ஆயுளா? ஆண்மையா?

ஏதோ அந்த காலத்து  கோபாலகிருஷ்ணன் படத்தின் பெயர் போல் இருக்கிறதா?
ஆனால் இது இப்போதைய ஒரு சின்ன ஆய்வின் முடிவினால் வந்த கேள்விக்குறி? 
ஆண்களின் ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன்களே, அவர்களின் ஆயுட்காலத்தை குறைப்பதற்கான காரனமாகவும்  இருக்கக்கூடும் என்று  சமீபத்தில் ஆய்வின் முடிவு ஒன்று 
கோடிட்டு காட்டியுள்ளதாம். 
உலகம் முழுவதும் மனித இனத்தில் ஆண்களை விட பெண்களின் சராசரி வயது அதிகம்.
 இதற்கு என்ன காரணம் என்று மருத்துவ உலகில் நடக்கும் தொடர் ஆய்வுகளில், ஒரு பகுதி விஞ்ஞானிகள், ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் ஹார்மோன்கள், அவர்களின் ஆயுளை குறைப்பதில் முக்கிய பங்காற்றலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
அதாவது ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் டெஸ்டஸ்ட்ரோன் என்கிற ஆண்களின் பாலின தன்மைக்கான ஹார்மோன்கள், ஆண்களின் விதைப்பைகளில் பெருமளவு உற்பத்தியாகிறது. 
இந்த டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் ஆண்களின் நோய் எதிர்ப்புத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும் ஆண்களின் இதயத்தை வலுவிழக்கச்செய்யக்கூடும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட வர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன ர்.
இவர்களின் இந்த சந்தேகம், மருத்துவ விஞ்ஞான உலகின் ஆய்வு நெறிகளுக்குட்பட்ட ஆய்வுகள் மூலம் இதுவரை முழுமையாக நிரூபிக்கப்படவில்லை .
ஆனாலும் இவர்கள் கூறும் சில செய்திகள் நமக்கும் அதை நம்பலாமா என்ற சந்தேகத்தை தருகிறது .
விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் ஆயுட்காலம் மற்ற ஆண்களின் சராசரி ஆயுட்காலத்தை விட அதிகரிக்கிறதா என்கிற ஆய்வின் முடிவில் தான் கணக்கிட முடியும். 
இப்படியான ஆய்வுகள் இதுவரை முழுமையாக நடக்கவில்லை .
ஆனால் ஒரு  புதிய ஆய்வின் முடிவு இவர்களின் கருத்தை நம்பச்செய்துவிடும் போல் இருக்கிறது.
கொரியாவில் பதினாறாம் நூற்றாண்டில் துவங்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உயிர்வாழ்ந்த விதைப்பை அகற்றப்பட்ட ஆண்கள், அதாவது திருநங்கைகள் போன்றவர்களின் ஆயுட்காலம் பற்றிய புள்ளி விவரங்கள் தற்போது கிடைத்திருக்கின்றன.
அப்போது கொரியாவில் ஆட்சியில் இருந்த கோசுன் பேரரசில் பருவ வயதுக்கு வருவதற்கு முன்னரே விதைப்பைகள் அகற்றப்பட்ட திருநங்கைகள் அரண்மனை காவலுக்கு வைக்கப்பட்டிருந்தனர். 
இப்படி அரண்மனையில் முக்கிய பணியில் இருந்த திருநங்கைகள் 81 பேரின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்த இன்ஹா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கியுங் ஜின் மின்:
 "இவர்கள் அனைவரும் சராசரியாக எழுபது வயது வரை உயிர் வாழ்ந்திருப்பதாக கூறுகிறார்.
 இதில் மூன்றுபேர் நூறு வயதுக்கும் மேலாக உயிர்வாழ்ந்திருக்கிறார்கள்.
இவர்களை பணியில் அமர்த்திய  அரசர  இன  ஆண்களின் சராசரி வயது வெறும் 45 என்றும், அரண்மனையில் இருந்த மற்ற ஆண் அதிகாரிகளின் சராசரி வயது 50 தாண்டவில்லை என்றும் கூறும் இந்த பேராசிரியர், இவர்களின் வாழ்க்கைச் சூழல், வசதி வாய்ப்புகள் போன்றவை கூட இவர்களின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருந்திருக்கலாம் அந்த காரணிகளைவிட ஆண்தன்மைக்கான டெஸ்டஸ்ட்ரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் விதைப்பைகள் நீக்கப்பட்டதே திருநங்கைகளின் ஆயுட்காலம் அதிகரிக்க முக்கிய காரணி"
 என்று அவர் அடித்து கூறுகிறார்.
"ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் வாதப்படிக்கு ஏற்கத்தக்கதாக இருந்தாலும் இவற்றை இறுதியானதாக கொள்ளமுடியாது" என்கிறார் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் கிளான்ஸி. 
வேறு சில ஆய்வுகளில் விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் வயதுக்கும் நீக்கப்படாத ஆண்களுக்கும் சராசரி வயதுக்கும் இடையில் பெரிய வேறுபாடு காணப்படவில்லை என்பது அவர் வாதம் .

