57 அமைச்சர்கள்!

 மோடி அரசில் இடம்பெற்ற 57 அமைச்சர்கள்!

 24 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
 அவர்களின் விவரம்-

1. ராஜ்நாத் சிங்.
2. அமித் ஷா
3. நிதின் கட்கரி
4. அர்ஜுன் முண்டா
5. அரவிந்த் சாவந்த்
6. தர்மேந்திர பிரதான்
7. ஹர்ஷ வர்தன்
8. சதானந்த கவுடா
9. கஜேந்திர சிங் ஷெகாவத்
10. கிரிராஜ் சிங்
11. ஹர்சிம்ரத் சிங் பாதல்
12. மகேந்திரநாத் பாண்டே
13. முக்தர் அப்பாஸ் நக்வி
14. நரேந்தி சிங் தோமர்
15. நிர்மலா சீதாராமன்
16. பியூஷ் கோயல்
17. பிரகாஷ் ஜவடேகர்
18. பிரகலாத் ஜோஷி
19. ரமேஷ போக்ரியால் நிஷாங்க்
20. ராம் விலாஸ் பாஸ்வான்
21. ரவி சங்கர் பிரசாத்
22. ஸ்மிருதி இரானி
23. சுப்ரமணியம் ஜெய் சங்கர்
24. தவார்சந்த் கெலாட்.


இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)
1. சந்தோஷ் குமார் கங்வார்
2. ராவ் இந்தர்ஜித் சிங்
3. ஸ்ரீபாத் யெசோ நாயக்
4.ஜிதேந்திர சிங்
5.கிரண் ரிஜிஜு
6. பிரகலாத் சிங் படேல்
7. ராஜ்குமார் சிங்
8. ஹர்தீப் சிங் புரி
9. மன்சுக் மந்தாவியா
 
இணை  அமைச்சர்கள்


1.பக்கான் சிங் கலாஸ்டே
2.அஸ்வினி குமார் சோபே
3.அர்ஜுன் ராம் மேக்வால்
4.வி.கே.சிங்
5.கிருஷண் பால்
6.தான்வே ராவ்சாகிப் தடாரோ
7.கிஷன் ரெட்டி
8.பர்ஷோதம் ருபாலா
9.ராம்தாஸ் அத்வாலே
10.சாத்வி நிரஞ்சன் ஜோதி
11.பாபுல் சுப்ரியோ
12.சஞ்சீவ் குமார் பால்யன்
13.தோட்ரே சஞ்சய் ஷாம்ரோ
14.அனுராக் சிங் தாகூர்
15.அங்காடி சுரேஷ் சன்னபசப்பா
16.நித்யானந்த் ராய்
17.ரத்தன் லால் கடாரியா
18.முரளீதரன்
19.ரேணுகா சிங் சருதா
20.சோம் பிரகாஷ்
21.ராமேஸ்வர் தேலி
22.பிரதாப் சந்திர சாரங்கி
23.கைலாஷ் சவுத்ரி
24. தேவஸ்ரீ சவுத்ரி


 அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில் அதிமுகவுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக மக்களவை தேர்தலை எதிர்கொண்டது.
மொத்தம் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
கட்சியின் முக்கிய தலைவர்களான மாநில தலைவர் தமிழிசை, தேசிய செயலாளர் எச். ராஜா, நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முறையே தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோவை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டனர்.

இதில் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை.
தேனி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், துணை முதல்வர்  ஓ.பி.எஸ்.-ன் மகனுமான ரவீந்திரநாத் மட்டுமே அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவின்போது அதிமுகவை சேர்ந்த 2 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டது.

 குறிப்பாக ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத்துக்கு பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிமுகவை சேர்ந்த எவருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை.


அமைச்சர்கள் தேர்வு முழுவதுமே  அமித் ஷாவின் கையில்தான் .
 அவர்கள் இருவரும் கைவிரித்து விட்டதால் தமிழகத்தை சேர்ந்த எவருக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை.
 கடந்த முறை தமிழகத்தை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் தமிழகமும், கேரளாவும் பாஜகவை முற்றிலுமாக புறக்கணித்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து அதிக அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதாவது 9 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் இருந்து 8 பேரும், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து 5 பேரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.


மோடி அரசில் இடம்பெற்ற 57 அமைச்சர்கள்! - விவரம் உள்ளே!!
பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

 மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி அரசு நேற்று மத்தியில் பதவியேற்றது. இதற்கிடையே பா.ஜனதா கட்சியின் டெல்லி பிராந்திய இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹேக்கர்கள் Bharatiya Janata Party என்பதை Beef Janata Party என மாற்றியுள்ளனர்.

மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என அனைத்து பக்கங்களையும் மாற்றியுள்ளனர்.
 இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படத்தால் நிரம்பியுள்ளது. இதனையடுத்து இணையதளத்தை சரிசெய்யும் பணியை பாஜக மேற்கொண்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?