தனியார்தான் இனி தண்ணீர் தருவார் !
மத்தியப்பிரதேசத்தில் உள்ள கந்துவா இதுநாள் வரை பிரபல பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் என்பவரோடு உள்ள தொடர்பு தவிர வேறு எந்த தனிச் சிறப்பும் இன்றி இருந்த நகரம் திடீரென உலக நீர் வரைபடத்தில் பிரத்யேக இடத்தை பெற்றுள்ளது.
மிக
விரைவில் இந்தியாவிலேயே முதல் முறையாக அந்த நகரத்தின் தண்ணீர் விநியோக
அமைப்பு முழுவதையும் தனியார் வசம் - பி.பி.பி. என்று அழைக்கப்படும்
தனியார்-பொதுத்துறை பங்கு நிறுவனம் (ப்ரைவேட் பப்ளிக் பார்ட்னர்ஷிப்) முறையின் மூலம் அளிக்கப்பட இருக்கிறது.
காந்துவா
நகராட்சி நிர்வாகம் அந்த நகரத்தின் தண்ணீர் விநியோக முறை முழுவதையும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு தனியார் லிமிடெட் கம்பெனி வசம் ஒப்ப
டைக்க இருக்கிறது.
ஆனால் இது மட்டும் இதன் தனித்துவத்திற்கான காரணம் இல்லை. இதன் தனித்தன்மை எதில் அடங்கியுள்ளது என்றால் இந்த திட்டம் செயல்படுத்துவதன் வாயிலாக மக்களின் நலன்களையும் ஏன் அவர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட சமரசம் செய்யும் அளவிற்கு சென்றதில் தான் அடங்கியுள்ளது.
கந்துவா தண்ணீர் விநியோக சேகரிப்பு திட்டம் என்பது மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தலையாய திட்டங்களில் ஒன்றான சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் (யு.ஐ.டி.எஸ்.எஸ்.எம்.டி) என்பதன் கீழ் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு, திட்டத்திற்கான 80 சதவீதத்தை அளிக்கும். மாநில அரசு 10 சதவீதத்தை அளிக்கும்.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு 10 சதவீதம் அளிக்க வேண்டும். பல உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளை திட்டத்திற்கான தங்கள் பங்களிப்பை பி.பி.பி. முறையில் அளித்திட அனுமதியளிக்கிறது.
இதனால் கந்துவா தண்ணீர் திட்டத்திற்கான மொத்த செலவான 106.72 கோடி
ரூபாயில் கந்துவா நகர நிர்வாகம் (உள்ளாட்சி அமைப்பு) அளிக்க வேண்டிய 10.67
கோடி ரூபாய்க்கு பதி
லாக விஷ்வா யுடிலிட்டிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஹைதராபாத்தை தலைமையிடமாக
கொண்டு செயல் படும் நிறுவனத்திற்கு இந்த திட்டத் தை காண்ட்ராக்ட்
அளித்துள்ளது.
எழுத்தில் உள்ளதை பார்த்தால் எல்லாம் கனகச்சிதமாக உள்ளது. இந்த நகரத்தின் தினசரி தண்ணீர் தேவை 2.9 கோடி லிட்டராகும். இந்த தேவைக்கு எதிராக தற்போதுள்ள நீராதாரங்களான நக்சுன் அணை, சுக்தா அணை மற்றும் ஆழ்கிணறுகள் ஆகியவை சுமார் 1.7 கோடி லிட்டர் தண்ணீரை அளித்துக் கொண்டிருக்கின்றன.

ஆகவே நாளொன்றுக்கு சுமார் 1.2 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை
ஏற்படுவதை இந்த திட்டம் ஈடுகட்ட. 52 கி.மீ.க்கு அப்பால் உள்ள சரக்கீதா
கிராமத்தில் உள்ள இந்திரா சாகர் என்ற அணையிலிருந்து தண்ணீரை கொண்டுவர
உள்ளது.