இவர்கள் இப்படி கூ றிவிட்டாலும் " டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு பாலியல் நாட்டம் இருக்காது .
ஆயுளை நீடிக்க   தங்களின் ஆண்மையை பறிகொடுக்க ஆண்கள் விரும்புவார்களா?
மேலும் இது ஒரு ஆய்வாளரின் கருத்து மட்டுமே .
அறிவியல் உண்மையாக இதுவரை நிருபிக்கப் படவேயில்லை.
_______________________________________________________________________________________________

36000 டன் உணவு வீண் ?

நாட்டில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில், கடந்த ஐந்தாண்டுகளில், 36 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக, அதிர்ச்சித் தகவல் தகவல் உரிமை சட்டம் 
மூலம் வெளியாகியுள்ளது. 
இப்படி  வீணடிக்கப்பட்ட இந்த உணவு தானியங்கள் மூலம், எட்டு கோடி மக்களின், பசியை போக்கி இருக்க முடியும்.
தேஜிந்தர் பால் சிங் பக்கா என்பவர்,
 "கடந்த ஐந்தாண்டுகளில், இந்திய உணவு கழகத்துக்கு (FCI,) சொந்தமாக, நாடு முழுவதும் உள்ள சேமிப்புக் கிடங்குகளில், எவ்வளவு உணவு தானியங்கள் கெட்டுப்வீணாகப்  போயின?
 அதன் மூலம்  சராசரி மக்களின் எத்தனைப் பேரின் பசியை 
போக்கியிருக்கலாம் ?"
என்ற , விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்டிருந்தார்.

அதற்கு இந்திய உணவு கழகம் கொடுத்த  பதில்:
நாடு முழுவதும் உள்ள, இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில், சேமித்து வைக்க முடியாமல், 2008லிருந்து, இதுவரை, 36 ஆயிரம் டன், உணவு தானியங்கள், பயன்படுத்த முடியாத அளவுக்கு, கெட்டு போயின.
 இதில், அதிகபட்சமாக, இந்தியாவின் உணவு தானிய களஞ்சியம் என அழைக்கப்படும், பஞ்சாபில் தான், 19.290 ஆயிரம் டன், உணவு தானியங்கள், அழுகி விட்டன. 
மேற்கு வங்கத்தில் உள்ள, அரசு உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்குகளில், 4,545 டன், உணவு தானியமும்,
 குஜராத்தில், 4,290 டன்னும், அழுகி விட்ட து.
வீணான இந்த, 36 ஆயிரம் டன் உணவு தானியத்தின் மூலம், ஒரு நாளைக்கு, 440 கிராம் என்ற அளவில், எட்டு கோடி பேரின் பசியை போக்கி இருக்க முடியும். இவ்வாறு அந்த பதிலில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் இப்படி வீணான உணவு தானியங்களை அதற்கு முன்பே ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கக் கூறியதை மத்திய அரசு மறுத்து விட்டது நினைவிருக்கலாம்.எலிகளுக்கு கொடுத்தாலும்,ஏழைகளுக்கு கொடுப்பது பாவம் அல்லவா?

 




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?