நடிகர் திலகன் மறைவு ,
-----------------------------------
பிரபல மலையாள நடிகர் திலகன். 77 வயதான இவர் 300-கும் மேற்பட்ட படங்களில்
நடித்துள்ளார்.பத்மஸ்ரீ பட்டம் பெற்ற இவர் தமிழில் சத்ரியன், மேட்டுக்குடி, அலிபாபா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந்தேதி திலகனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு திருச்சூர் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது. திலகன் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். மாரடைப்புடன் திலகனுக்கு பக்கவாத நோயும் ஏற்பட்டு அவரது மூளை நரம்புகளும் பாதிக்கப்பட்டு இருந்தது.
மருத்துவர்கள் அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் நடிகர் திலகன் மரணமடைந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை திருச்சூர் அருகே அரசு மரியாதையுடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திலகன் மலையாள நடிகர்கள் சங்கத்தினருடன் மோதலில் இருந்தார். அதனால் பிரபல மலையாள நடிகர்களான மம்முட்டி ,மோகன்லால் ஆகியோருடன் பகிரங்கமாக கருத்து மோதலில் இருந்தார்.
கமல்ஹாசனுக்கு மலையாள அரசு பாராட்டு விழா நடத்திய பொது மலையாள நடிகர்கள் அதை புறக்கனித்தப்போது நடிகர்களின் போக்கை கண்டித்ததுடன் திலகன் முதல் ஆளாகக் கலந்து கொண்டு கமலைப்பாராட்டினார்.
_______________________________________________________________________________________________