அக்னிஜித்



விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதலிபட்டி பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 40க்கும் அதிகமானோர் பலியானார்கள். விபத்தில் காயமடைந்த 44 பேரில் 30 பேர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியிலும், 14 பேர் மதுரை ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
நாட்டை பதற வைத்த இச்சம்பவம் கேள்வி பட்ட  நடிகர் மம்முட்டி .தான் நடத்தும் பதஞ்சலி ஹெர்பல் நிறுவனம் மூலம் காயமடைந்தவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்க அக்னிஜித்து என்ற மருந்தை 25 லட்சம் ரூபாய் செலவில்  அனுப்புவதாகக் கூ றியிருந்தார்.
அதன் படி சி வகாசி அரசு மருத்துவமணைக்கு  அக்னிஜித்து மருந்து வந்தது. மருந்து பாட்டில் ஒன்றின் விலை  ரூ.500.
இந்த மாறுவது தீக்காயங்களை எளிதாக ஆற்றும்.தழும்பும் தெரியாது.ஆனால் மருத்துவமனையில்  ஆயுர் வேத சிகிச்சைக்கு மருத்துவர் இல்லை. நெல்லை ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் இருந்து டாக்டர் ஒருவரை இங்கு அனுப்ப கேட்டுள்ளனர் .
நாட்டைஈ உலுக்கிய இத் தீ  விபத்துக்கு மவுன குரூ  மன்மோகனே வருந்தி ஆறுதல் சொல்லியுள்ளார். 
பக்கத்து மாநில நடிகர் வருந்தி மருந்து அனுப்பியுள்ளார்.
ஆனால் இவர்கள் காசில் உடலை வளர்த்து ,பாலாபிசேகம் பெற்ற நடிகர்கள் பண உதவி அல்ல வார்த்தைகளால் கூட உதவி வார்த்தைகளை உதிர் க்க வில்லையே ?

முதல்வர் விழாக்களில் வார்த்தைகளால் விளையாடி காக்கா வை புறந்தள்ளும் முன்னணிகளி ன் உண்மை முகத்தை மக்கள் இப்போவாவது கண்டு கொள்ளவேண் டும்.
ஒவ்வொரு துளி வியர்வைக்கும் தங்க காசை கொடுத்து விட்டு வதை படும் ரசிகர்கள்  மம்முட்டியின் மனிதாபிமானத்துடன்  தங்கள் சூப்பர்களின் மனதை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள வேண்டும்.  

_______________________________________________________________________________________________
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?