தேவையற்ற மத சீண்டல்கள்....

மேலை நாட்டினருக்கு என்ன ஆனது.

தேவையே இல்லாமல் பிற மதத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதே பொழுது போக்காகிவிட்டது.
ஏசுவை பற்றி சில கருத்துக்களை விட்டனர்அவை அவர்கள் சார்ந்த மதம் என்பதால் பிரச்னை வெடிக்காமல் போய் விட்டது.
அடுத்து முகமது நபியை கேலி செய்து கருத்துப்படம் வெளியிட்டு வாங்கிக்கட்டிக் கொண்டார்கள்.
பிள்ளையாரை செருப்பிலும்,சரஸ்வதியை ஜட்டியிலும் படமாக்கி அசிங்கப்பட்டுக்கொண்டார்கள்.
இப்போது மீண்டும் முகமது நபியை கேலி செய்து பிரான்ஸ் கேலிப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே இசுலாம் மதத்தை விமர்சித்து குறும்படம் வெளிட்டவர் அமெரிக்கர் என்பதால் அமெரிக்காவுக்கு எதிராக உலகம் முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிற நிலையில் இது தேவையா/
லிபியா அமெரிக்க தூதர் உட்பட் 30 பேர்கள் உயிரை இந்த குறும்படம் குடித்துள்ளது.
இப்போது பிரான்ஸ் முறையா?


கேலிச் செய்திகளை வெளியிடும் பிரெஞ்சு பத்திரிகையான சார்லி ஹெப்டோ இருபது படங்களை வெளியிட்டுள்ளது.
"இது பற்றி பிரான்ஸ் அரசு மிகவும் கவலையடைந்துள்ளதாக" வெளியுறவு அமைச்சர் லாரேண் ஃபாபியே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முகமது நபியை கேலி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட குறும் படம் வெளியானது, அதையடுத்து அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை கிண்டல் செய்தே  கேலிச் சித்திரங்களை சார்லி ஹெப்டோ வெளியிட்டுள்ளது.

இது முதல் முறையல்ல முன்பு 2011நவம்பர் மாத பத்திரிக்கையிலும் இது போன்று முகமது நபி கேலிச் சித்திரங்களை அந்தப் பத்திரிகை வெளியிட்ட போது, அதன் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.


இந்த கேலிச்சித்திரங்கள் பயத்தால் இருபது நாடுகளில் உள்ள தமது தூதரகங்கள் தற்காலிகமாக மூட பிரான்ஸ் உத்திரவிட்டுள்ளது.
இதுதான் ஏசுவின் உண்மையான உருவமாம்.
ரும்வெள்ளிக்கிழமையன்று அந்த20 
நாடுகளில் தொழுகைக்கூட்டங்கள்
மூலம் பதட்டங்கள் உருவாலாம்
என்றே பிரான்ஸ் இந்த 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை
எடுத்துள்ளது.

இந்துக்கள்,கிறித்தவர்கள் கடவுள்களை அவமதித்தால் அப்படிஒன்று ஆகிவிடாது.ஆனால்இசுலாமிய இறைவனை விமர்சித்தால் ...........
அந்த பயம் இருக்கட்டும்.


முலாயம் முறுக்கு கடை
=========================


முலாயமும் மம்தா வழியில் அரசுக்கு ஆதரவை விலக்கிக்கொள்வார் என்று சிலர் கூறுவதை பார்க்கும் போது அவர்கள் இதுவரை இந்திய அரசியல் குழறுகளையும் தலைவர் முலாயம் சிங் பற்றியும் சரிவர புரிந்து கொள்ளாதவர்கள் என்றுதான் வகைப்படுத்த முடிகிறது.
எப்போதெல்லாம் மன்மோகன் சிங் அரசு தனது அமெரிக்க கட்டளையை நிறைவேற்ற முயற்சித்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறதோ அப்போதெல்லாம்
மனமோகனை கொஞ்சம் திணற வைத்து ரொம்ப முறுக்கிக் கொண்டு பின் ஓடிப்போய் கை கொடுப்பதுதான் முலாயமின் வாடிக்கை.
அதன் மூலம் தனக்கு ஆக வேண்டிய காரியங்களை சாதித்துக்கொள்வது அவர்  பாணி.
ம்னமோகன் சிங்குக்கு மட்டுமல்ல தலைவர் முலாயம் சிங்குக்கும் அமெரிக்காதான் ராஜ குரு.இருவருமே அவர்களின் பொருளாதார அடியாள்கள்தான்.
முலாயமின் இந்த கூடிவிட்டு கூடு பாயும் வித்தைதான் இதுவரை மூன்றாம் அணியை வலுவாக உருவாக்க முடியாததற்கும்,அது கனவு அணியாக வே போனதற்கும் காரணம்.
அவர் மட்டுமல்ல உத்திர பிரதேசத்தில் அவரின் அரசியல் எதிரியான மாயாவதிக்கும் இதே அரசியல் நிலைதான்.
அந்தவகையில் இருவரும் காங்கிரசை வரவேற்று  ஒரே குரலில் பாடுவதற்கு பின்னணி இசையாக இசைப்பது சி.பி.ஐ.வழக்குகள் நீர்த்துப்போகும் ஒலி லயம்தான்.
இந்த விடயத்தில் நம்மவூர் கருணாநிதி கொஞ்சம் பிழைக்கத்தெரியாதவர்.
இல்லையென்றால் கனிமொழியை திகாருக்கு அனுப்பியிருப்பாரா?
------------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவு எழுதியது 19/9/12 காலை.பதிவேற்றம் இரவு செய்யும் முன்னரே பதிவில் உள்ளபடி முலாயம் முறுக்கு தணிந்து காங்கிரசு ஆதரவு நிலைக்கு செல்வார் என செய்திகள் வர ஆரம்பித்து விட்டன.
------------------------------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?