட செயலர் ஆக்கினால், அத்தேர்தல்களில், மாவட்டத்தில் கட்சி அமோக வெற்றி பெறும் என்பது, "சென்டிமென்ட்!'
இதன்படி, 2000 ம் ஆண்டிலிருந்து, இதுவரை, மூன்று முறை, மாவட்ட செயலர் பதவி வகித்த இவர், தற்போது, நான்காவது முறையாக, அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தேர்தல் முடிந்து, சில மாதங்களில், பதவி பறிக்கப்படுவது வழக்கம்.
இரட்டை இலையை முடக்க முகமது ஜான் கடிதம் கொடுத்தது அம்பலம்:
இவர் மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் வந்ததன் அடிப்படையில், அமைச்சரவையில் இருந்து, நேற்று நீக்கம் செய்யப்பட்டார். அப்துல் ரகீம் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.வக்பு வாரிய தலைவர் பதவி நியமனம் நடக்க உள்ளது. அதில், இவர் தலையீடு அதிகம் இருப்பதாகவும், ஹஜ் யாத்திரைக்கு, ஏழைகளை விடுத்து, வசதி படைத்தவர்களுக்கு அனுமதி வழங்கியதாகவும் புகார் எழுந்தது.
வாணியம்பாடி தொகுதி முன்னாள், தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்தியின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கி வந்ததாகவும், தி.மு.க.,வினருக்கு சாதகமாக செயல்படுவதாகவும், ஏராளமான புகார்கள், முகமது ஜான் மீது குவிந்தது.ராணிப்பேட்டை தொகுதி, வேலூர் மாநரக மாவட்டத்தில் வருகிறது. அ.தி.மு.க., மாவட்ட செயலராக சுமைதாங்கி ஏழுமலை உள்ளார்.
இவர் தான் நிர்வாகிகள் நியமனம், கூட்டுறவு சங்க தேர்தல் பதவிகளுக்கு நியமனம் செய்ய வேண்டும்.ஆனால், அதிலும் முகமது ஜான் தலையிட்டு, நிர்வாகிகள் நியமனம் செய்வதாக கூறி, ஏராளமானவர்களுக்கு, "சாதகமாக' செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதில், 1996ம் ஆண்டு, முத்துசாமி தனியாக, போட்டி அ.தி.மு.க., ஆரம்பித்த போது, இரட்டை இலை சின்னத்தை முடக்கப் பார்த்தார். அப்போது, ராணிப்பேட்டை நகர செயலராக இருந்த முகமது ஜான், முத்துசாமிக்கு ஆதரவாக, இரட்டை இலை முடக்க கடிதத்தில் கையெழுத்து போட்டுள்ளார்.
இதையறிந்த அ.தி.மு.க., மேலிடம், போட்டி அணிக்கு சாதகமாக தேர்தல் கமிஷனுக்கு, "அபிடவிட்டில்' கையொப்பமிட்ட முகமது ஜான் உள்ளிட்ட, 17 பேர் தேர்தல்களில் நிற்க தகுதி இழக்கின்றனர் என குறிப்பிட்டு, "நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழில், 1998 டிசம்பர், 12ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இதனால், ஆடிப்போன மேலிடம், லோக்சபா தேர்தலில் ஏதாவது குளறுபடிகள் செய்ய வாய்ப்பிருப்பதாக கருதி, முகமது ஜானை நீக்கியதாக, அ.தி.மு.க., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஹரிஷ் தாமோதரன்
குஜராத் முதல்வர் மோடியை பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்துவது நாட்டிற் கும் நல்லதல்ல, பி.ஜே.பிக்கும் நல்லதல்ல. அதே போன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992 டிசம்பர் 6-ம் நாள் தான், தனது வாழ்க்கை யிலேயே சோகமான நாள் என அத்வானி கூறி யதையும் நான் என்றும் நம்பியதில்லை. அத்வானி ஒரு ‘ஹிந்துத்வா மிதவாதி என்று சொல்வதையும் நான் ஏற்பதில்லை. அது என்ன ‘ஹிந்துத்வா மிதவாதி?
