"இந்தியாவை விற்பதற்கான நேரம் வந்து விட்டது.'

நிலக்கரி விவகாரத்தை மறைக்க மத்திய அரசு இப்போது புதிய விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. 
சில்லரை வணிகத்தில் அந்நியர்களை விடுவதன் மூலம்  இன்னமும் பல லட்சம் கோடிகளை இந்தியாவுக்கு இழப்பீடு செய்ய முடிவெடுத்துள்ளது.  
சில்லரை வர்த்தகத்தில்  51 சதவீதம் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அமைச்சரவை நேற்று அதிரடி முடிவு எடுத்துள்ளது. 
இதன் மூலம், சில்லரை வியாபாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். 
சாதாரண மக்களுக்கு பல வகையில் பலன் கிடைக்கும் என்று கதை விடுகிறது.  அதில் பலன் காங்கிரசுக்கும்,அமெரிக்கர்களுக்கும்தான் கிடைக்கும்.சாதாரண மக்களுக்கு என்ன இலவசமாகவா பொருட்களை கொடுக்கப் போகிறார்கள் ?
சில்லரை வர்த்தக சக்கரவர்த்தி வால்மார்ட் தான் இந்திய வர்த்தகத்தையே முழங்கப் போகிறது.
இப்போதைய வால்மார்ட்டின் ஆண்டு வருமானம் இந்திய மொத்த பட்ஜெட்டை விட அதிகம் .அது இன்னமும் அதிகரிக்கப் போகிறது. அந்த ஒரு நன்மைதான் .
 அதர்க் அனுமதித்ததால் இனி அமெரிக்கப் பத்திரிகைகளில் மன்மோகன் சிங் செயல்படும் பிரதமராக எழுதப்படுவார். 
மன்மோக ன் ,சோனியா-காங்கிரசு அமெரிக்காவில் தங்கள் சொந்த வேலைகளை எளிதாக முடித்துக் கொள்ளலாம். 
மற்ற படி இந்திய சின்ன வியாபாரிகள் தங்கள் தொழிலையும் -வாழ்வையும் தொலைக்கப் போகிறார்கள். அவர்களிடம் பணி புரியும் தொழிலாளர்கள் தங்கள் வேலை யை இழப்பார்கள். 
மன்மோகன் சிங்-சோனியா கூட்டத்திற்கு சுவிஸ் வங்கி கணக்கில் இன்னமும் பணம் சேரும்.
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே  மத்திய அரசு முடிவு செய்தது.
 அப்போது இடதுசாரி கட்சிகள்,உட்பட சில கட்சிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 
மத்திய அரசின் முடிவை கண்டித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து, நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இப் போது  , பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம்  நடந்தது. 

இதில் பல்வேறு முக்கிய இந்திய மக்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கப் பட்டன.
சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம் அளவுக்கு நேரடி அன்னிய -அமெரிக்க முதலீட்டை அனுமதிப்பது என்ற மிக தவறான முடிவும் எடுக்கப்பட்டது.
மேலும் எடுக்கப்பட்ட இந்திய நலனுக்கு எதிரான முடிவுகள்.
*தகவல் ஒளிபரப்பு துறையில் 74 சதவீதம் அனுமதி.


*விமான போக்குவரத்து துறையில் 49 சதவீதம் அனுமதி.


* ஹிந்துஸ்தான் காப் பர் (9.59 சதவீத பங்குகள்), ஆயில் இந்தியா (10 சதவீத பங்குகள்), எம்.எம்.டி.சி., (9.33 சதவீத பங்குகள்), நால்கோ (12.5 சதவீத பங்குகள்) ஆகிய 4 பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளை விற்பது என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘நாட்டில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது.  போராட்டங்களை எதிர்க்கொள்ள வேண்டிய நேரம் இது’’ 
என்றுள்ளார்.

இதை அவர் இவ்வாறு கூ றியிருக்கலாம் :
"இந்தியாவை அன்னியருக்கு விற்பதற்கான நேரம் வந்து விட்டது. அதை எதிர்த்து நடக்கும் போராட்டங்களை வழக்கம் போ ல் வாயை மூடி எதிர்கொண்டு ஓய்த் து விட வேண்டும் ."
-இதுதான் அவர் பேச்சின் உண்மையான பொருள்.
 அவர் ஒன்றை இப்போது நன்றாக  உணர்ந்து இருப்பார் .அடுத்த தேர்தலில் காங்கிரசு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அதற்குள் செய்யவேண்டியதை செய்து முடித்து விடுவோம். 

