வாடிக்கை,- போராட்டங்கள்,

வாடிக்கையாகி விட்ட போராட்டங்கள், 
-----------------------------------------------------------
இப்போது அதிகமாக  தமிழ் நாட்டில் உழைப்பவர்கள் ,அல்லது நொந்து போய் இருப்பவர்கள் மின் வெட்டால் ,தண்ணீர் இல்லாமையால் ,விவசாயம் செய்யாமல்  இருப்பவர்கள் அல்ல .
அரசுக்கு எதிராக தமிழகம் முழுக்க ஆங்காங்கே நடக்கும் போராட்டத்தை சமாளிக்கும் காவல்துறையினர்தாம் .
மின் வெட்டு ,குடிநீர் வழங்கப்படாததைக்கண்டித்து தங்களுடைய எதிர்ப்பைகாட்ட, சாலை மறியால்  போராட்டம் நடத்தும் மக்கள் அதிகமாகி  விட்டனர் .
மி ன் வெட்டு, விலை உயர்வு, குடிநீர் பிரச்னை என, போராட்டங்களின் எண்ணிக்கை இப்போது தமிழகத்தில் அதிகரித்து விட்டது.
 பகல், இரவு பாராமல், இது போன்ற போராட்டங்களை அடக்க  காவல்துறை உழைக்கிறது.
ஒரு காவல்துறை அலுவலர் கூறியதாவது :
 "சமீப காலமாக, தமிழகத்தில் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. 
சாதாரண பிரச்னைக்குகூ ட மக்கள், சாலையை மறித்து போராட்டத்தில்  ஈடுபடுகின்றனர். அவர்களை சமாளிக்க முடியாமல், காவல் துறையினர்  திணற வேண்டியுள்ளது.
 தமிழகத்தில், கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன.
 முல்லைப் பெரியாறு , இம்மானுவேல் நினைவு தினம், கூடங்குள அணுமின் நிலையம், நபிகள் நாயகத்தை கேலிசெய்த அமெரிக்க திரைப்படம், ராஜபக்ஷே இந்தியா வருகை, 14 மணி நேர மின்வெட்டு, டீசல் விலை உயர்வு, போன்றவை அதில் முக்கியம்.
சாலையில் போராட்டம் நடத்திய மக்களை கலைக்க சில இடங்களில் தடியடி நடத்தியதால் பொது மக்களுக்கும்,காவலர்களுக்கும் மோதல் ஏற்பட்டு கல்வீச்சு போன்றவற்றால்  பல காவல்துறையினர்  காயமடைந்துள்ளனர்.
போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல், துப்பாக்கி சூடு வரை நடத்தி  விரட்டியுள்ளனர்.

ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்க் கட்சியினர் நடத்தும் போராட்டங்களின் போது, அவர்களை ஆயிரக்கணக்கில் கைது செய்து தங்க வைக்க, இடம் கிடைக்காமல் அலைந்தும்  உணவு, குடிநீர் வழங்கிவிட்டு  அதற்கான பணத்தை, எங்கே திருப்பி வாங்கிடவும்  தெரியாமல், அப்பாவிகளிடம் அடித்து பறிக்கும் கட்டாய சூழ்நிலைக்கும் போலீசார் தள்ளப்படுகின்றனர். சேலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு பிரச்னைகளுக்காக, பொதுமக்கள் சார்பில்,அடிக்கடி  போராட்டங்கள் நடக்கின்றன. 
இவற்றைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறி  வருகின்றனர்.நிம்மதியாக ஓய்வெடுத்து பல் நாட்களாகி விட்டன.அப்படியும் மக்களிடம் கெட்டப் பெயர்தான் கிடைக்கிறது.காரணம் ஆட்சியாளர்களை திருப்பதி படுத்தும் அதிகாரிகள் செயலால்தான் .

பிரச்னையை பெரிதாக்கக் கூடாது என்பதற்காக, முடிந்தளவு சமாதானப் பேச்சு நடத்துகிறோம். 
அது உதவாத நேரத்தில், கூட்டத்தைக் கலைக்க வேண்டி உள்ளது.
அப்போது, ஆயுதப்படையில் உள்ள காவலர்கள்  அடிக்க ஆரம்பித்து  விடுகின்றனர்; இதனால்,காவலர்களும் காயமடைகின்றனர். ஆனால், அதை யாரும் கண்டு கொள்வதில்லை.காவலர்களை மட்டும் கண்டிக்கின்றனர்.ஆனால் இப்போது அடிக்கடி என் தினசரி  போராட்டம், சாலை மறியால் நடக்கிறது.
 அவர்களை அப்புறப்படுத்த  எங்கள்  உயர் அதிகாரிகலும்,அதை கண்டித்து சில கட்சியினரும் எங்களைப் பாடாய் படுத்துகின்றனர்.
இன்றைய நிலையில் தமிழ் நாடு காவல்துறையில்  துறையில் பணியாற்றுவது என்பது மிகவும்  சிரமமான பணியாக உள்ளது."
இவ்வாறு அவர் வருத்தத்துடன் கூறினார்.
அவர் சொல்லுவது போல் காவல்துறையினரின் தற்போதைய நிலை கொஞ்சம் கவலைக்கிடமாகத்தான் உள்ளது.
இரு பக்கமும் இடிதாங்க வேண்டிய கட்டாயம் காவல்துறையினருக்கு.
அவர்களுக்கும்தான் மின்வெட்டு ,குடிநீர் ,விலைவாசி பிரச்னைகள் இருக்கிறது.அவர்களுக்கும் சேர்த்து போராடுவோர் ,காவல்துறையினர் ஆளுங்கட்சியின் ஏவல் காரர்கள் தான் இவர்கள் -மற்றபடி அவர்களும் மக்களில் அடக்கம்தான் என்பதையும் கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் .
______________________________________________________________________________________________

புதிய நிரோ 

ரோம் எரியும் போது நிரோ மன்னன் பிடில் வாசித்ததை படித்திருக்கிறோம் .நம் இந்தியாவில் அசாம் முதல்வர் தருண் கோகாய் அதை இப்போது உண்மையாக்கியுள்ளார்.
கடும் மழையில் தத்தளித்த அசாம் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. 
15 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
 18 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலியாயினர். பல  பேரை காணவில்லை.
அசாம் மாநிலத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவும், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையும் இரவு பகலாக மீட்புப் பணிகளை செய்து வருகின்றன.
அசாம் மாநிலம் முழுக்க நீரில் மிதக்க மக்கள் மிக  மோசமான நிலையில்  இருந்து வருகிறார்கள்.ஆனால் அதன் முதல்வர் தருண் கோகாய், ஜப்பானில் குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்றுள்ளார்.
மக்களுக்கு ஆதரவு வார்த்தைகளை கூட அவர் இன்னமும் ஜப்பானில் இருந்து வெளியிட வில்லை .வாக்களித்தவர்களுக்கு அவர் தரும் மதிப்பு  ரொம்ப நல்லாயிருக்கு.

==========================================================================
_

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?