சனி, 25 மே, 2019

டிஜிட்டல் திவால் இந்தியா

17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள், பாஜகவிற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு தீர்மானகரமான வெற்றியை அளித்திருக்கிறது.
மோடிக்கு, மீண்டும் ஆட்சி அதிகாரத்தை  அளித்திருக்கிறது.
பாஜக, முந்தைய மக்களவையில் இருந்த இடங்களைவிட மேலும் கூடுதலாக இடங்களைப் பெற்றிருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் முன்பை விட அதிக இடங்களைப் பெற்றிருக்கின்றன.
மோடி ஆட்சியின் கீழ், விவசாய நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் சீர்கேடடைந்துவருதல், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருதல் என மக்கள் சந்தித்த உண்மையான பிரச்சனைகளை ஓரங்கட்டிவிட்டு, மோடியை வல்லமை பொருந்திய நபர் என்று பாஜக தன்னுடைய பிரச்சாரத்தில் சித்தரித்ததும், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாஜக விஷம் தோய்ந்த குறுகிய தேசியவாத வெறிக் கருத்துக்களை விதைத்ததும், பாலக்கோடு தாக்குதலும், வெற்றி பெற்றிருப்பதைப் போலவே தோன்றுகின்றன.
  பாஜக, மோடி தலைமையின் கீழ், தேசியவாதம் என்கிற போர்வையில் நாட்டில் தங்களுடைய மதவெறி நிகழ்ச்சிநிரலை சிறுபான்மையினருக்கு எதிராக மிகவும் கூர்மையான முறையில் தங்களுடைய பிரச்சாரத்தின் போது எடுத்துச் சென்றது.

மேலும் தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து மட்டங்களிலும் பணத்தை வாரி இறைத்ததையும் பார்க்க முடிந்தது.

பாஜக, தன்னுடைய சமூக வலைத்தளங்களுக்கான பிரச்சாரத்தில் பல நூறுகோடி ரூபாய்கள் செலவு செய்தது. மோடி ஒரு வல்லமை பொருந்திய தலைவர் என்றும், அவர் சர்வதேச வரைபடத்தில் இந்தியாவை ஒரு மதிப்புமிக்க நாடாக மாற்றுவார் என்றும், பாகிஸ்தானிலிருந்து வருகின்ற பயங்கரவாதத்தை ஒடுக்கிவிடுவார் என்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், ‘வாட்சப்’  மூலமாகவும் மிகவும் விரிவானமுறையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இத்தேர்தல் முடிவுகள், 2014 தேர்தலுக்குப்பின்னர் வலதுசாரிகள் கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்கள் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதன் சமிக்ஞையேயாகும். எதார்த்தமான நிலை என்னவென்றால், பாஜக-ஆர்எஸ்எஸ் வகையறாக்களால் ஏவப்பட்ட அரசியல் மற்றும் தத்துவார்த்தத் தாக்குதலுக்கு இடதுசாரிகள் உட்பட மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகள் ஒரு வலுவான சவாலாக உருவாகவில்லை என்பதேயாகும்.

இத்தேர்தலில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்திய அம்சம் என்னவெனில், பாஜகவின் அத்துமீறல் நடவடிக்கைகள் அனைத்திற்கும் உதவும் வகையிலேயே தேர்தல் ஆணையத்தின் பங்களிப்பு அமைந்திருந்ததாகும்.

தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளையும் சமமாக நடத்தவில்லை என்பது மட்டுமல்ல;  நரேந்திர மோடியும் அமித் ஷாவும் மேற்கொண்ட வெறிப்பேச்சுக்களை, சரியானவையே என்று நியாயப்படுத்தியதுமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக்கட்சிகளும் கடும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரிபுராவிலும், மேற்கு வங்கத்திலும் ஆட்சியாளர்கள் நம்மீது ஏவிய பயங்கரமான வன்முறைத் தாக்குதல்கள், மிரட்டல்கள்களுக்கு எதிராகப் போராடித்தான் தேர்தலைச் சந்தித்தோம்.

 இவற்றுக்கு எதிராகக் கடுமையான முறையில் கட்சி போராடியபோதிலும், கட்சியால் எங்கேயும் வெற்றியைப் பதிவு செய்ய முடியவில்லை.

ஆனால் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி மிகவும் மோசமான முறையில் தோல்வியடைந்திருப்பதும் ஏமாற்றத்தை அளிக்கிறது, இதுவும் மிகப் பெரிய பின்னடைவுமாகும்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடைசி நேரத்தில் கேரளாவை தேர்ந்தெடுத்து தீவிர பரப்புரை மேற்கொண்டதும் , போட்டியிட்டதும் ஒரு காரணம்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஓர் அங்கமாகப் போட்டியிட்டு, போட்டியிட்ட இரு இடங்களிலும் சிறப்பான முறையில் வெற்றி பெற்றிருக்கிறது.

மீண்டும் பாஜக தலைமையிலான அரசு அமையவுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன.

