suran/09/05-2,

 40 பேர்களை கொன்ற  விபத்து.

சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி இன்று பட்டாசு தயாரிப்ப தில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்முரமாக வேலைபார்த்து வந்தனர். 40-க்கும் மேற்பட்ட அறையில் பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வந்துள்ளது. 

இன்று 12 மணி அளவில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தது. இதில் அருகில் இருந்த அனைத்து அறைகளுக்கும் தீ பரவியது. அதில் இருந்த அனைத்து பட்டாசுகளும் வெடிக்க தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக மாறியது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர்.
பக்கத்தில் உள்ள இடங்களிலும் தொழிலாளர்கள் ஒடி தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தனர்.இதுவரை மொத்தம் 40 பேர்கள்  வரை இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.100க்கும் மே ற் பட்டோர்  காயங்களுடன் தப்பியுள்ளனர்.
  தீயை வேடிக்கை பார்க்க வந்த 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு புகையால் மயக்கம் அடைந்தனர். அவர்களை தீயணைக்கும் படையினர் மீட்டுள்ளனர்.
 பெரும்பாலான விபத்துக்கள், அங்கீகாரம் இல்லாமல், வீடுகளில் பட்டாசு தயாரித்த போது நேரிட்ட விபத்துக்களாக இருக்கின்றன.சிவசாசியில், விஜயகரிசல்குளம், தாயில்பட்டி, மீனாக்ஷிபுரம், ராமலிங்கபுரம், சல்வார்பட்டி, வேம்பக்கோட்டை ஆகிய கிராமங்களில்     அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பல பட்டாசு ஆலைகள் உள்ளன.அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் 1.3 லட்சம் மக்கள் பணியாற்றுகின்றனர் என்றால், அங்கீகாரம் இல்லாத ஆலைகளிலும், வீடுகளில் வைத்து பட்டாசு தயாரிப்பதிலும் சுமார் 1 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொழிற்சாலை  உரிமம் காலாவதியாவதால் பட்டாசுகளை வேகமாக செய்து குவித்ததால்  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நம் அதிகாரிகளும் விபத்து நடக்கும் போது மட்டுமே வெடி பொருள் விதிகளை கடை பிடிப்பதைப்பற்றி பார்க்கிறார்கள்.அதன் பின் கண்டு கொள்வதில்லை.மற்றோரு விபத்தின்  போது முழிக்கிறார்கள். நிவாரணம் கொடுத்து ஒதுங்கிக்கொல்கிரார்கள் ஆனால் பலியாவது ஏ ழை  தொழிலாளிதான்.
முந்தைய விபத்துக்கள் . ஒரு பார்வை :
ஆகஸ்ட் 13, 2012விருதுநகர் மாவட்டம் மாரநேரியில் உள்ள பட்டாசு ஆலையில் நேரிட்ட தீ விபத்தில் ராமாலஷ்மி (45) என்ற பெண்மணி உயிரிழந்தார். இந்த விபத்தில் அவர் பணி செய்து வந்த குடிசையும் முற்றிலும் சேதமானது.
ஆகஸ்ட் 10, 2012வேம்பக்கோட்டை அருகே துலுக்கக்குறிச்சி என்ற பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளர் படுகாயம் அடைந்தார். அவர் பணியாற்றிய அறை முற்றிலும் தரைமட்டமானது.
மே 10, 2012விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 70 வயது முதியவர் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
மார்ச் 27, 2012சாத்தூர் அருகே சங்கரபாண்டியபுரம பகுதியில் இருந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ரசாயனத்தைக் கலக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தனர்.
மார்ச் 7, 2012சிவகாசியில் நடந்த விபத்தில் ஒருவர் பலியானார், ஒருவர் காயமடைந்தார்.
பிப்ரவரி 28, 2012விருதுநகரில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
பிப்ரவரி 3, 2012சேவல்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
2011ம் ஆண்டில், டிசம்பர் மாதம் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில்  4 பேரும், அக்டோபர் மாதம் சாத்தூரில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில்  ஒருவரும், ஆகஸ்ட் மாதம் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 6 பெண்களும், ஜுன் மாதம் நடந்த விபத்தில் ஒரு பெண்ணும், ஜனவரி மாதம் விருதுநகரில் நடந்த விபத்தில் 8 தொழிலாளிகளும் என 20 தொழிலாளர்கள் பலியாயினர்.
2010ஆம் ஆண்டு சிவசாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரிட்ட 22 தீ விபத்துக்களில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர்.
2009ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரிட்ட 23 விபத்துக்களில் மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டனர்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?