தேவையா இது?

இஸ்லாம் பற்றி யாரையா படம் எடுத்து தொலைத்தது .அவர்களை சீண்டாமல் இருக்க முடியாதா?
மற்ற மதத்தினரை கிண்டல் செய்தால் அவர்கள் அதை தங்கள் மீதான விமர்சனம் எடுத்துக்கொள்வார்கள்.
அல்லது கொஞ்சம் எதிர்ப்பை தெரிவித்து போய் அடுத்த வேலையை பார்ப்பார்கள்.

 முஸ்லிம்களிடம் கொஞ்சம் அதிகப்படியான மத உணர்வு இருப்பதால் அதை சும்மா விட  மாட்டார்கள்.
இதோ படத்தை அமெரிக்கா காரன் ஒருவன் எடுக்க ஒரு தூதரக அலுவலர் உட்பட இருவர் தங்கள் உயிரையே கொடுக்க வேண்டியதாய் போயிற்று. தேவையா இது?
எங்கோ மழை பெய்ய இங்கே இடி விழுகிறது சென்னைவரை கல்வீச்சு ,கலவரம் .வெளியில் போறதை எடுத்து எங்கோ விட்ட கதையாகிவிட்டது.
ஏசுவை கலாய்த்து படம் எடுங்க ஒன்றும் ஆக வில்லை என்பதால் அடுத்து கலைமகளை செருப்பிலும்,பிள்ளையாரை ஜட்டியிலும் அச்சிட்டு ஒன்றும் ஆக வில்லை .அதே தைரியத்தில் கையை வைக்கக் கூடாத இடத்தில் வைத்து பலனை அனுபவிக்கிறார்கள்.அமெரிக்கர்கள்.
அவர்கள் அனுபவிக்கட்டும்.ஆனால் அதற்காக  சம்பந்தமே இல்லாமல் சென்னை வாசிகள் ,தமிழ் நாட்டுக்காரர்கள் எதற்காக அல்லல் பட வேண்டும்.
இப்போ 86 பேர்கள் கைதாம் .அவர்களை விடுவிக்க இன்னும் கொஞ்சம் பேர் போராட தேவையா ?கூடங்குளம்  மண்டையடி அரசுக்கு போதாதா?
அமெரிக்கனால் இது வேறா ?


எவனோ படம் எடுத்து வைக்க , பாவம் .தனது உயிரை இழந்தவர். 

                                                    கிறிஸ்டோபர் ஸ்டிவெ ன்ஸ்  -___________________________________________________________________________________________
போராட்டக்களங்கள்  


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?