தேங்காய்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
கறுப்பு
"புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு' என்ற அமைப்பு, சமீபத்தில், அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், "இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் என, 500க்கும் மேற்பட்டோர், வரிச்சலுகை தரும், சிங்கப்பூர் உட்பட, ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில், வங்கிக் கணக்கு துவக்கி, தங்களின் கறுப்புப் பணத்தை போட்டு வைத்துள்ளனர்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகத்தின் வரி மற்றும் வரி ஆய்வுப் பிரிவு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக அளவில் வரிச் சலுகை தரும் நாடுகளான, சிங்கப்பூர், பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு, கேமேன் தீவு, குக்ஸ் தீவுகள், சமாவோ தீவு உட்பட, சில நாடுகளை அணுகி உள்ளது.அந்த நாடுகளில், வங்கிக் கணக்கு வைத்துள்ள, இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் பற்றிய தகவல்களையும், அவர்களின் பணப்பரிமாற்ற விவரங்களையும் தரும்படி கோரியுள்ளது.
வங்கிக் கணக்கு விவரங்கள் உட்பட, சில தகவல்களை பரிமாறிக் கொள்ள, ஒரு சில நாடுகளுடன் ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதால், அந்த நாடுகளிடம், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், விவரங்களைத் தரும்படி, மத்திய அரசு கேட்டு உள்ளது. மற்ற நாடுகளை தூதரக ரீதியாக அணுகி உள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகளிடம் இருந்து விவரங்களைப் பெற்றவுடன், அவற்றில் எதுவும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது கண்டறியப்பட்டு, அதனடிப்படையில், மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, நிதி அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.