இந்த மாத்திரைகளை வாங்காதீர்கள் ...!


டெக்ஸ்ட்ரோ ப்ரோ பாக்ஸிபீன் (Dextropropoxy phene) என்ற பெயர் கொண்ட  வலி நிவாரணி மாத் திரை 1957ம் ஆண்டு அறி முகம் செய்யப்பட்டது.

இந்த மாத்திரையை உட் கொள்வதன் மூலம் ஹைபர் டென்சன், இதயவலி உள் ளிட்ட பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டன.
 ஏராளமானோர் மரணத் தைத் தழுவியது கண்டறி யப்பட்டது.
 இதனால் இந்த வலி நிவாரண மாத்திரை யை பல நாடுகள் தடை செய்துவிட்டன.
பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத் துவதாக கூறி உலகின் பல் வேறு நாடுகள் ஏற்கனவே தடை செய்துள்ள நிலை யில், இந்தியாவில் தற்போது அதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இந்த மாத் திரையை விற்கவோ, உற் பத்தி செய்யவோ, விநி யோகிக்கவோ கூடாது. இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக வும் அரசு உத்தரவில் தெரி விக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்ட வலி நிவாரணிகள் : இதேபோல் சளி, இரு மல் போன்றவற்றுக்கு கொடுக்கப்பட்ட பீனைல் புரப்பனோலெமைன்(பி.பி.ஏ.,), பல்வேறு வலிகளைப் போக் குவதற்காக கொடுக்கப் பட்டு வந்த “பெயின் கில் லர்’ மருந்துகளான னைஸ், நிமுலிட் மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த 2009ம் ஆண்டு  இரைப்பை நோய்களுக்கு கொடுக்கப் படும் இப்சிநார்ம், டிகாட், டிஜிப்ஸ், பாக்டீரியாவை அழிக்க அளிக்கப்படும் கெயிட்டி உள்ளிட்ட மருந் துகள் பக்க விளைவை ஏற் படுத்துகின்றன, என மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருந்து தொழில் நுட்ப ஆலோசனை வாரி யம் தெரிவித்ததை அடுத்து அந்த மருந்துகளுக்கு தடை விதிக் கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 அம்பானி கொள்ளை: 
பாதை வகுக்கும் மத்திய அரசு