இது நர்மதா ஆற்றின் தண்ணீர் அல்ல. மாறாக நர்மதா ஆற்றின் துணை ஆறான
சோட்டி தாவா ஆற்றின் தண்ணீராகும். விளக்கம் கிடைக்காத விஷயமே, பற்
றாக்குறையை வெளியிடத்திலிருந்து சமாளிப்பதற்கு பதிலாக இந்த திட்டம் ஏற்கனவே
தற்போது நடைமுறையில் உள்ள தண்ணீர் விநியோக முறையை முழுமையாக நிறுத்திவிட
வழிவகை செய்கிறது. தற்போதுள்ள தண்ணீர் விநியோக முறை கடும் கோடையில்கூட நகரத்தின் தேவையில் 60 சதவீ
தத்தை பூர்த்தி செய்கிறது.
இதற்கு மாறாக இந்த திட்டம் முழுமையாக இந்திரா சாகர் அணையை மட்டுமே நம்பி செயல்படுத்த இருக்கிறது.
நக்சுன் மற்றும் சுக்தா அணைகள் இயற்கை நீராதாரங்கள் ஆகும். இந்த அணைகள் நகரத்திலிருந்து உயரமான பகுதியில் உள்ளதால், இங்கிருந்து நகரின் நீரேற்று நிலையங்களுக்கு (ஓவர்ஹெட் டேங்க்) மின்சார பம்ப்புகள் தேவையில்லை.

மாறாக
ஈர்ப்பு விசையின் காரணமாக உயரத்திலுள்ள அணையிலிருந்து கீழே நகரின் நீரேற்று
நிலையத்திற்கு எந்த செலவும் இன்றி வந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த
அணைகள் நகரிலிருந்து 10 கி.மீ. தூரத்திலேயே அமைந்துள்ளன. இந்திரா சாகர் அணையிலிருந்து தண்ணீர் இராட்சத பம்ப்புகள் மூலமாகத்தான் கொண்டுவரப்பட வேண்
டும் என்பதால் அதற்கான செலவு அதிகமாக இருக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் அனைத்தும் விஷ்வா யுடிலிட்டிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இதற்கான அரசாணை இன்னமும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறை கள் மற்றும் நிபந்தனைகள் இந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி முனிசிபல் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறப்பு கூட்டத்தில் பொதுமக் களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

மொத்த திட்ட
மதிப்பில் இந்த நிறு வனம் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே அளிக்கிறது. ஆனால்
ஆச் சர்யப்படும் விதத்தில் அந்த நகரின் தண்ணீர் விநியோகத்தின் 100 சதவீத
உரிமையை 23 வருடங்களுக்கு பெற்றுவிடும். ஒப்பந்த அடிப்படையில் இந்த
நிறுவனம் (நகரத்தின்) தண்ணீர் விநியோகத்தில் முழுமையான ஏக போக அமைப்பாக
மாறிவிடும். ஏனெ னில் இந்த ஒப்பந்தப்படி இதற்கு இணையாக வேறெந்த அமைப்பும்
அனுமதிக்கப்படமாட்டாது என்று உறுதியாக அறிவிக்கிறது.
மற்றொரு ஷரத்தின்படி
தண்ணீர் விநியோகத்தில் வருவாய் ஈட்டாத விநியோகத்திற்கு இடமில்லை என்று தெரிவிக்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் அனைத்து பொதுக் குழாய்களும் - சாலையோரத்தில் உள்ள சமூ கப் பயன்பாட்டில் உள்ள குழாய்கள், பேருந்து நிலையம், ரயில்நிலையம் - ஆகியவற்றில் உள்ள 1733 கைப்பம்ப்புகள், ஆழ்குழாய் பைப்புகள் போன்ற அனைத்தும் மூடப்படும் அல்லது இந்த நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்படும். இந்த குழாய்களைப் பயன்படுத்துவோரிடமிருந்து இந்த நிறுவனம் கட்டணம் வசூலிக்கும். சாராம்சத்தில் இதன் அர்த்தம் சேரிக
ளில் வாழ்வோர், வீடற்ற மக்கள் மற் றும் இந்த மாதிரியான பொதுக் குழாய்
களிலிருந்து தண்ணீரைப் பயன் படுத்துபவர்களுக்கு இரண்டு வழிதான் உண்டு.