மகாத்மா காந்தி, பண்டித நேரு, பாபா சாகேப் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பிரதிபலித்த உயர்ந்த கருத்தோட்டங்களுக்கு எவ்வகையிலும் பொருந்தாத சித்தாந்தம் அது. அத்வானியிடம் நாம் ஒரு விஷயத்தினை மட்டும் சந்தேகிக்க முடியாது. அது கட்சியின் மீது அவருக்கு இருக்கும் விசுவாசம். குப்பை யாய்க் கிடந்ததை பெரும் அமைப்பாக மாற்றி யவர். இதுதான் அவரை 2014 மக்களவைத் தேர்தல்களில் மோடியை பிரதமர் வேட்பாள ராக முன்னிறுத்துவதை எதிர்க்க வைத்தது. 86 வயதில் அவர் பிரதமராக ஆசைப்படுவதாக கூட எடுத்துக் கொள்ள முடியாது. குஜராத் திற்கு வெளியேயுள்ள இந்திய வாக்காளர் களின் நாடித் துடிப்பை அறிந்தவர் என்பதால் தான் அவர் மோடியை எதிர்க்கிறார்.
சரிந்த காவி !: 1999ல் மக்களவைத் தேர்தல்களில் 182 இடங்களைப் பெற்ற பி.ஜே.பி 2004ல் 138, அதைத் தொடர்ந்து 2009ல் 116 எனத் தேய்ந்து கொண்டே வந்திருக்கிறது. இடங்கள் மட்டு மல்லாது, இதே காலத்தில் தேசிய அளவில் அதனுடைய வாக்கு விகிதங்களும் 23.75 சதவீதத்திலிருந்து 18.88 சதவீதமாகக் குறைந் திருக்கிறது. இந்த செல்வாக்குச் சரிவிற்கு யாராவது ஒரு குறிப்பிட்ட நபரைக் குற்றம் சாட்டலாம் என்றால் அது மோடியாக மட்டுமே இருக்க முடியும். 2002ம் ஆண்டில் குஜராத்தில் மோடி யின் ஆட்சியில் நடைபெற்ற அந்தப் படு கொலைகள், முதன் முதலாக தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பில் வெளிப்படுத் தப்பட்ட முஸ்லிம் மக்களின் கோபம், இவை அனைத்தும் தேர்தல்களில் வெளிப்பட்டன. சிறுபான்மை மக்கள் மத்தியில் அது ஒரு புது விதமான எதிர்ப்பு வடிவத்தினை உருவாக்கி யது. பி.ஜே.பிக்கு வாக்களிப்பது இல்லை என் பதைத் தாண்டி, அக்கட்சியினைத் தோற் கடிக்கும் வாய்ப்புள்ள கட்சிக்கு வாக்களிப்பது என்ற புதிய வாக்களிப்பு உத்தியும் தோன்றியது. 2004 தேர்தல்களில் இது தெளிவாக வெளிப்பட்டது. மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு இருக்கும் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பி.ஜே.பி கடுமையான தோல்வியினைச் சந்தித்தது. அது மட்டுமல் லாமல், அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம், திரிணாமூல், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் தத்தம் மாநிலங்களில் மண்ணைக் கவ்வின. முஸ்லிம்களின் இந்த வாக்களிப்பு உத்தியின் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை பயனடைந்தன.
கூட்டாளிகளை இழந்து தனிமையில் ... : 15 முதல் 20 சதவிதம் வரையிலான சிறு பான்மை மக்கள் இவ்விதம் வாக்களிக்கத் தொடங்கி விட்டனர் என்றவுடனேயே, கூட் டாளிகள் பி.ஜே.பியைக் கைகழுவி விட்டனர். சிவசேனா, அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மட்டுமே பி.ஜே.பியுடன் சேர்ந்து நின்றன. ஆனால் ஐக்கிய ஜனதா தளமும் கூட, மோடியை பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதிக்க மறுத்து விட்டது. 2009 தேர்தல்களும் ஏறக்குறைய 2004 முடிவுகளை மீண்டும் உறுதி செய்யும் வகை யில் தான் இருந்தன. இந்தத் தேர்தல்களில் மோடியை விட வருண் காந்தியின் மதவெறிப் பேச்சுக்கள் குறைந்த பட்சம் உத்தரப் பிரதேசத் தில் பி.ஜே.பியின் தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்தன.இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் பி.ஜே.பி அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். நேற்று வரை தெற்கில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவில், அது தூக்கி வீசப்பட்டுவிட்டது. உத்தரப்பிரதேசத் தில் இப்போது மூன்றாவது இடத்திற்காக காங் கிரசுடன் போட்டியில் இருக்கிறது. மோடி பிரதமர் வேட்பாளர் என்ற பிரச்சனையில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் உறவு முறி யும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் அது பல இடங்களில் தோல்வியைத் தழுவும். 2009 தேர்தல்களில் கூட, பி.ஜே.பி வெற்றி பெற்ற இடங்களில் பாதி எண்ணிக்கை முஸ்லிம்கள் அதிக எண்ணிக் கையில் இல்லாத மேற்கு மற்றும் மத்திய இந்தி யாவில் இருந்து தான் என்பது குறிப்பிடத் தக்கது. விவரங்களை கீழ்வரும் பட்டியலில் காணலாம்.
