SURAN/09/6,



மவுனமே வார்த்தையாய் 
 ====================
"2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு, ஆதர்ஷ் நில முறைகேடு, காமன்வெலத் முறைகேடு, எஸ்-பேண்ட் முறைகேடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு என ஒட்டுமொத்த இந்திய நாடே, ஊழலில் சிக்கித் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் ‌மன்மோகன் சிங் தொடர்ந்து வாயை மூடி மவுனம் காத்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.
பிரதமரின் தொடர் மவுனம், நாட்டை சோகப்பாதைக்கு அழைத்துச் செல்லும் "என்று அமெ ரிக்க இதழான வாஷிங்டன் போஸ்ட்  செய்தி வெளியிட்டுள்ளது.

'நாடே ஊழலில் சிக்கி திளைத்துக்கொண்டிருக்கும் போது, பிரதமர் தொடர்ந்து மவுனம் காத்து வருவதன் மூலம் கோழைத்தனம், மனநிறைவு மற்றும் அறிவார்ந்த நேர்மையின் மூலம் ஊனமுற்றவராக பிரதமர் மன்மோகன் சிங் இருப்பதாக அக் கட்டுரையில்  அரசியல் பகுதி எழுதும்  ராமச்சந்திர குகா கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் இப்படி எழுதியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரசு கட்சி பொங்கி எழுந்துள்ளது.
"எங்கள் கட்டுரையில் எந்த தப்பான கருத்து எதுவும் இல்லை. ஆகையால் நாங்கள் மன்னிப்பு கேட்கபோவதில்லை. கடந்த ஜூலை மாதம் பிரதமர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேட்டி எடுக்க அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை. மேலும் நாங்கள் செய்தி வெளியிடபோவது பிரதமர் அலுவலகத்திற்கும் தெரியும்" என்று பத்திரிக்கை ஆசிரியர் கூறியுள்ளார்.

முன்பு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை, அ‌மெரிக்க பத்திரிகையான டைம் பத்திரிகை செயலற்ற பிரதமர் என்று கூறியதற்கு பழிதீர்க்கும் விதமாக, இந்தியாவின் அவுட்லுக் பத்திரிகை, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை செயலற்றவர் என்று செய்தி வெளியிட்டது. இப்போது  பிரதமரின் தொடர் மவுனம், நாட்டை சோகப்பாதைக்கு இட்டுச்செல்வதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது .
இதற்கும் அவுட் லுக் எதையாவது எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மன்மோகன் சிங் வழக்கம் போல் வாயை மூடி கொண்டுள்ளார்.
தொடர்ந்து இது போன்ற விமர்சனம் நமது பிரதமர் மீது எழுந்தாலும் அவர் எதற்கும் அசரப்போவதில்லை.

India’s ‘silent’ prime minister becomes a tragic figure

Punit Paranjpe/AFP/Getty Images - Indian Prime Minister Manmohan Singh’s second term in office has been damaged by corruption scandals and policy paralysis.

இன்னும் எத்தனை ஊழல்கள் எழுந்தாலும் மக்களவையே மூடிவைக்கப்பட்டாலும் மன்மோகன் சிங் -மண் மோகன் சிங்தான். யாரும் அசைக்கமுடியாது.
அவரின் மவுனம் ஆயிரம் அர்த்தம் சொல்லும் அதை தெரியாத வர்களுக்கும்-புரியாதவர்களுக்கும் விளக்கம் சொல்லத்தான் காங்கிரசு செய்தி தொடர்பாளர்  இருக்கிறார்.
___________________________________________________________________________________________



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?