ஒன்று அந்த நிறுவனம் வசூ லிக்க உத்தேசித்துள்ள கொள்ளைக் கட்டணத்தை
குறைந்தபட்ச கட்டண மாக லிட்டருக்கு ரூ.11.95 கொடுத்து பயன்படுத்த தயாராக
வேண்டும். அல் லது தண்ணீரை பயன்படுத்து வதையே தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் விநியோகத்திற்கு முன்பு அந்த நகரவாசிகள் இந்த நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அந்த ஒப்பந்தப்படி குழாயிலிருந்து தண்ணீர் களவாடப்பட்டாலோ அந்த குழாய்களுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டாலோ, ஏதாவது அசுத்தம் கலந்தாலோ இன்னபிற இதுபோன்ற விஷயங்களுக்கு மக்களே பொறுப்பாக்கப்படுவார்கள்.

இதில் எந்த குற்றம் நடைபெற்றாலும் அதற்கான தண்டத் தொகையை மக்களே அளிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே நகராட்சியில் குழாய் இணைப்பை பெற்றிருந்தாலும் ஒவ்வொரு வீடும் ரூ.2500
செலுத்தி புதிதாக இணைப்பை பெற வேண்டும்.
மேலும் குழாய் இணைப்பு பெற சாலையை
தோண்டுவது, மீண்டும் சாலையைப்போடுவது மற்றும் குழாய் பதிக்க ஆகும் இதர செலவுகளை மக்களே ஏற்க வேண்டும். இந்த ஒப்பந்தம் மிகத் தெளிவாக குறிப்பிடுவது என்னவெனில் இந்த
நிறுவனம் விநியோகம் செய்யும் நீரில் ஏதாவது அசுத்தம் கலந்து விட்டால்
அதற்கு பதிலளிக்க வேண்டிய முழு பொறுப்பு மக்களைச் சார்ந்ததாகும். கம்பெனி
பதில் சொல்ல கடமைப்பட்டதல்ல.
மேலும் மக்களுக்கு தண்ணீர் விநியோகத்தில் ஏதாவது குறையிருந்தால் அதற்கு நீதிமன்றத்தை அணுக எந்த உரிமையும் கிடையாது. சுருக்கமாகச் சொன்னால் மக்கள் அடுத்த 23 ஆண்டுகளுக்கு இந்த நிறு
வனத்தின் தயவில் வாழ்க்கையைக் கடத்த வேண்டியதுதான். மேலும் இந்த நகரத்தின்
ஏற்கனவே உள்ள தண்ணீர் விநியோக அமைப்பு முழுமையாக முடக்கப்படும் என்பதால்
ஏதாவது ஒரு காரணத்திற்காக தண்ணீர் விநியோகம் தடைபட்டால் மாற்று ஏற்பாடே
இல்லாமல் இந்த நகரம் தவிக்க வேண்டியதுதான்.