                                                                                                                                  -கி.இலக்குவன்
 
ஒரு புதிய மெகா ஊழல் உருவாகி வருகிறது என்ற அதிர்ச்சியளிக்கும் எச்சரிக்கையை நாடாளுமன்ற உறுப்பி னர் குருதாஸ் தாஸ் குப்தா விடுத்துள்ளார் .
அவர் குறிப்பிடுவது இயற்கை எரிவாயு வின் விலை நிர்ணயம் குறித்து பெட்ரோலி யத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து, ஜெயபால் ரெட்டி பெட்ரோலியத் துறை யிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அத்துறை யின் அமைச்சராகியுள்ள வீரப்ப மொய்லி இந்தியாவில் உற்பத்தியாகும் இயற்கை எரிவாயுவின் விலை மேலும் அதிகமான அளவில் உயர்த்தப்படுவதற்கு ஆதரவாக பேசிவருகிறார்.
 திட்டக்குழுவின் துணைத் தலைவரான மான்டேக்சிங் அலுவாலியா வும் இதற்கு ஒத்து ஊதி வரும் நிலையில் மத்திய மின்துறை மற்றும் உரத்துறை அமைச்சகங்கள் இதனை எதிர்த்து வரு கின்றன. அவ்வாறு உயர்த்தப்பட்டால் அந்த விலை உயர்வு உரமானியங்கள் மற் றும் மின்சாரக்கட்டணங்களின் மீது கடு மையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ப தனாலேயே அவை இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த விலை உயர்வை மிகவும் குறைவாகக் கணக்கிட் டாலும் பல பத்தாயிரம் கோடி ரூபாய்கள் நுகர்வோரின் பைகளிலிருந்து எரிவாயு உற்பத்தியாளர்களின் பைகளுக்கு அதி லும் குறிப்பாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரியின் கஜானா வுக்கு மாற்றப்படும், எரிவாயு மற்றும் உர விலைகளுக்கு மானியம் வழங்கப்படுவ தால் இந்த விலை உயர்வு பொதுமக் களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அரசாங்கத்தின் நிதிப்பற்றாக்குறையை யும் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின்கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஒரு எம்பிடி அளவு எரி வாயுவை 2,34 அமெரிக்கடாலர் விலை யில் 17 வருடங்களுக்கு வழங்குவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டிருந்தது,ஆனால் இந்த விலை கட்டுப்படியாகாது என்று கூறி ஒப்பந்தத்திலிருந்து ரிலையன்ஸ் நிறு வனம் பின்வாங்கி விட்டது,
 பிரணாப்குமார் முகர்ஜி தலைமையிலான அமைச்சர் குழு இந்த விலையை 4,42 டாலர் என்ற அள வுக்கு உயர்த்திவிட்டது இதனையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் தேசிய அனல் மின் கழகத்துடன் செய்து கொண்ட ஒப்பந் தத்துக்கு மாறாக ஒரு எம்பிடி எரிவாயுவை 4,24 டாலருக்கு தான் விற்கமுயும் என்று கூறிவிட்டது. இதனால் கவாஸ் மற்றும் காந்தார் மின்நிலையங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, கோதாவரி எரிவாயுப்படுகை தொடர் பாக அரசாங்கத்துடன் லாப்ப்பகிர்வு ஒப் பந்தம் செய்து கொண்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனமானது இந்த விலையேற்றத்தால் அரசாங்கம் லாபம் ஈட்டிவிடக்கூடாது என்பதற்காக ஒரு தந்திரம் செய்தது, தனது உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரிக் கப்போவதாக அறிவித்து உற்பத்திச் செல வை அதிகரித்த்து.
 ஆனால் நடைமுறை யில் முந்தைய உற்பத்தியில் முக்கால் பங்கு அளவுக்கே உற்பத்தி செய்த்து இதற்கு இடதுசாரிக்கட்சிகள் நாடாளுமன் றத்தில் கடும் எதிர்பைப்பதிவு செய்தன.
அரசின் தணிக்கை அதிகாரி(சிஏஜி)யும் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தினார்.இது போதாது என்று கருதிய ஐ. மு. கூட்டணி அரசு ரிலையன்ஸ் நிறுவனத் துக்கு மேலும் லாபத்தை வாரி வழங்கு வதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளு நர் ரெங்கராஜன் தலைமையில் எரிவாயு விலை நிர்ணயக்குழு ஒன்றினை அமைத் தது, அக்குழு ஒரு விசித்திரமான பரிந் துரையை வழங்கியது. இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் 12 மாத சராசரி விலை மற்றும் அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஜப்பானில் நிலவும் எரிவாயு விலைகளின் அடிப்படையில் இந்தியாவில் உற்பத்தியாகும் எரிவாயு விலைகள் நிர்ணயிக்கப்படவேண்டும் என்று அது கூறியிருந்த்து,
 இந்திய மண் ணிலும் இந்தியக் கடல் பகுதியிலிருந்து கிடைக்கும் எரிவாயு இந்திய மக்களின் பொதுச்சொத்து, இதற்கு இறக்குமதி செய் யப்படும் எரிவாயுவின் சந்தை விலை யையோ அல்லது தானே எரிவாயுவை இறக்குமதி செய்யும் ஜப்பான் போன்ற நாடுகளின் சந்தை விலையையோ ஏன் நிர்ணயிக்கவேண்டும் என்பது ஆழம் காணமுடியாத பெரும் புதிராக உள்ளது இந் திய மண்ணில் எரிவாயுப்படுகைளை அமைப்பதற்கு தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு உரிம்ம் வழங்கப் படும் போது அவைகளின் உற்பத்திச் செலவுடன் நியாயமான லாபத்தைப்பெறும் வித்த்தில் விலை நிர்ணயிக்கப்படுவதை புரிந்து கொள்ளமுடியும் ஆனால் சர்வ தேச விலைகளின் அடிப்படையில் அவை கொள்ளை லாபம் ஈட்டுவதற்குத் துணைபோவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்.
எரிவாயுவின் விலை ஒரு டாலர் அதிகரிக்கப்பட்டாலும் கூட ஆண்டு ஒன்றுக்கு உரமானியம் ரூ 3135 கோடி என்ற அளவிலும் மின்உற்பத்திக்கான எரிபொருள் செலவு 10040 கோடி என்ற அளவிலும் அதிகரிக்கும் எரிவாயு விலை யை 2017க்குள் ஒரு எம்பிடி 8டாலர் முதல் 14 டாலர் என்ற அளவில் படிப்படியாக அதிகரிக்கலாம் என்று ரெங்கராஜன் குழு பரிந்துரைத்துள்ளது 8,8 டாலர் என்ற அளவில் உயர்த்தப்பட்டாலே உரமானியம் ரூ. 16992 கோடி என்ற அளவிலும் எரி பொருள் செலவு 43360 கோடி என்ற அள விலும் அதிகரிக்கும். இது அரசின் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு வெட்டப்படுவதற்கும் வரிச்சுமை மக்கள் தலைகளில் ஏற்றப்படுவதற்குமே இட்டுச்செல்லும் எரிவாயுவின் விலையை சர்வதேச சந்தையின் விலையுடன் இணைக்கும் மோசடி வேலையை இடதுசாரிக் கட்சி கள் எதிர்த்து வருகின்றன.
 பெட்ரோலிய அமைச்சக நாடாளுமன்றக்குழு உறுப்பின ரான தபன் சென் 2006 ம் ஆண்டு முதல் ஓமன் நாட்டின் எரிவாயுவிலை ஒரு எம்பிடி 0.77 டாலர் என்ற அளவிலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். உலக அளவில் இறை யாண்மை மிக்க வேறு எந்த நாட்டிலும் எரிவாயுவிலை சர்வதேச் சந்தை விலை யுடன் இணைக்கப்பட வில்லை என் பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எரிவாயு உற்பத்தி மின் உற்பத்தி போன்ற அனைத்தையும் தனியாரிடம் ஒப் படைத்த்தனால் ஏற்படும் தீய விளைவு களை நாடு சந்தித்து வருகிறது. இறக்கு மதி செய்யப்படும் நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளதால் ஏற்கெனவே செய்யப் பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலான மின்கட்டணத்துக்கு மின்சாரம் வழங்க முடியாது. டாட்டா மற்றும் அம்பானி போன்ற தனியார் மின் உற்பத்தி நிலை யங்கள் மறுத்துவருகின்றன,நாட்டின் இயற்கை வளங்களைப்பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு மலிவான கட்டணத் தில் மின்சாரம் போன்ற அடிப்படி வசதி களை வழங்குவதற்கு பதிலாக எரிவாயு வின் விலையை செங்குத்தாக உயர்த்தி அம்பானிகள் பல்லாயிரம் கோடிகளைக் கொள்ளை யடிப்பதற்கான பாதையைத் திறந்து விடுவதன் மூலம் அரசு சாதரண மக்கள் பக்கத்தில் இல்லை பணமூட்டை களின் பக்கத்தில் தான் , என்பது அம்பலமாகியுள்ளது.

நன்றி :தீக்கதிர்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?