கருத்து[ப்படங்]கள்

அசீம் திரிவேதி என்ற ஓவியர் வரைந்த ஊழல் ஒழிப்பு சம்பந்தமாக வரைந்த கருத்துப் படங்கள் [கார்டூன்கள்] பிரசுரமாகியதை சென்ற வாரக் கடைசியில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜரான அஸீம் திரிவேதி பிணையில் வர   மறுத்து விட்டா ர்.

"உண்மையைச் சொல்வதற்கு துரோகிப் பட்டம் கிடைக்கும் என்றால் தேச துரோகி என்று தான் முத்திரை குத்தப்பட்டாலும் மகிழ்ச்சிதான் "
 என்று அவர் கூறிவிட்டா ர்.

இந்திய அரசியல்வாதிகளை ,ஊழலை விமர்சித்து கேலிசெய்யும் கார்டூன்கள் சிலவற்றை வரைந்ததற்காக தான்  திரிவேதி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..

 ஒரு படத்தில் இந்திய நாடாளுமன்றம் ராட்சத கழிப்பறையாக வரைந்திருந்தார். 

மற்றவற்றில் இந்தியாவின் தேசிய சின்னம் கேலிக்குள்ளாகும் விதமாக மாற்றி வரையப்பட்டிருந்தன.

இந்திய அரசியல் சாசனத்தைக் இழிவுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேச துரோகம் தொடர்பான சட்டப் பிரிவின் கீழ் திரிவேதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


 ஓவியர் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சியும் ,மனித  உரிமை குழுக்களும் இருந்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜனநாயக நாட்டில் இப்படியான ஒரு கைது நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவே முடியாது எனக்கூறி மற்ற தரப்பினரும்கூட இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஊழலில் உழலும் அரசியல் வாதிகள் ,லட்சம் கோடிகள் கணக்கில் கொள்ளை அடித்த அரசியல்வாதிகள் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வெளியில் பதவி சுகத்தில் மரியாதைகளுடன் சுற்றிக்கொண்டிருக்க, ஊழலுக்கு எதிராக குரல்கொடுக்கும் ஒருவரைப் போய் சிறையில் அடைப்பது இந்திய அரசின் அவமானகர செயல் ஆகும் .
_______________________________________________________________________________________-____
சதைத் தழல்
-மேலாண்மை பொன்னுச்சாமி
விருதுநகர் மாவட்டம் ஒரு கந்தகபூமி. பெய்துகெடுத்த மழையைக் காட்டிலும் பெய்யாமல் கெடுத்த மழையே அதிகம். ஏறக்குறைய நிரந்தரமான வறட்சி மாவட்டம். காய்ந்தபூமி. கனல் தெறிக்கும் வெயில். அடிக்கிற காற்று கூட வெக்கை நிறைந்த தீக்காற்றாகவே இருக்கும்.

சிவகாசிக்கும் சிவகாசி வட்டாரத்திற்கும் சில சிறப்புத் தன்மைகள் உண்டு. கல்வியில் முதன்மை இடம்பிடிக்கும். தீப்பெட்டித் தொழிற்சாலைகள், பட்டாசு தொழிற்சாலை கள், அச்சுத்தொழில் போன்ற சிறப்புத் தன் மைகள் உண்டு.


விபத்துகளும் மரணங்களும் அதன் தனித்துவச்சோகம். முதல்வராக எம்.ஜி.ஆர். பொறுப்பேற்ற ஆண்டு. அடைமழை, விடாத மழையால் ஓடை ஆறெல்லாம் வெள்ளப் பெருக்கு. பட்டாசுத்தொழிற்சாலை வேலைக் காக பஸ்நிறைய புளிச்சிப்பமாக கிட்டித்து சிறுவர், சிறுமிகளை அழைத்து வந்தபோது, ஓடுபாலம் தெரியாமல் போன பெருவெள்ளத் தில் பஸ்ஸை இறக்க, பஸ்ஸை வெள்ளச் சுழல் வேகம் இழுத்துச் செல்ல... 53 பிள்ளை கள் நீர்ச்சமாதியாயிற்று. முதல்வர் எம்.ஜி.ஆர். நேரில் வந்து பார்வையிட்டார்.

நீர்ப்பெருக்கால் விபத்து நிகழ்வது எப்போ தாவது ஒருசில சமயத்தில் மட்டும். நெருப் பால்தான் அடிக்கடி விபத்து நிகழும். அடிக் கடி விபத்துகள் நிகழும். மரணம் நிகழும். மறந்துபோகும்.

பள்ளிப்பேருந்தின் ஓட்டைக்குள் தவறி விழுந்த ஸ்ருதியின் மரணமும் மறந்துபோயி ருக்க இருந்த நிகழ்வுதான். ‘சம்மன் இல்லா மல் ஆஜராகுறான்’ என்ற சொலவடையைப் போல வழக்கு யாரும் தொடுக்காமல் நீதிமன் றமே ஆஜராகி வழக்கெடுத்ததால் சில பல பரபரப்புகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும், ஆய்வுக்குழுக்களும், சில பல புதிய பாதுகாப்பு விதிகளும் வந்து கொண்டிருக்கின்றன.

சிவகாசியை சுற்றியுள்ள கிராமங்களின் கரிசல்காடுகளில் அத்துவானப் பகுதியில் அமைந்திருக்கிற பட்டாசுத் தொழிற்சாலைக ளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. விபத்துகளை வெறும் சம்பவமாக நினைத்து அலட்சியமாக கடந்து போகிறது காலம்.



நன்றி:தீக்கதிர்  
_____________________________________________________________________________________________

சிங்கள  பத்திரிகை ஒன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் ,பிரதமர் மன்மோகன் சிங்கையும் அசிங்கமாக கருத்துப்படம் வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளது.சிங்களர்களை தமிழகத்தில் இருந்து விரட்டியடிப்பதை கண்டித்து தான் இதை வெளியிட்டுள்ளதாம்.
இங்கு கொஞ்சம் அவரை பற்றி பேசினாலே வழக்கு போடும் ஜெ  இதற்கு என்ன செய்யப்போகிறார்?
அந்தப்படம் இதுதான்:
அந்த படம் மிகவும் ஆபாசம் .எனவே படத்தை அகற்றி விட்டோம்   .
நீங்கள்  அந்த படம் பார்க்க இங்கே செல்லலாம் .
இதை வெளியிட நமக்கு கொஞ்சம் கூ ச்சமாகத்தான் உள்ளது.ஆனால் இது தொடர்பாக முதல்வரும் இந்திய அரசும் என்ன நடவடிக்கை அந்த சிங்களப் பத்திரிகை மேல் எடுக்கப் போகிறார்கள்?
தாய்த்தமிழ் இணையத்தில் இருந்து.
_____________________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?