இப்பொழுது ஏற்கனவே உள்ள நீராதரங்களான சுக்தா மற்றும் நக்சுன் அணையில் உள்ள நீரை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் அந்த நீர் பயன்படுத்தப்படாமல் அப்படியே விடப்படலாம் அல்லது அந்த தண்ணீரை தொழிற்சாலைகளும் வியாபார நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

தற்போது வீட்டு உபயோகத்திற்கு
மாதாந்திரக் கட்டணம் எவ்வளவு பயன்படுத்தினாலும் ரூ.100 மட்டுமே. ஆகவே
அருகில் இருக்கும் மலிவான நீராதாரத்தை வீட்டு உபயோகத்திற்கு அளித்து விட்டு
புதிதாக தனியார் வசம் நீண்ட தூரத்திலிருந்து கொண்டுவரப்படும் விலை அதிகமான தண்ணீரை லாபத்திற்காக இயங்கும் தொழிற்சாலைகளுக்கும் வியாபாரத்திற்கும் அளிப்பது தானே முறை? என்ற கேள்விக்கு நகரசபை அதிகாரிக
ளிடம் பதிலில்லை.
இவ்வாறு நகரத்தின் தண்ணீர் விநியோகத்தையே தனியார் லிமிடெட் நிறுவனத்திடம் விற்றுவிடுவது மக்களிடம் ஆத்திரத்தை கிளறியுள்ளது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மக்கள் இந்த திட்டத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர். இந்த ஏப்ரல் மாதம்
குடிமக்கள் குழு என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அது மதம்,
அரசியல் மற்றும் சாதி வேறுபாடுகளின்றி மக்களை இணைத்
துக் கொண்டுள்ள ஒரு போராட்டக் குழுவாகும்.
“ஆனால் பி.பி.பி முறையே மிகவும் விருப்பமான முறை. ஏனெனில் அந்த முறையில் மத்திய அரசிடமிருந்து ஏராளமான பணத்தை பெறமுடியும்” என்று கந்துவா நகரசபை உறுப்பினர் எம்.ரஹமத் தெரிவிக்கிறார். அவரைப் பொறுத்தவரை இந்த திட்டத்தின் நோக்கமே நகர எல்லைக்குள் உள்ள இயற்கை நீர் நிலையங்களான குளங்கள், ஏரிகள் போன்றவற்றை (அந்த நகர்ப் பகுதிக்குள் சுமார் 18 நீர்நிலை கள் உள்ளன. அழித்துவிட்டு அந்த இடங்களை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்துவதே அரசின் நோக்க மாகும். நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக உள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்ப ளவு கொண்ட ஏரிகளும், குளங்களும் வறண்டு போகச் செய்தால் வியாபார நோக்கிற்கு நிலங்கள் கிடைக்கும். உண்மையான நோக்கமே இந்த நிலத்தை கையகப்படுத்தும் திட்டம் என்றும் அவர் நம்பிக்கையற்று தெரிவித்தார்.
இதில் முக்கியமான விஷயமே கந்துவா நீர் விநியோகத் திட்டத்தை அதன் தற்போதைய வடிவத்தில் அனுமதித்தால் அது இதைப் போன்ற ஏராளமான பிற திட்டங்களுக்கு வழிவகுக்கும்.

யு.ஐ.டி.எஸ்.எஸ்.எம்.டி திட்டத்தில் நாடு முழுவதும் 2010-ம் ஆண்டு வரை சுமார் 979 திட்டங்கள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனுமதி பெற்றுள்ளன. அவற்றின் மொத்த திட்ட மதிப்பீடு சுமார் 19,936 கோடி
ரூபாய். இவற்றின் ஆகப் பெரும்பான் மையான 501 திட்டங்கள் தண்ணீர்
சம்பந்தப்பட்டவை. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.10,478 கோடி.
501 நகர சபைகள்
பி.பி.பி முறையை தேர்ந்தெடுத்துள்ளன. இவற்றில் 464 திட்டங்களில் ஏற்கனவே பணிகள் துவக்கப்பட்டாலும் அவைகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. கந்துவா நகரமே பி.பி.பி. முறை கி ட்டத்தட்ட முழுமை அடையும் நிலைக்கு சென்
றுள்ளது. எந்த நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் அடிப்படையில் இந்த திட்டம்
மக்களை சென்றடைகிறது என்பது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நன்றி:பிரண்ட் லைன்,
_______________________________________________________________________________________________