மதம் பிடித்தவர்கள்,
மதம் மாறி வழிபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் தீவிரமாக முழ்கிப் போகிறவர்கள் சிலர்தான்.அதில் கொஞ்சம் அதிகமாக ஊறி போனவர் உமாசங்கர் இ.ஆ .ப. அவர்கள்.
ஆத்தூர் நகராட்சி, அண்ணா கலையரங்கில், கடந்த, 15ம் தேதி, கிறிஸ்துவ மத
போதகர்கள் சார்பில், சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக ஒழுங்கு
நடவடிக்கை ஆணையர், உமாசங்கர்
, ""இந்த ஆண்டு, டிசம்பர்
மாதம், உலகின் பெரும் பகுதி, அழிவை சந்திக்க உள்ளது. கிறிஸ்துவ மத
கருத்துகளை, பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். கிறிஸ்துவர்கள் வீட்டில்
உள்ள ஜாதகம், ராகு, எமகண்டம் குறிப்பிட்டுள்ள காலண்டர்களையும், தீயிட்டு
கொளுத்துங்கள்; குப்பைகளில் வீசியெறியுங்கள்,''
என அதிரடியாக பேசியுள்ளார்.
மதம் மட்டும் அவருக்கு பிடித்துப்போக வில்லை. சோதிடமும் தெரியும் போல் .டிசம்பரில் உலகம் அழியப் போகிறது என்று குண்டை வீசியுள்ளார்.
இதை பா.ஜ.கட்சியினர் பெரிதுப்படுத்தி குற்ற சாட்டுகளாக அனுப்பிவருகின்றனர்.
இந்திய ஆட்சிப்பணி அலுவலரான உமாசங்கர் கொஞ்சம் அதிகமாகவே நடந்து கொள்வதாகவே தெரிகிறது .அவர் தனக்குள் எந்தவிதமான நம்பிக்கைகளை வைத்துக்கொள்ளட்டும்.எந்த சாமியையும் கும்பிட்டுக்கொள்ளட்டும்.ஆனால் அதில் தீவிரமாக இறங்கி மற்றவர்களா மேல் திணிப்பதற்கு அவருக்கு உரிமை இல்லை.அவர் அதில் தீவிரம் காட்டவும கூடாது. காரணம் அவர் வகிக்கும் பதவி.அது பொதுவான மக்கள் நலம் தொடர்பான பணி .அவர் மதத்தை வளர்க்கவும்.வணங்கவும் தனிப்பட்ட முறையில் அவருக்கு உரிமை உண்டு.ஆனால் பொறுப்பான பதவியில் -பொதுவான பதவியில் இருந்து கொண்டு ஒரு சார்பாக செயல்படுவது .
சரியானதல்ல ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல.அவர் தனது பொறுப்பான பதவியை விட்டு விலகிக்கொண்டு அதன் பின் மதப்பிரச்சாரம் செய்ய செல்வதே அவருக்கும்,மக்களுக்கும் ,அவரின் கடவுளுக்கும் நல்லது.
இது போன்றவர்களை அரசுப்பணியில் வைத்திருப்பதும் ,அவர்கள் பதிவியை விடாமல் ஒட்டிக்கொண்டிருப்பதும் ஏன் ?என்றுதான் தெரியவில்லை.
உமாசங்கரிடம் மத வெறி மட்டுமல்ல ,சாதியின் நிழலில் பாதுகாப்பு தேடும் குறுகிய புத்தியும் உள்ளது.சென்ற கருணாநிதி ஆட்சியில் அவர் தனது மதத்தை பற்றிய விவகாரம் வரும் போது தான் தலித் அதனால்தான் தன்னை அசிங்கப்படுத்துகிறார்கள் .என்று தேவையின்றி சாதியை துணைக்கழைத்தார்.
இவர் மட்டுமல்ல இன்னமும் சில இ.ஆ .ப ,க்கள் சாதியைவைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி பட்டவர்கள் தங்கள் துறையில் பொதுவான முடிவுகளை சாதி சார்பு இல்லாமல் எடுப்பார்களா ?இவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?
இது போன்ற மத,சாதி சார்பான நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள் கலந்து கொள்வதை அரசு தடுக்க வேண்டும் .அல்லது நேர்மையான சிவகாமி இ.ஆ.ப, போல் தங்கள் பதவியை விட்டு விலகி தங்கள் இனத்தவர்களுக்கு ,மதத்தவர்களுக்கு சேவை செய்யப்போகட்டும் .
பணியில் இருப்பவர்கள் பொதுவானவர்களாக அனைத்து சாதி,மதம் இனம் வித்தியாசம் பாராமல் பணி செய்பவர்களாக இருப்பதுதான் மக்களுக்கும்,அரசுக்கும் நல்லது.
_______________________________________________________________________________________________
இதுவும் மதம் பற்றிய செய்திதான் .
_______________________________
இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளரான சல்மான்
ருஷ்டி தனது நினைவலைகள் பற்றி எழுதியுள்ள புதிய புத்தகத்தில், தான்
எழுதிய சர்ச்சைக்குரிய புதினமான தி சாட்டானிக் வெர்ஸஸ் (சாத்தானின் வேதங்கள்) பற்றிய தனது தரப்பு வாதத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
1989ல் இந்த புத்தகம் வெளிவந்தபோது, இறைதூதர்
முகமதுவை இது இழிவுபடுத்துவதாக உள்ளது என முஸ்லிம்கள் கொதிப்படைய
வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.
சல்மான்
ருஷ்டியைக் கொல்ல வேண்டும் என்று இரானின் முன்னாள் அதியுயர் மதகுரு
அயதொல்லா கொமேனி மத ஆணை பிறப்பித்தார்.
, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக
ருஷ்டி தலைமறைவாக வாழ்ந்துவந்தார்.
தற்போது
ருஷ்டி,பேசும் போது
'ஒருவிஷயம் தமது மனதைப் புண்படுத்துவதாக மக்கள் எடுத்துக்கொண்டால்
அது அவர்களுடையப் பிரச்சினை"
என்று கூறியுள்ளார்.
தான் வேதனைப்படும் விதமாக எவரும் நடந்துகொள்ளவேகூடாது என்று கூறும் உரிமை ஒருவருக்கும் இல்லை என்று ருஷ்டி தெரிவித்தார்.
சாத்தானின் வேதங்கள் தற்போது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________________