வளர்ச்சி குறித்த மாயை! : குஜராத்தின் வளர்ச்சி குறித்து பேசும் போது இரண்டு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மோடி குறித்து சரடு விடுபவர்கள் அவரது ஆட்சிக் காலத்தில்தான் குஜராத் வளர்ச்சியடைந்தது என்றும் பி.டி. பருத்தியின் வெற்றி குஜராத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும் மிகைப்படுத்துகின் றனர். ஆனால் ராஜ்கோட் மெசின் டூல்ஸ், டீசல் என்ஜின் தொழில் மற்றும் சூரத், பாவ்நகரி லுள்ள செயற்கை வைரத் தொழிற்சாலைகள் மட்டுமின்றி அமுல், அம்பானி, அதானி, நிர்மா, டோரெண்ட், ஜைடஸ் கேடிலா, ஐபிசிஎல், ஜிஎஸ்எப்சி அல்லது ஜிஎன்எப்சி போன்ற தொழிற்சாலைகள், மோடி ஆட்சிக்கு வரு வதற்கு முன்பே அம்மாநிலத்தில் இருந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களது ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் படிப்படியான வளர்ச்சியை ஏற்படுத்தியிருப்ப தாக எவரேனும் உரிமை கொண்டாட முடியு மென்றால் அது ஏற்கனவே பின்தங்கிய மாநிலங்களாக உள்ள மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் முதலமைச்சர்களாக மட்டுமே இருக்க முடியும். சிவராஜ் சிங் சௌகான் முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்பு மத்தியப்பிரதேசத்தில் வெறும் 5 இலட்சம் டன்னாக இருந்த கோதுமை கொள்முதல், அவ ரது ஆட்சிக் காலத்தில் 85 இலட்சம் டன்னாக அதிகரித்தது. அது மட்டுமின்றி மத்திய அரசு அளிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை யைக் காட்டிலும் கூடுதலாக குவிண்டாலுக்கு நூறு ரூபாயை விவசாயிகளுக்கு அவரது அரசு அளிக்கிறது. இதே போன்று, சத்திஸ்கரில் அரிசி கொள்முதலில் முன்னேற்றத்தை ராமன் சிங் அரசு சாதித்துள்ளது. மேலும் ரேசன் கடைகளே இல்லாதிருந்த அந்த மாநிலத்தில் செயல்படுகின்ற பொது விநி யோக அமைப்பினை அவர் உருவாக்கியுள் ளார்.
குஜராத் ஒன்றும் பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் போன்று பின் தங்கிய மாநிலம் அல்ல. குஜராத் வளர்ச்சி குறித்த மோடியின் படாடோபமான பேச்சு களுக்கு அத்வானி இதனையே எதிர்வாதமாக வைத்தார். இரண்டாவதாக, பழைய கால பாவங்கள் அதைச் செய்தவர்களை பழி தீர்க்காமல் விடுவதில்லை என்பது வரலாறு உணர்த்தும் செய்தி. இதுவும் அத்வானிக்குத் தெரியும். பாபர் மசூதி இடிப்பிற்கு இட்டுச் சென்ற அத்வானி யின் 1990 ரத யாத்திரை அவப் பெயரிலிருந்து அவர் இன்னும் மீள முடியவில்லை என்பதை அவர் நன்கு அறிந்தவர் தானே? அதைத் துடைத்தெறியும் முயற்சியில் அவர் முகமது அலி ஜின்னாவைப் பாராட்டப் போக, ஆர். எஸ்.எஸ் கோபத்தை சம்பாதித்துக் கொண்ட தும் அதன் காரணமாக அதன் கட்டளைக்குப் பணிந்து அவர் பிஜேபி தலைவர் பதவியினை ராஜினாமா செய்ததும் தானே மிச்சம்? வரலாற்றினை மறுபடைப்பு செய்வதே அல்லது அதன் போக்கை மாற்றுவதே மோடியினால் கண்டிப்பாக இயலாது. அவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் பட்சத்தில் அது கண்டிப்பாக பிஜேபிக்கு பாதகமாகவும், மூழ்கும் கப்பலான காங்கிரசுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாகவும் மாறும் என்பதில் ஐயமில்லை.
தமிழில் : எம். கிரிஜா நன்றி - பிசினஸ் லைன் 12-06-2013
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------