கருத்தும் -கணிப்பும்.

 ndtv தனது கருத்துக் கணிப்பு என்று சில செய்திகளை வெளியிட்டுள்ளது.
இதில் 
தமிழகத்தில் உள்ளவர்கள் ஜெயலலிதாதான் நல்ல முதல்வர் என்று 50% மேல் வாக்களித்துள்ளார்களாம்.
இது போன்று இந்திய அளவில் கருத்து திணிப்புகளை வெளியிட்டுள்ளது.
எப்போதுமே நமது என் டி டி வி ஒரு சார்பான செய்திகளை தனது விருப்பு-வெறுப்புக்கு ஏற்ற மாதிரிதான் தரும்.செய்தி மற்றும் அதன் செயல்பாடுகளின் நம்பிக்கையை இழந்து கொஞ்ச கால ஆகி விட்டது.

இந்திய அளவில் பாஜக சார்பும்,தமிழகத்தை பொறுத்த வரையில் ஜெயலலிதா சார்பும் கொண்டது.
அவர்கள் எதிர்ப்பவர்கள் செய்திகளை கண்டு கொள்வதில்லை.அல்லது முக்கியத்துவம் கொடுத்து தருவதில்லை.
திரை உலக செய்திகளில் கூட ரஜினிகாந்த் படம் வெளியாகும் போது தீவிர ரசிகனை விட அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்து திரையரங்கு ,திரையரங்காக அலைந்து கூட்டத்தையும் ரசிகரகள் ஆதரவையும் மட்டுமே காடடும் சார்பானது.
மற்ற முக்கிய நடிகரகளை கண்டு கொள்வதில்லை.அல்லது எதிர்ப்பான செய்திகளைத்தான் முக்கியத்துவம் கொடுக்கும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கூட கேரளாவுக்கு சார்பான அளவிலேயே ஒளிபரப்பியது. எதிர்ப்பு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படவே இல்லை.
இதை எல்லாம் இவ்வளவு தூரம் சொல்ல காரணம்.என்டிடிவி கருத்துக் கணிப்பு உண்மையிலேயே மக்கள் கருத்தாக கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.
அது அவர்களின் சொந்த கருத்துதான்.
______________________________________________________________
அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில், இறந்த குழந்தையை  கடித்ததால் பெரும் பரபரப்பு உண்டானது. இதையடுத்து, சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் எலி, பூனை மற்றும் நாய்களை ஒழிக்க நீதிமன்ற ஆணைப்படி  புளூ கிராஸ் அமைப்பினர் அரசு மருத்துவமனைகளில் சுற்றித்திரியும் பூனை மற்றும் நாய்களை பிடித்து வருகின்றனர்.  ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை, எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் குழந்தை கள் மருத்துவமனை என பல இடங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலி பொந்துகளில் தக்காளி மற்றும் கருவாடுகளுடன் எலி மருந்தை கலந்து சுகாதாரத்துறையினர் வைத்துள்ளனர். இதில் கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 1,000 எலிகள் இறந்துள்ளது.  இறந்த எலிகளை சுகாதாரத்துறையினர் எடுத்து சென்று நல்லடக்கம் செய்து வருகின்றனர்.ஆனால்.வெளியே வந்து இறக்கும் எலிகளை மட்டும் சுகாதாரத்துறை அப்புறப்படுத்தி வருகிறது. 

வளைகளுக்கு உள்ளேயும், எங்காவது மூலையில் சென்று இறக்கும் எலிகளையும் சுகாதாரத்துறை கண்டு கொள்வதில்லை. 
இதனால், கோஷா மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் எலிகள் அழுகி துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. 
மேலும், இறந்து போன எலிகளில் இருந்து வெளியேறும் புழுக்கள்,கிருமிகளால், பல தொற்றுநோய்களும் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளுக்கு கர்ப்பிணிகளும், குழந்தைகளும் தான் அதிக அளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், தொற்றுநோய் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. 

அரசு எலிகளை கொல்ல வேண்டும் என்றுதான் கூறியுள்ளது.அவைகள் புதைக்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லையே?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?