சட்டை=செய்யாததும்+கழற்றலும்,

அந்நிய சில்லரை வணிக மூதலீடு போன்றவைகளுக்கு மன்மோகன் சிங் கதவுகளை விரிய திறந்து வைத்ததனால் தன் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கும் என்று தெரிந்தே அதை செய்துள்ளனர்.
அதானால் தன் ஆட்சிக்கு ஆபத்து உண்டாகலாம் என்று தெரிந்தே  அமெரிக்க கட்டளையை சிரமேற்கொண்டு சோனியா கட்சி அந்நிய வணிக அனுமதி கொடுத்திருக்கிறது என்றால் ,அதற்கு என்ன துணிச்சல் என்று வியக்க வேண்டாம்.
மம்தா முதலில் முரண்டு பிடிப்பார்,பின் பின்வாங்கி விடுவார்.அவர் அப்படி ஏதும்செய்யாவிட்டாலும் கூட முலாயம் -மாயாவதி கூட்டம் இருக்கும் தைரியம்தான்.
முலாயம் கண்டிப்பாக சிபிஐ பயத்தில் ஆதரிப்பார்.அவருக்கும் அமெரிக்காதான் ராஜகுரு.அந்த தைரியம்தான்.
திமுக கொஞ்சம் முணங்கும் பின் கூட்டணி,தர்மம் என்று சுணங்கி விடும் என்பதையும் மனமோகன் தெரிந்தே வைத்துள்ளார்.எவ்வளவு அடித்தாலும்,திமுக வில் உள்ள கருணாநிதியைத் தவிர மற்ற எவரை திகாரில் அடைத்தாலும் அது காங்கிரசுக்கு வால் பிடிப்பதை இப்போதைக்கு விடப்போவதில்லை.
முலாயம்,மாயாவதி போல் சிபிஐ வழக்குகளை மிரட்டி நீர்த்துப்போக வைக்கு வித்தை கருணாநிதிக்கு தெரியவில்லை.பயந்தே வழிக்கு வந்து விடுவார் என்பது காங்கிரசுக்கு தெரியும்.இல்லை என்றால் 63 சீட்டுகள் வாங்கி மண்ணைக் கவ்வியிருக்க முடியுமா?
இவர்களை கூட்டணியில் வைத்திருக்கும் தைரியம்தான் மன்மோகன் காங்கிரசு ஆட்சி தொடர்ந்து மக்கள் விரோத-தேச விரோத செயல்களை செய்து கொண்டு போகிறது.
டெல்லியில் ஒரு வழக்குரைஞர் சட்டையை கழட்டி "பிரதமரே திரும்பிப்போ"என்று குரல் எழுப்பினாராம்.
அமெரிக்க ஆதரவு செயல்களை செய்ய எவ்வளவு எதிர்ப்பையும் இந்த பிரதமர் எந்திரன் [அல்லது மன்மோகன் சிங்] செய்வார்.வெறும் சட்டையை கழட்டி காட்டியதற்கெல்லாமா பயப்பட்டு பின்வாங்குவார்?
மன்மோகன் சிங் என்ற பிரத எந்திர பொம்மை சோனியாவின் சாவிக்கும்,அமெரிக்காவின் தாளத்துக்கும் மட்டுமே இயங்கும்-தலையாட்டும்.
அவர் இந்திய மக்களை கண்டு கொள்ள மாட்டார்.அவருக்கு தெரிந்த இந்திய மக்கள் எல்லாம் அம்பானி.,டாடா,போன்றோர்தான்.
________________________________________________________________________________

 நிலக்கரி இழப்பு இன்னமும் அதிகமாகத்தான் இருக்கும்,

நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதனால், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், பார்லிமென்டில், சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை பெரும் அரசியல் பூகம்பத்தைக் கிளப்பியது. இதனால், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், முற்றிலும் நடக்காமல் முடங்கியது.அதே நேரத்தில், இந்த ஊழல் குறித்து பார்லிமென்டில், அறிக்கை சமர்ப்பித்த, பிரதமர் மன்மோகன்சிங், "சி.ஏ.ஜி., அறிக்கையில், கூறப்பட்டுள்ள விவரங்கள் தவறானவை. சுரங்க ஒதுக்கீடுகளால், அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது' என்றார். ஆனாலும், பிரதமரின் விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.
இந்நிலையில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்த, சி.ஏ.ஜி.,யின் அறிக்கையை, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு ஆய்வு செய்யும் என, தெரிவிக்கப்பட்டது. 
அதன்படி, முதல் ஆய்வுக் கூட்டம், நேற்று பார்லிமென்ட் நூலக கட்டடத்தில் நடைபெற்றது.
"நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்த அறிக்கையை, ஆய்வுக்கு எடுப்பதாக முடிவு செய்து விட்டேன். இதனால், வாக்குமூலம் அளிக்க வரும்படி, நான் தான், சி.ஏ.ஜி., இயக்குனர், வினோத்ராய்க்கு சம்மன் அனுப்பி, விசாரணைக்கு வர வழைத்துள்ளேன்; எனவே, திட்டமிட்டபடி அவர், இன்று தன் வாக்குமூலத்தை அளிப்பார். பொதுக் கணக்கு குழு இன்று, வினோத் ராயின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும்"என்று ஜோஷி கூறினார்.

