பக்கவாதமும்- சாக்லேட் மருந்தும்,
இதுவரை சாக்லேட்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல செய்திகள் வெளி வந்துள்ளன.
இப்போதைய செய்தியாக வந்திருப்பது .அவை முளையை பக்கவாதம் தாக்குவதில் இருந்து தடுப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றனவாம்.
37 000 சுவீடன் நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வருவது குறைவாக இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்களாம்.
சாக்லேட்டுக்களை அதிகம் உண்பது இதயத்துக்கு நல்லது என்று கூறும் பல ஆய்வுகளை அடுத்து தற்போது இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகளை காரணம் காட்டி யாரும் அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டுவிடக்கூடாது என்றும் ஆய்வாளர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு ஆகியவை குறியுள்ளது.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவரின் உணவுப் பழக்க வழக்கங்கள் அறியப்பட்டு, பத்து ஆண்டு காலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இவர்களில் ஒரு குழுவினர் எந்தவிதமான சாக்லேட்டும் சாப்பிடுவதில்லை. இன்னொரு குழுவில் உள்ளவர்கள் வாரம் 63 கிராம் சாக்லேட் சாப்பிடுபவர்கள்.
இறுதியாக இவர்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, இவர்களில் அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்கள், சாக்லேட் சாப்பிடாதவர்களை விட பக்கவாதத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு 17 வீதம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறதாம்..
நரம்பியல் குறித்த பத்திரிகையில் இந்த ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாக்லேட்டில் காணப்படுகின்ற ஃபிளவொனொயிட்ஸ் என்னும் பதார்த்தமே இதற்கு காரணம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான, சுவீடனின் கரோலின்ஸ்கா நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் சுசானா லார்சன் கூறியுள்ளார்.
இதயம் சம்பந்தமான நோய்களுக்கான எதிர்ப்பு மருந்தாக இந்த ஃபிளவொனொயிட்ஸ் செயற்படுகிறது.
இரத்தத்தில் உள்ள மோசமான கொழுப்பின் அடர்த்தியை குறைப்பதன் மூலம் இந்த ஃபிளவொனொயிட்ஸ் இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்.
டார்க் சாக்லேட்தான் இதய நோய்களுக்கு உகந்தது என்று கடந்த காலங்களில் கூறப்பட போதிலும், பால் சாக்லேட்டுகள்தான் சிறந்தது என்று இந்த ஆய்வு இப்போது கூறுகிறதாம்.
மற்ற வகை சாக்லேட்டுக்களை கொஞ்சமாக உண்பதும் பயனைத் தரலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகின்றது.
ஆனால், இந்த விடயம் குறித்து மேலும் பல ஆய்வுகள் தேவைப்படும் அதேநேரத்தில், இந்த ஆய்வு முடிவையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டால் அது உடலுக்கு நஞ்சாகி உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று கடைசியில் ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
அதிகமாக சீனியும் கொழுப்பும் சேர்க்கப்பட்டுள்ள சாக்லேட் நல்லதல்ல என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இது போன்ற ஆய்வுகள் பல சாக்லேட் நல்லது,காபி நல்லது ,மது குறைவாக குடித்தால் நல்லது என்று வருவது கடைசியில் அதை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனைக்கு நல்லதாகவே அமைகிறது.
அந்தஆய்வுகளை அந்த நிறுவனங்கள்தான் ஏற்பாடு செய்து வெளியிடுகின்றனஎன்றும் பல ஆய்வுகளில் கடைசியில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
கொஞ்சம் காலத்துக்கு முன் ஒயின் இரவு கொஞ்சம் போட்டுக்கொண்டால் இதயத்துக்கு இதமாக இருக்கும்.இதய நோய்கள் வராது.அதிலும் கண்டிப்பாக இதய அடைப்பு அதுதான் மாரடைப்பு வராது என்று ஒரு ஆய்வாளர் அறிக்கை வெளியிட ஒயின் விற்பனை பிச்சுக்கிட்டு சென்றது.நான் கூட மாரடைப்பு பயத்தில் ஒரு சின்ன ஒயின் பாட்டிலை டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று வாங்கினேன்.
ஆனால் குடிக்க வாடையும்-பயமும் இடம்தரவில்லை.
அதற்குள்ளாகவே அந்த ஆய்வும்,ஆய்வாளரும் தவறானது என்றும்.ஒயினில் அப்படி ஒரு மகத்துவமும் இல்ல.அந்த ஆய்வு அறிக்கையே ஒயின் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த பணத்துக்காகத்தான் வெளியிடப்பட்டது என்றும் செய்தி வெளியாகிவிட்டது.
அந்த ஒயின் பாட்டில் இன்னமும் அப்படியே அலமாரியில் இருக்கிறது.[உண்மைதாங்க]
ஆக ஆய்வுகள் பல நிறுவனங்கள் தரும் பணத்துக்காக நடத்தப்பட்டு[?]அவர்கள் விரும்பும் முடிவையே தருகின்றன.
அவைகளை உண்மையா என்று முடிவு செய்து கொள்வது அப்பாவிகளான நமது கைகளில்தான் உள்ளது.
அரசு இவைகளை கண்டுகொள்ளாது.
நேற்று குட்டையாக இருந்து இரவு காம்ளான் குடித்து மறுநாள் வளர்ந்து விட்ட பையனை தினசரி தொலைகாட்சியில் பார்க்கிறோம்.
ஆனால் அதை குடித்த உங்கள் பையன் அப்படி வளர்ந்துள்ளானா?
அல்லது வளர்ந்த பையனை பார்த்துள்ளீர்களா?
அதை அரசும்,மருத்துவ துறையும் கண்டு கொண்டா இருக்கிறது.அவர்களுக்கு பூஸ்ட் தரும் சீக்ரெட் எனர்ஜிதான் முக்கியம்?