வாரத்திற்கு 40 மணி நேரமே உழையுங்கள்.
இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும்.
ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும்.
உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.
இதுகுறித்து மேலும் கூறிய ஆய்வாளர்கள், சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால் தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.
யாராக இருந்தாலும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர் என்றால் இப்போதே மாறி விடுங்கள்.
அது மட்டுமல்ல .நீங்கள் சிறு அளவிலாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் .
உடற்பயிற்சி செய்தால் உடல் மட்டுமின்றி உள்ளமும் புத்துணர்ச்சி பெறும் என்பதை அதை செய்து வருபவர்களுக்கு நன்றாக தெரியும்.
உடற்பயிற்சியில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு உறுப்பையும் பாதுகாக்க தனித்தனியாக பயிற்சிகள் உள்ளன. உடல் எடையை குறைக்க மட்டும் 35 வகையான பயிற்சி முறைகள் இருக்கின்றன.
உடற்பயிற்சியை செய்யும் முன், முதலில் இந்த பயிற்சிகளின் மீது நமக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது. விடாமுயற்சியோடு பயிற்சிகளை மேற்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். மனம் தளரவோ, ஒதுங்கி விடவோ கூடாது. மேலும், உடற்பயிற்சிக்கு தகுந்த சூழ்நிலை அவசியம்.
இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும். வீட்டில் ஜன்னலை திறந்து வைத்து கொள்ளுங்கள். பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கு இழுத்தலும் வெளியே விடுதலும் ஒரே சீராக நிதானமாக நடைபெற வேண்டும்.
புதிதாக பயிற்சி செய்பவர்களுக்கு ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. இதற்காக பயிற்சியை நிறுத்தி விடக் கூடாது. சிலர் சாப்பிட்ட பின்பு உடற்பயிற்சி மேற்கொள்வார்கள்.
இது தவறானது.
சாப்பிட்டவுடன் ஒரு போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இதேபோல், பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது.
சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டு பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.
பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாக செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில், குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
பிறகு படிப்படியாக நேரத்தையும், எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
தந்தி போல ஒரு வசதி,
தந்தி சேவை முடிவுக்கு வர உள்ள நிலையில் அதே மாதிரியான சேவையை குறைந்த கட்டணத்தில் நீண்ட காலமாக வழங்கி வருவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '' தந்தி சேவையை போன்றே ''ஈ,போஸ்ட்'' என்ற மின், அஞ்சல் சேவையை வழங்கி வருகிறோம். ஒரு பக்க (ஏ4) செய்தியை அனுப்ப 10 ரூபாய் மட்டுமே கட்டணம். தந்திக்கு வசூலிக்கும் கட்டணத்தை விட இது குறைவான கட்டணமாகும். அனுப்ப விரும்பும் செய்தியை அச்சிட்டோ, எழுதியோ கொடுக்கலாம்.
அதனை ஸ்கேன் செய்து முகவரியில் உள்ள அஞ்சல் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும். அங்கு அதனை அச்செடுத்து வழக்கமான கடிதம் போல் சம்பந்தப்பட்ட முகவரியில் பட்டுவாடா செய்யப்படும்.
கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட அஞ்சலகங்களில் மட்டுமே இந்த வசதி.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
C.F.L .பல்புகள் உடைந்தால்,
செய்ய வேண்டியவை...
ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது.
இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல் அசைவுகள், பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படும்.
ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படும்.
உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும். அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம். நொறுங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும்.
வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம்.
உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து, 'சீல்' செய்யவும். சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் ,பாதுகாப்பாக மறுசுழற்சி குப்பை சேமிப்பு கிடங்கில் சேர்க்க வேண்டும் .
சாதாரண குப்பைத் தொட்டியில் போட்டால் அதை சேகரிப்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------