இரண்டு மணி நேரம் மின் வெட்டு
தமிழகத்தில் மின் பற்றாக்குறை வர வர மிகவும்
மோசமடைந்து வருகிறது.
சென்னையில் மட்டும் ஒரு மணி நேரம் மின் வெட்டு மற்ற அனைத்து மாவட்டங்களிலும்
மின்வெட்டு 12 மணிமுதல் 15 மணி நேரம் வரைமின் வெட்டு நடைமுறையில் உள்ளது.
இதனால் பாதிக்கப் படுவது மக்களும்-தொழிலாளர்களும் மட்டுமல்ல மின் வாரிய ஊழியர்களும்தான்.
தற்போது தமிழம் முழுக்க ஆங்காங்கே மின்வாரிய
ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்து மின்வாரிய ஊழியர்கள் தாக்கப்படுவதாக தெரிகிறது.
. நேற்ற்றிரவு சென்னையை அடுத்த பொன்னேரியில் ஒரு ஊழியர்
தாக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த ஏப்ரலில் கூட சோ ழிங்கநல்லூரில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.
மின்வாரிய ஊழியர்கள் தங்களுக்குப்
பாதுகாப்புவேண்டுமென்றும், தங்களைத் தாக்குவோர் மீது நடவடிக்கை
வேண்டுமென்றும் கோருகின்றனர்.
ஆனால் தொடரும் மின்வெட்டின் காரணமாக மிகக்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீது நடவடிக்கை எடுத்து நிலையை
மேலும் சிக்கலாக்க அரசு விரும்பவில்லை . நேற்றுதான் மின்பற்றாக்குறை குறித்து உயர் மட்ட
அதிகாரிகள் கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்றது.
பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அதிகாரி ஒருவர் காற்றாலை உற்பத்தியில் கடும்
வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதன் காரணமாகவும், மத்திய இணைப்பிலிருந்து
மின்சாரத்தைக் கூடுதலாகப் பெறமுடியாத நிலையிலும் இத்தகைய மின்வெட்டு
வடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை இப்பிரச்சினை தொடரக்கூடும் என்று
கூறியிருக்கிறார்.
ஆனால் தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியக்கூட்டமைப்பின்
தலைவர் கே விஜயன்"
மக்களின் மீது நடவடிக்கை எடுத்து நிலையை
மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை என அதிகார வட்டாரங்கள் கூறுகின்றன.
நேற்றுதான் மின்பற்றாக்குறை குறித்து உயர் மட்ட
அதிகாரிகள் கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்றது. பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அதிகாரி ஒருவர் காற்றாலை உற்பத்தியில் கடும்
வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதன் காரணமாகவும், மத்திய இணைப்பிலிருந்து
மின்சாரத்தைக் கூடுதலாகப் பெறமுடியாத நிலையிலும் இத்தகைய மின்வெட்டு
வடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை இப்பிரச்சினை தொடரக்கூடும் என்று
கூறியிருக்கிறார்.தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியக்கூட்டமைப்பின் தலைவர் கே விஜயன்" ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.மின்விநியோகத்தை சரியான முறையில் அரசும் மின் வாரியமும் நிர்வகிக்கவில்லை,
சென்னைக்கு மட்டும் நாளொன்றுக்கு ஒரு மணிநேரமே மின்வெட்டு மற்ற பகுதிகளுக்கு பத்துமணிநேரத்திற்கும் மேல் என்பது எவ்விதத்திலும் சரியல்ல.
அரசியல் காரணங்களுக்காக இப்படிச் செய்கின்றனர்
; சென்னை மக்கள் தாங்களாகவே முன் வந்து சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள்.
இதெல்லாம் நதக்கிற செயல் இல்லை,வரும் மின்சாரத்தை சமமாகப் பங்கிடவேன்டும் .அப்படி பங்கிட்டால் தமிழகம் முழுக்கவே மூன்று மணி நேரம் மட்டும்தான் மின் வெட்டு இருக்கும்.அதை அரசிடம் கூறியும், அத்தகைய யோசனைகளுக்கு நிர்வாகம் செவி சாய்க்க வி ல்லை "
' என்று தெரிவித்த்துள்ளார்.
ஏன் ?
இந்த நல்ல யோசனை அரசுக்கு பிடிக்க வில்லை?
மக்கள் இன்னமும் நமக்கு வாக்களித்ததற்கு அழுந்த வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையா?
_______________________________________________________________________________________________ கடாபியின்"அவளோட ராவுகள்"
லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் கடாபி.
இவரை எதிர்த்து மக்கள் புரட்சி ஏற்பட்டது. ராணுவம் மூலம் மக்களை கொன்று குவித்தார் கடாபி. கடைசியில் அமெரிக்க ஆதரவு படையினரால் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி கொடுரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், பிரான்ஸ் நிருபர் அன்னிக் கோஜீன் என்பவர், கடாபியின் கொடுமைகள் பற்றி புத்தகம் எழுதி உள்ளார்.
அதில், பள்ளி மாணவிகளை கடாபி கடத்தி, செக்ஸ் அடிமைகளாக்கி சித்ரவதை செய்தார் என்று கூறியுள்ளார். கடந்த 2004ம் ஆண்டு சொராயா என்ற 15 வயது மாணவியை கடாபி கடத்தி சென்று எப்படி எல்லாம் செக்ஸ் சித்ரவதை செய்தார் என்பதை கோஜீன் தனது புத்தகத்தில் விரிவாக கூறியுள்ளார்.
கடாபியின் பிடியில் சொராயா 5 ஆண்டுகள் சித்ரவதை அனுபவித்துள்ளார். அவரது அரண்மனையில் ஏராளமான பள்ளி மாணவிகள் இருந்துள்ளனர். அவர்களை தன் சொல்படி நடக்கும் வகையில் கடாபி மாற்றி இருந்தார்.
கடாபியிடம் மாணவிகள் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்களோ அதேபோல் சொராயாவையும் செயல்பட கட்டாய பயிற்சி அளித்துள்ளனர். பல்வேறு வகையில் செக்ஸ் சித்ரவதைகளை அனுபவித்த மாணவிகள் பல ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களை குடும்பத்தினரே ஏற்க மறுத்து ஒதுக்கி உள்ளனர் என்று புத்தகத்தில் கோஜீன் ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார்.
சொராயாவின் பேட்டியும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் கடாபியின்
அந்தரங்க வாழ்க்கை பற்றி சொராயா பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார். இதனால்
பரபரப்புடன் புத்தகம் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகிலேயே மிக குள்ளமான சிறுமியாக சார்லட்
கள்சைட்டை கின்னஸ் சாதனை புத்தகம் அறிவித்துள்ளது.
5 வயதான இவள்
இங்கிலாந்தை சேர்ந்தவள்.
இவளது உயரம் 68 செ.மீட்டர். எடை 9 பவுண்டு. அதாவது
4 கிலோவுக்கும் குறைவுதான்.
தற்போது பள்ளியில்
படித்து வருகிறாள். இவளது தந்தை ஸ்காட் கார்சைட். தாயார் பெயர் எம்மா
நியூமேன். பிறக்கும்போது இவள் 25 செ.மீட்டர் உயரமே இருந்தாள்.
எடை 2
பவுண்டு அதாவது 900 கிராமே இருந்தது.
பொம்மைக்கு அணிவிக்கும் உடைகள் போன்று
மிக சிறிய உடைகள் இவளுக்கு அணிவிக்கப்பட்டது.