குறிப்பு:புகைப்படங்கள் அனுபவிக்கவே போடப்படுகின்றன .
நீங்களாக செய்திக்கும் அதற்கும் தொடர்பிருக்குமோ என யோசிக்க கூடாது .
_________________________________________________________________________________அமெரிக்கப் பத்திரிக்கைகள் இனி பிரதமரைப் புகழும் என்று சொல்லி பதிவை வெளியிட்டுசிலமணிகள்தான் ஆகியுள்ளது.
அதற்குள் தினமலரில் வந்த செய்தி.கீழே:
பிரபல நியூயார்க்டைம்ஸ் பத்திரிகை: இந்தியாவில் மந்தமாக இருந்த பொருளாதாரம் மெல்ல, மெல்ல வளர்ச்சி அடைய நல்லவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதமர் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மத்தியில் இந்த எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்புக்களை உருவாக்கிட இது உதவும். பல்வேறு துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியிருப்பது கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் இது பெரும் பொருளாதார சாதனை ஆகும். இதில் மத்திய அரசு மாற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் குவியும். இவ்வாறு தெரிவித்துள்ளது. 
இது போல வால்ஸ்டீரிட் ஜெர்னல், வாஷிங்டன்போஸ்ட் உள்ளிட்ட முக்கிய பத்திரிகைகளும் பிரதமர் முடிவை வரவேற்றுள்ளது. இவர் பொறுப்பேற்ற 2004 முதல் தற்போது எடுத்திருக்கும் இந்த முடிவு கடும் விமர்சனத்திற்குள்ளாகும் என்றாலும் பெரும் வளர்ச்சியை தருவதுடன் உலகளாவிய முதலீடு இந்தியாவுக்கு கிடைக்கும் என வாஷிங்டன்போஸ்ட் கூறியுள்ளது.
ஆக இரு வாரத்துக்கு முன் இந்திய பிரதமர் ஒரு செயல்படா பிரதமர்.வாயைத்திறந்து சாப்பிடவே ஆயிரம் முறை யோசிப்பார்.இதுவரை இப்படி ஓரு செயலற்ற பிரதமரை பார்த்ததே இல்லை என்று எழுதியதெல்லாம் என்னவாயிற்று.?
அதற்குள் பீமபுஷ்டி அல்வா தின்று உடலை தேற்றி  செயல்பட ஆரம்பித்து விட்டாரா? 
அவர்கள் சொல்லியபடி செய்யாவிட்டால் செயலற்றவர்.அவர்கள்கட்டளைப்படி நடந்தால் பொருளாதார நிபுணர்-மேதை.என்ன கதையாக இருக்கிறது.?
___________________________________________________________________________________________________________
உலகில் ஒவ்வொரு துறையிலும் நிகழ்த்தப்படும் சாதனைகளை கின்னஸ் சாதனை புத்தகம் வெளியிட்டு வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான இப்புத்தகம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் உலகிலேயே உயரமான நாய் சாதனை பட்டியலில் `கிரேடேன்' ரகத்தை சேர்ந்த `ஷியஸ்' என்ற பெயருடைய நாய் இடம் பெற்றுள்ளது.


இந்த சாதனைக்குரிய நாய் தனது பாதத்தில் இருந்து தோள் வரையில் 44 அங்குலம் (3 அடி 8 அங்குலம்) உயரம் இருக்கிறது. மொத்தம் 70.3 கிலோ (155 பவுண்ட்) எடை இருக்கும் இந்த நாய் தினமும் சுமார் 14 கிலோ உணவை உட்கொள்வதாக கூறப்படுகிறது. இதன் உரிமையாளர் அமெரிக்காவில் மிஷிகன் பகுதியில் வசிக்கும் டேனிசி டோர்லே ஆவார். இவர் கூறுகையில், தனது இந்த அன்புக்குரிய நாயை வெளியே அழைத்து செல்ல வேன் ஒன்றை பயன்படுத்துவதாக கூறுகிறார்.

இதற்கு முன்பு கிரேட் ஜார்ஜ் என்ற நாய் சாதனை பெற்று விளங்கியது. ஷியஸ் ஒரு அங்குலம் கூடுதல் உயரத்தை எட்டியதால் அதை முறியடித்து சாதனை பட்டியலில் இடத்தை பிடித்து விட்டது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?