விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள் அமைப்பின் நிதி திரட்டும் கட்டமைப்பு
2012 ஆம் ஆண்டில் தொடர்ந்தும் செயற்பட்டு வந்திருக்கிறது என்று அமெரிக்க
அரசுத்துறையின் 2012 ஆம் ஆண்டுக்கான
அறிக்கை கூறியுள்ளது.
அகதி முகாம்களில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களைக் கொண்டு செல்வதில் அந்த அமைப்பு தொடர்ந்தும் ஈடுபடுவதாக அமெரிக்க அறிக்கை கூறியுள்ளது.
இலங்கையில் யுத்தம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளிநாட்டு நிதிக் கட்டமைப்பு தொடர்ந்தும் நிலைபெற்று இருப்பதாவுகம் அதனை உடைப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினாலும், ஏனைய சில வெளிநாட்டு உளவு நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முழுமையாக வெற்றிபெறவில்லை .
சர்வதேச ரீதியிலான ஆட்கடத்தல் விவகாரத்தைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கட்டமைப்பு ரீதியாக அதில் தொடர்பு இருப்பதாக தகவல் கிடையாது .
அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் அல்லது அதன் ஆதரவாளர்கள் தனிப்பட்ட வகையில் அப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் .
------------------------------------------------------------------------------------------------------------------------------------