விலகினாரா? விலக்கி வைக்கப்பட்டாரா?
2011ஆண்டு மே மாதம் 16-ந்தேதி ஜெயக்குமார் சபாநாயகராக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி ஜெயக்குமார் தலைமையில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. பிறகு ஜூன் மாதம் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை ஜெயக்குமார் நடத்தினார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரைக்கான கூட்டத்தை ஜெயக்குமார் நடத்தினார். கடந்த பிப்ரவரி தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை அவர் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தினார். அக்டோபர் மாதம் தமிழக சட்டசபை வைர விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார்.
இந்த நிலையில் அவர் திடீரென பதவியில் இருந்து விலகி இருப்பது அரசியலில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜெயக்குமாரின் ராஜினாமா இன்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் ஒரு
அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக சட்டசபை சபாநாயகர் த.ஜெயக்குமார் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 179 (பி) பிரிவின்கீழ் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி காலை தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் பதவி காலியானதால், அரசியலமைப்புச் சட்டம் 180(1)-வது பிரிவின் கீழ் சபாநாயகர் அலுவலக பணிகளை இனி துணை சபாநாயகர் ப.தனபால் கவனிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின்
நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கி வந்தவர் ஜெயக்குமார்.
சென்னை ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயக்குமார்.தமிழக சட்டசபை சபாநாயகர் த.ஜெயக்குமார் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 179 (பி) பிரிவின்கீழ் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி காலை தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் பதவி காலியானதால், அரசியலமைப்புச் சட்டம் 180(1)-வது பிரிவின் கீழ் சபாநாயகர் அலுவலக பணிகளை இனி துணை சபாநாயகர் ப.தனபால் கவனிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவராக சபாநாயகர் பதவியை விட்டு விலகினாரா?அல்லது விலக்கி வைக்கப்பட்டுள்ளாரா?என்பதும் இப்போது தெரியவில்லை.
பின்னர் 2001 முதல் 2005 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் தகவல் தொழில்நுட்பம், சட்டம், மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். பின்னர் 2011ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியை பிடித்தது அ.தி.மு.க.
மீண்டும் அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெயக்குமாரை சபாநாயகராக்கினார் முதல்வர் ஜெயலலிதா. இதனால் அவரது ஆதரவாளர்கள் விரக்தி அடைந்தனர்.
ஆட்சிக்கு வந்த கடந்த ஜனவரி மாதத்துடன் 6வது முறையாக அமைச்சரவை ஜெயலலிதா மாற்றினார்.
அப்போது, சபாநாயகராக இருக்கும் ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால், அப்போதும் ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இது ஜெயக்குமாருக்கு மட்டுமின்றி அவரது ஆதவாளர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்றது.
அப்போது, சபாநாயகர் ஜெயக்குமாரின் ஆதரவாளரான சந்தானம், அண்ணா வளைவு தொடர்பாக பிரச்சனை ஏற்படுத்தினார். இதனால் மேயருக்கும், ஜெயக்குமாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலுக்கு சபாநாயகர் ஜெயக்குமார்தான் காரணம் என்று கூறி மேலிடத்துக்கு புகார்கள் சென்றது.
மேலும், வடசென்னையில் கட்சியின் விழா எதுவாக இருந்தாலும் மேயர் சைதை துரைசாமியை ஜெயக்குமார் ஆதரவாளர்கள் அழைப்பதில்லையாகும். இதுவும் மேலிடத்துக்கு புகாராக சென்றுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. கட்சி விழாவோ, மற்ற விழாவோ கட்சியினர் விமர்சையாக கொண்டாடக் கூடாது என்றும் தி.மு.க.வினர் கடந்த ஆட்சியில் ஆரம்பரமாக விழாவை கொண்டாடியதாலேயே ஆட்சியை இழந்தனர் என்று கூறி தடபுடல் விழாவுக்கு ஜெயலலிதா தடை விதித்தார்.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி சபாநாயகர் ஜெயக்குமாரின் 58வது பிறந்தநாளை அவரது தொகுதியான ராயபுரத்தில் ஆதரளாவளர்கள் தடபுடலாக கொண்டாடினர். இது ஜெயலலிதாவுக்கு புகாராக சென்றது.
இதையடுத்து வடசென்னை மாவட்ட செயலாளரை ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கினார். இவர் ஜெயக்குமாரின் தீவிர ஆதரவாளர். மேலும் அவரது ஆதரவாளர்கள் 12 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ஜெயலலிதா நீக்கினார். இவர்கள் வடசென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ஆவர்.
ஜெயலலிதா தனது விசுவாசத்தை சந்தேகப்பட்டதால் விரக்தியும், ஆத்திரமும் அடைந்த சபாநாயகர் ஜெயக்குமார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனுக்கு அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து, சபாநாயகர் பணிகளை துணை சபாநாயகர் ப.தனபால் கவனிப்பார் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்வது புதிதாக இல்லையென்றாலும், ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டில் சபாநாயகர் ஒருவர் ராஜினாமா செய்வது இதுவே முதன் முறையாகும். அதுவும் 1977 ஆம் ஆண்டுக்கு பிறகு இடைப்பட்ட காலத்தில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதன் முறையாகும்.
1967ஆம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோது சபாநாயகராக இருந்தவர் சி.பா.ஆதித்தனார். அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி முதல்வரானார். அப்போது, அமைச்சர் பதவிக்காக சி.பா.ஆதித்தனார் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர், கருணாநிதி-எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட மோதல் தொடர்பாக தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து சென்று அ.தி.மு.க.வை ஆரம்பித்தார். அப்போது சபாநாயகராக இருந்த மதியழகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதான் அரசியல் காரணமாக சபாநாயகர் ஒருவர் விலகுவதற்கான காரணமாக இருந்தது.
தி.மு.க. ஆட்சியில் சபாநாயகராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், ஆவுடையப்பன் அ.தி.மு.க. வில் சேடப்பட்டி முத்தையா, காளிமுத்து, பி.எச்.பாண்டியன்
உள்ளிட்டவர்கள் தங்கள் பதவியை 5 ஆண்டுகள் முழுமையாக கழித்தவர்கள் ஆவர்.
தமிழக சட்டப்பேரவையின் வைர விழா வரும் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்பு கூட்டம் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது .இந்நேரம் சபாநாயகர் தனது பதவியை விட்டு சென்றிருப்பது பல சந்தேகங்களை மக்களிடம் எழுப்பியுள்ளது.