உலக அகதிகள் தினம்.

ஜூன் 20ம் தேதி, உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு உள்ள உரிமைகளை, திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
உலகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பு போன்றவற்றால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்தவர்கள், அகதிகளாக உருவெடுக்கின்றனர்.

கடந்த 6 மாதங்களில் மட்டும் 16 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து உள்ளதாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.

2011ம் ஆண்டு கணக்கின் படி, உலகளவில் 1 கோடியே 52 லட்சம் பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என, யூ.என்.எச்.ஆர்.சி., ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டவர்கள் பலர். இவ்வாறு அகதிகளாக உள்ளவர்களுக்கு, அந்தந்த நாடுகள் சிறப்பு திட்டங்கள் மூலம், மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
 அகதிகள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என யூ.என்.எச்.ஆர்.சி., வலியுறுத்துகிறது.
2012 ஆம் ஆண்டு மட்டும் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாகியுள்ளனர். 1994 ஆண்டுக்குப் பிறகு அதிகரித்த மிகக் கூடிய தொகை இதுவாகும். இன்றைய சூழ்நிலையில் அதிகளவு அகதிகளை உருவாக்கி வரும் நாடாக சிரியா முன்னேறி வருகின்றது. மொத்த அகதிகளில் 55% வீதம் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்தே இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மேலும் உலகில் அதிகளவு அகதிகளை (81%) உள்வாங்கும் நாடுகளாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளே திகழ்கின்றன. இது 10 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட 11% வீதம் அதிகமாகும்.

ஒவ்வொரு முறை நாம் கண் சிமிட்டும் போதும் அதாவது  4.1 செக்கன்களுக்கு ஒருமுறை ஒரு அகதி தற்போது உருவாகி வருவதாகத் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக 32 வருடங்களாக ஆப்கானிஸ்தான் விளங்கி வருகின்றது. இதில் 95% வீதமான ஆப்கான் அகதிகள் ஈரானிலும் பாகிஸ்தானிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
 இதற்கு அடுத்த 2 ஆம் இடத்தில் சோமாலியாவும் 3 ஆவது இடத்தில் ஈராக்கும் 4 ஆவது இடத்தில் சிரியாவும் 2012 ஆம் ஆண்டில் இடம்பிடித்துள்ளன. இதேவேளை 2013 ஆம் ஆண்டு இறுதிக்குள் இன்னும் 2 மில்லியன் மக்கள் சிரியாவில் இருந்து இடம் பெயரக் கூடும் என்றும் இவர்களில் கணிசமான அளவினரை ஐரோப்பிய நாடுகளும் ஏற்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிரியாவுக்கு அடுத்த இடத்தில் அதிகளவு அகதிகள் மாலி மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து வருவதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

பிறந்து வளர்ந்த தேசத்தை விட்டு, பஞ்சத்தில் அடிபட்டு, தஞ்சம் அடைய இடம் தேடி, அகதிகள் என்ற முத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அவலம். முகாம்களில், முகம் தெரியாமல், முகவரி தொலைத்து ஏங்கி தவிக்கும் உள்ளங்கள். வேற்று நாட்டவர்கள் என்ற கட்டுப்பாட்டில், திறந்த வெளியில் கைதிகளாக சிறைப்படுத்தப்படும் கொடுமை. துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்ததால் நிம்மதி இழந்த இவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் அல்ல; நலம் நாடி வந்தவர்கள். வன்முறையால் விரட்டப்பட்டவர்கள்.
போரில் உயிர் பிழைத்து, சொந்த நாட்டில் இருண்ட வாழ்க்கை வாழ்ந்து, அகதியாய் வந்த நாட்டிலும் உரிமைகள் இல்லை. என்றாவது ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையில் இவர்களது வாழ்க்கை, காலத்தின் போக்கில் கரைந்து கொண்டிருக்கிறது... 


--------------------------------------------------------------------------------------------------------------------------------------

கழுத்துவலி  

இளம் வயதினரையும் பாதிக்கிறது.

இதற்கு காரணம்  இன்றைய  உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது.
டிஸ்க் விலகல் என்பது கழுத்துப்பகுதியில் மற்றும் இடுப்பில் முதுகு தண்டுவடத்தில் எலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வு Intervertebral Disc என்றழைக்கப்படுகிறது. இது சில சமயம் பிதுங்கி வெளிவருவதுண்டு. இதனை Disc Prolapse என்கிறோம். டிஸ்க் விலகலை MRI Scan எடுத்து பார்ப்பதால் உறுதி செய்யலாம். கழுத்தில் சி2சி3, சி3சி4, சி4சி5, சி5சி6 போன்ற இடங்களில் டிஸ்க் விலக வாய்ப்புள்ளது.

அப்படி ஏற்பட்டால் கழுத்தில் கடுமையான வலி மற்றும் திரும்ப சிரமம், வலி கழுத்திலிருந்து கைகளுக்கு பரவும். சில சமயம் கைவிரல்கள் மரத்தது போன்ற உணர்வும், படுக்கையில் படுக்கக் கூட சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் குனிந்து நிமிர்ந்தால் தலை சுற்றல் வரும். தலையின் பின்புறம் காதின் பக்கங்களில் வலி வரும்.
சில சமயம் முதுகின் பக்கவாட்டில் நெஞ்சுப்பகுதியில் குத்தல் போல வலி ஏற்படும்.

 இளம்பெண்கள் சிலருக்கு திடீரென கை விரல்கள்,மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், கணுக்கால், கால் விரல்களில் வீக்கம், கடுமையான வலி ஏற்படும். அதிகாலை படுக்கையை விட்டு எழும்போது கைவிரல்களை மடக்க முடியாமல் மணிக்கட்டில் கடுமையான வலி உணவு அருந்தும்போது உணவை பிசைய முடியாத அளவு வலி, தோள்பட்டையை மேலே தூக்க முடியாமல் சிரமம், முழுங்கால் மூட்டு வீக்கம் என திடீரென தோன்றும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
இது மூட்டுவாத நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனை கண்டறிய சில ரத்த பரிசோதனைகள் உள்ளன.

 ரத்தத்தில் Ra Factor,Uric Acid, Asotire, ESR, Creactine Protein போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த நோயை கண்டறிய முடியும். மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடை படிப்படியாக குறைவது, பசியின்மை, மலகட்டு, பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வெப்பத்தன்மை, காய்ச்சல் வருவது போல உடல் முழுவதும் வலி, அசதி, தூக்கமின்மை என உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, பின் மனரீதியாகவும் மிகவும் பலவீனமாக காணப்படுவார்கள்.
  ஆயுர்வேத சிகிச்சை மூலம் இது போன்ற மூட்டு வலிகளை போக்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று பெரிய அளவிலாக அகதிகளாக இருப்பது ஈழத் தமிழர்களும் -சிரியர்களும்தான்.-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?