புலிகள் பயம்


முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரான பொட்டம்மான் உயிருடன் தப்பித்துள்ளதாகூறப்படுகிற து.

இதனை இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போர் முள்ளிவாய்க்காலில் நிறைவடைந்தது.


போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பலர் இலங்கைப் படைகளால் கொல்லப்பட்டனர்.


ஆனால் விடுதலைப் புலிகளின் சில தலைவர்களின்  நிலைமை மர்மம் நீடித்து வந்தது.


இலங்கை அரசும் சரி, அரச படைகளும் சரி பொட்டம்மானின் நிலைமை பற்றி இது வரை எந்த அதிகாரப்பூ ர்வமான  செய்தியையும் வெளியிடவில்லை.

இறுதியாக பொட்டம்மான் 2009 மே 13 ஆம் திகதி சக விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலருடன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் தப்பித்துள்ளதாக ஒரு அரசியல்வாதி தனது நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்துள்ள தாக  தற்போது உறுதியாகத் தெரிய வந்துள்ளது.
மேலும் விடுதலை ப்புலிகள்  இப்போது நிதி திரட்டிவருவதாகவும் போர் முடிந்து முன்றாண்டுகளுக்குப்பின் புலிகள் அணிதிரளுவதாகவும்  இலங்கை அரசு கவலைப்பட ஆரம்பித்துள்ளது.
பல நாடுகளுக்கு புலிகள் நிதி சேகரிக்க தடை விதிக்க கடிதம் அனுப்பியுள்ளது.
இவைகளில் பிரபாகரன் நிலை பற்றி எதுவும் வெளியாகவில்லை.
நம்மில் சிலர் கூறுவது போல் அவர் தலைமறைவாக உயிருடன் இருந்தால் இன்னமும் வாளாவிருப்பாரா? 
_____________________________________________________________________________________________

சட்டத்தின் ஆட்சி  
________________
நம்ம தமிழ்நாட்டில்தான் கொஞ்சம் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றிருந் தால்  உ.பி. அதை விட மோசமாக இருக்கிறது. 
உ.பி.யில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பிடித்தது.முதல்வராக மார்ச்15-ம் தேதி அகிலேஷ் யாதவர் பதவியேற்றார். 
அப்போது மாநில சட்டம் ,ஒழுங்கு கட்டிகாக்கப்படும் என உறுதியளித்தார். 
 ஆனால் கடந்த ஆறு மாதங்களில் நடந்துள்ள குற்றச்சம்பவங்கள் அவரது ஆட்சிக்கு கவலையை தந்துள்ளது. .
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வராக அகிலேஷ் பதவியேற்ற கடந்த ஆறு மாதங்களில் இதுவரை 

  • 2,437 கொலைகள், 
  • 1100 பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள்,
  •  450 கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 
  •  ரேபரேலி, கோஸிகலான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடந்த வன்முறை சம்பவங்களால் , சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு , ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அகிலேஷ் அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் ‌கடும் குற்றப்பின்னணி உடையவர்கள் .

தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளன்றே , 
 ஒரு சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.ஒருவர் தனது வெற்றியை கொண்டாட துப்பாக்கியால் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டார். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் ஏற்பட்டது. ஒருவர் பலியானார். 
அப்போ‌தே குண்டர் கள் ஆட்சி  துவங்கிவிட்டது.
போலீஸ் நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வியே காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. மேலும் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் மீண்டும் ரெளடிகள் ராஜ்யம் தலைதூக்கியுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து முதல்வர் அகிலேஷ் கூறுகையில் , போலீஸ்துறையில் நிறைய குளறுபடிகள் உள்ளன. விரைவில் களையடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனி‌டையே நேற்று காஸியாபாத் நகரின் மசூரி போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதில் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்தனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?