ஜோஷியின் பதிலுக்கு, குழுவில் இடம் பெற்றுள்ள, காங்கிரஸ் உறுப்பினர்களைத்தவிர மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருமே,ஆதரவு தெரிவித்தனர். 
இதனால், காங்கிரஸ் உறுப்பினர்களான, மணீஷ் திவாரி, சஞ்சய் நிருபம் மற்றும் சைபுதீன் சோஸ் ஆகியோர் கருத்துகள் அங்கு எடுபடவில்லை,
.இதையடுத்து, திட்டமிட்டபடி வினோத்ராய் அழைக்கப்பட்டார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, பின், அவரிடம் குறுக்குவிசாரணையும் நடைபெற்றது.
கூட்டத்தில், ஆரம்பம் முதலே, காங்., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக, "சி.ஏ.ஜி., அறிக்கை மீதான விசாரணையை, அவசரமாக துவங்குவது தேவையற்றது' என்று புலம்பினர்.
 சி.ஏ.ஜி., இயக்குனர், வினோத் ராய்க்கும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் நடந்தது.

சி.ஏ.ஜி., அறிக்கையால், நாட்டின் நற்பெயரே, சர்வதேச அளவில் கெட்டுப்போய்விட்டது;" பொருளாதாரத்தையும், இந்த அறிக்கை சீர்குலைத்து விட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு, ஒரே நாளில் பன்மடங்கு வீழ்ச்சியடைய, இந்த அறிக்கையே காரணம். சி.ஏ.ஜி., அறிக்கைக்குப் பின், வெளிநாட்டு தொழிலதிபர்கள், இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர். இதனால், நாட்டிற்கு பொருளாதார பேரிழப்பு ஏற்பட்டுள்ளது."
என்று காங்., உறுப்பினர்கள் புலம்பினர்.

நிலக்கரியை முறைகேடாக ஒதுக்கியதில்,2-ஜியில் முறையற்ற ஏலம் போன்றவற்றில் இந்தியாவின் மானத்தை கப்பலேற்றி விட்டு பொருளாதாரத்தையே குழியில் தள்ளிய காங்கிரசார் எப்படித்தான் வெட்கமும்-மனசாட்சியும் இல்லாமல் இப்படி நாலுபேர் மத்தியில் பேச முடிகிறதோ.அந்த அளவீற்கா வெட்கம்-மானம்-ரோஷம் இல்லாத கட்சியாகி விட்டது காங்கிரசு,காசு பார்ப்பது மட்டும்தான் அதன் முக்கிய குறிக்கோளாகி விட்டது.நல்ல விலை கிடைத்தால் இந்தியாவை விற்று விட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள் போல் இருக்கிறது.

 சி.ஏ.ஜி., இயக்குனர், வினோத்ராய் தனது கருத்துக்களை கூறியதாவது:
"சி.ஏ.ஜி., அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள இழப்பு, உண்மையில் மிகவும் குறைவுதான்.
 சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கின் விசாரணை நடைபெற்றது. அது, இரண்டு நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியது தொடர்பான வழக்கு. அந்த வழக்கில், மத்திய நிலக்கரித் துறையும், சுற்றுச் சூழல் துறையும் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.
அதில், பல்வேறு தகவல்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்தப் புள்ளி விவரங்கள் அடிப்படையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை, மறுபடியும் கணக்கீடு செய்தால், நிச்சயம் அது, அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கும். தற்போது, சுட்டிக் காட்டப்பட்டுள்ள, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்பதை விட, பன்மடங்கு அதிகமாகவே இழப்பு ஏற்படுள்ளது தெரிய வரும்"

அரசியல் சட்ட ரீதியான ஓர் அமைப்பு சி.ஏ.ஜி.,
 அதற்கு தலைமை தாங்கும் நான், என் அரசியல் சட்ட கடமையைத்தான் செய்துள்ளேன். ஊழல்கள் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விடக்கூடாது. அரசின் திட்டங்கள் எல்லாம், முறையாக நடக்க வேண்டும் என்ற அக்கறை, சி.ஏ.ஜி.,க்கு உண்டு. 
இந்த அறிக்கையை, நானாகவே என் இஷ்டத்திற்கு தயாரிக்கவில்லை. அரசு அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே, அறிக்கை தயாரானது. அத்தனை விவரங்களும், நிலக்கரி அமைச்சகத்தில் உள்ளன. 
சந்தேகம் கிளப்பும் யாராக இருந்தாலும், அவர்கள் நிலக்கரி அமைச்சகத்தில் இருந்து தாராளமாக விவரங்களை பெற்று தெளிவாகிக் கொள்ளலாம்.


-.இவ்வாறு வினோத் ராய் கூறியுள்ளதாக  தெரியவருகிறது.
________________________________________________________________________

அந்த கால அழகிப் போட்டி,







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?