சத்துணவும்-15 லட்சம் மரணமும்,
110 கோடிக்குமேல் மக்கள். சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. கலாச்சாரம், பாரம்பரியம் மிக்க நாடு.
புற்றீசல் போல் முளைக்கும் அரசியல் கட்சிகள். தனிமனித சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் கொண்ட நாடு. 10 கோடிக்குமேல் தொலைபேசி இணைப்புகள் கொண்ட நாடு. உலக வர்த்தகர்களை கவர்ந்திழுக்கும் நாடு. மத வழிபாட்டுத் தலங்கள் மிகுந்த நாடு. அவரவர் சமய, சம்பிரதாயங்களை நிறைவேற்றிக் கொள்ள உரிமை உள்ள நாடு.
இவையனைத்தும் இந்தியாவை உலகரங்கில் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும் விஷயங்கள். ஆனால், இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் உலக அரங்கில் இந்தியாவை தலைகுனியச் செய்துள்ள சம்பவம், 2011ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் ஐந்து வயதிற்குட்பட்ட 15.55 லட்சம் குழந்தைகள் போதிய ஊட்டச்சத்துணவின்மையால் உயிரிழந்துள்ளது என்ற யுனிசெப்பின் அதிர்ச்சித் தகவல்.இந்தியாவில் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி டன் உணவு தானியங்கள் மழை, வெயில் மற்றும் முறையற்ற விநியோகத்தின் காரணமாக பாழாகி வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வீணாகும் உணவுதானியங்களின் எண்ணிக்கை ஆண்டிற்காண்டு கூடி வருகிறதே, தவிர மக்களுக்கு ஒரு போதும் சென்றடைவதேஇல்லை.
உலகில் உள்ள மூன்று ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளில் ஒருவர் இந்தியாவில் இருக்கின்றார்.இந்தியாவில் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 46 சதவிகிதம் பேர் தங்களது வயதிற்கான அளவை விட மிகச் சிறியதாகவே உள்ளனர். அதேபோல், 47 சதவிகித குழந்தைகள் எடைகுறைவின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் ஊட் டச்சத்தின்மை பாதிப்பும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. இந்தியாவிலேயே மத்தியப் பிரதேசத்தில் தான் ஊட்டச்சத்தின்மை குறைபாடு (55 சதவிகிதம்) அதிகமாக உள்ளது. குறைந்த அளவு கேரளாவில் (27) பதிவாகியுள்ளது.
ஊட்டச்சத்தின்மை என்பது சத்துணவை வைத்து மட்டுமே கணக்கிடப்படுவதில்லை. சுகாதாரம், கருத்தரித்த பெண்களுக்கான சேவைகள் மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
ஒன்று முதல் மூன்று வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்கு தினசரி 1,046 கலோரிகளும், பெண் குழந்தைகளுக்கு 992 கலோரிகளும் தேவைப்படுகிறது. குழந்தை நான்கு வயதைத் தொடும் போது, இந்த கலோரிகளும் அளவும் கூடுகிறது. நான்கு முதல் 8 வயது வரையிலான ஆண் குழந்தைகளுக்கு 1,742 கலோரிகளும், பெண் குழந்தைகளுக்கு 1,642 கலோ ரிகளும் தினசரி தேவைப்படுகிறது. அதேபோல், இருவருக்குமான புரதச் சத்தின் அளவு இளம்பருவத்தினருக்கு அவர்களது எடைக்குத் தேவைப்படுவதைவிட, அதிகமாகத் தேவைப்படுகிறது.
இவையனைத்தும் சராசரி எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கானது. அப்படியெனில், எடைகுறைவான, காலத்திற்கு முன்பே பிறக்கும் குழந்தைகளுக்கு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது.உலகத்தில் போதிய சத்துணவின்றி நாளொன்றுக்கு 5 வயதிற்குட்பட்ட 19 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இதில் இந்தியாவில் தான் அதிகமாக இறப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டிற்கான குழந்தை இறப்புவிகித மதிப்பீடுகள் அறிக்கையை யுனிசெப் சமீபத்தில் வெளியிட்டது. அதில், இவ்வுலகில் 193 நாடுகளில் 5 நாடுகளில் மட்டும் தான் ஊட்டச்சத்தின்மையால் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் மட்டும் ஊட்டச்சத்தின்மை பிரச்சனை அதிகளவில் உள்ளது என்ற கருத்தை இந்த அறிக்கை தகர்த்தெறிந்துள்ளது. ஏனெனில், இப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்தியா.
கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் போதிய அடிப்படை வசதி மற்றும் சத்துணவு இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் 15.55 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இரண்டாவது இடத்தில் நைஜீரியா உள்ளது. இங்கு கடந்த ஆண்டில் 7.56 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. காங்கோவில் 4.65 லட்சமும், பாகிஸ்தானில் 3.52 லட்சம் குழந்தைகளும் இறந்துள்ளன.
ஆனால், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையைக் கொண்டுள்ள சீனாவில் கடந்த ஆண்டு 2.49 லட்சம் குழந்தைகள் மட்டுமே ஊட்டச்சத்தின்மையால் இறந்துள்ளன
.இந்த மரணத்திற்கான காரணங்களை யுனிசெப் ஐந்தாகப் பிரித்துள்ளது. அதில், குறைப்பிரசவத்தின் காரணமாக 14 சதவிகிதம் பேரும், டயாரியாவினால் 11 சதவிகிதம் பேரும், மலேரியாவினால் 7 சதவிகிதம் பேரும், எதிர்பாராத நோய்களினால் 9 சதவிகிதம் பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கானதும் தான் அரசாங்கம். ஆனால், அரசோ, ஊழல் குற்றவாளிகளை பாதுகாப்பதும், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும், முதலாளிகளுக்கு சேவை செய்யவும், அந்நியப் பணக்கார நிறுவனங்களுக்கு தங்களது வாசல்களைத் திறந்து விடவுமே முழு முயற்சி செய்து வருகிறது. இன்றைக்கும் நம் நாட்டில் பல கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லை.
இதனால் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை.நாட்டின் பல பகுதிகளிலும், மக்களுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்கள் கழிவுப் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை மக்களுக்கு சீரான முறையில் விநியோகிப்பதற்கான எந்த முன்முயற்சியையும் அரசு எடுக்கவில்லை.
அவற்றைச் செய்தாலே இந்தியாவின் ஊட்டச்சத்தின்மையால் ஏற்படும் இறப்பு விகிதத்தை கணிசமாக குறைக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
_______________________________________________________________________
நன்றி:தீக்கதிர்
____________________________________________________________________________________________________________
ஏசு மணம் செய்து கொண்டவரா?
ஏசுவானவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாதவராகத்தான் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆனால் ,இப்போது கிடைத்துள்ள பழமையான பேப்ரஸ் [பழைய காகித வகை]ஒன்றில் உள்ள ஆதார்ம் மூலமாக மூலமாக மேரி மக்தேனாலை அவர் தனது மனைவி என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
அதன் பின்பக்கத்தில் ' எனது தாயார்' ,'மூன்று' ஆகிய இரு வார்த்தைகள் மட்டும் உள்ளதாகவும் தெரிகிறது.
காணொளி: எதிர்பக்கம் தனியே தரப்பட்டுள்ளது.
இது முன் பக்கம்.இதில்தான் மனைவி விடயம் உள்ளதாம்.
இது பின் பக்கம்.இதில் என் தாயார் மற்றும் மூன்று என்ற வார்த்தைகள் மட்டும் உள்ளதாம்.
____________________________________________________________________________________________________________
ஏசு மணம் செய்து கொண்டவரா?
ஏசுவானவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாதவராகத்தான் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆனால் ,இப்போது கிடைத்துள்ள பழமையான பேப்ரஸ் [பழைய காகித வகை]ஒன்றில் உள்ள ஆதார்ம் மூலமாக மூலமாக மேரி மக்தேனாலை அவர் தனது மனைவி என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
அதன் பின்பக்கத்தில் ' எனது தாயார்' ,'மூன்று' ஆகிய இரு வார்த்தைகள் மட்டும் உள்ளதாகவும் தெரிகிறது.
காணொளி: எதிர்பக்கம் தனியே தரப்பட்டுள்ளது.
இது முன் பக்கம்.இதில்தான் மனைவி விடயம் உள்ளதாம்.
இது பின் பக்கம்.இதில் என் தாயார் மற்றும் மூன்று என்ற வார்த்தைகள் மட்டும் உள்ளதாம்.
explains what is on the papyrus fragment
'Proof' Jesus was married found on ancient papyrus that mentions how son of God spoke of his wife and Mary Magdalene.
நன்றி'Read more: http://www.dailymail.co.uk/news/article-2205235/Jesus-married-Proof-God-spoke-wife-Mary-Magdalene-ancient-papyrus.html#ixzz26ut5Gxa4