 பொதுவாக தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்வது வழக்கம்தான் என்றாலும், இந்தமுறை பாஜகவின் தேர்தல் பிரிவு போலவே ஆணையம் செயல்பட்டது அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
                      பெயர் ஒன்று .படம் வேறு.
"ஸ்டாலின் வாழ்க".

கடந்த பல்வேறு தருணங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த அறிவிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாகவே அமைந்தன. மக்களவைத் தேர்தலில்தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைஎதையும் ஏற்கவில்லை.

ஆனால் பாஜகவின் கட்டளைகளை சிரமேற்கொண்டு செயல்படுத்தியது.
 தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின் படிஅமைக்கப்படும் சுயேச்சையான அமைப்பு என்று கூறப்பட்டாலும் மத்திய ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்பவே ஆணையர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் தங்கள் பதவிக்காலத்தில் ஆளும் கட்சியின் விருப்பத்திற்கேற்பவே செயல்படுகிறார்கள்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடிநடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.

அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்ட இயந்திரம் தவறு செய்யாது என்றாலும் அந்த இயந்திரத்தை கையில் வைத்திருப்பவர்கள் தவறு செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறிவிட முடியாது.

 தமிழ் நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வரப்பட்டது பெரும் சர்ச்சையை எழுப்பியது.

மறுபுறத்தில் வடமாநிலங்களில் மளிகைக் கடைகளிலும் ஹோட்டல்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களின் மர்மம் என்ன என்பது குறித்து தெளிவான பதில் இல்லை.
மேற்குவங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களில்  எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறைப்படி பிரச்சாரம் செய்வது கூட தடுக்கப்பட்டது.

குறிப்பாக மேற்குவங்கத்தில் மத்திய ஆளும் கட்சியும் மாநில ஆளும்கட்சியும் மோதிக் கொள்வது போல காட்டிக் கொண்டாலும் இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் ஆதரவாளர்கள் இருதரப்பாலும் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.

 திரிபுராவில் தேர்தலுக்கு பின்பு இடதுசாரிஆதரவாளர்கள் மீது மிகப்பெருமளவு கொலைவெறித்தாக்குதல் கட்டவிழ்த்துப்படப்படுகிறது.
 முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தேர்தல் ஆணையர்களிடையே மோதல் ஏற்பட்டதும் மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படாத ஆணையர்கள் மிரட்டப்பட்டதும் நடந்தது.

இந்த தேர்தல்களிலும் பாஜக கூட்டணி பெற்றுள்ள வாக்குகளுக்கும், இடங்களுக்குமிடையில் பெரும் வித்தியாசம் இருப்பதை உணர முடியும்.

தேர்தலில் பண ஆதிக்கத்தை தடுக்கவும், தனிநபர் ஆதிக்கத்தை குறைக்கவும், சமத்துவமான பிரதிநிதித்துவத்திற்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை உதவியாக இருக்கும்.

இந்திய தேர்தல் ஆணையத்தை சீர்செய்வது குறித்தும், ஆணையர்களை ஆளுங்கட்சியே தீர்மானிப்பதை தடுத்து எதிர்க்கட்சிகள்,உச்ச நீதிமன்றம்,அனைவரும் இணைந்து தேர்ந்தெடுப்பது பற்றியும்  நல்ல முடிவை எடுப்பது கட்டாயம்.
கடந்த மூன்று முறையும் தேர்தல் ஆணையர்கள் குஜராத்தில் இருந்து அனறைய முதல்வர் மோடிக்கு கீழ் செயல்பட்ட,இந்துத்துவா பின்னணி கொண்டவர்களாகவே பாஜகவால் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இன்றைய தேர்தல் ஆணையர்கள் கேவலமான செயல்பாடுகள் இந்திய மக்களிடையே தேர்தல் ஆணையத்தை கீழ்த்தரமான பாஜக கட்சி சார்பான செயல்பாடுகள் கொண்டதாக எண்ணத்தை உருவாக்கி விட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேசிய அளவில் 303 இடங்களில் தாமரை சின்னத்தில் வெற்றி பெற்று பாஜக முதலிடத்தையும்,


 52 இடங்களில் கை சின்னத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும், 

23 இடங்களில் உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெற்று திமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 


மேலும் அடுத்தப் படியான  இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ்,
 ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்,
 சிவசேனா  கட்சிகள் இடம் பெற்றுள்ளது. 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
டிஜிட்டல் திவால் இந்தியா
மத்திய அரசின் பத்திரங்களில் வங்கிகள் செய்யும் முதலீட்டின் வளர்ச்சி, கடந்த 35ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது.

இதன் 1.9 சதவீதம் என்ற மிகக்குறைவான வளர்ச்சி, 1985-86 நிதியாண்டிற்குப்பின் இவ்வாண்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடன்கள் உயர்வுவேறு முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால், வங்கிகளின் முதலீடு குறைந்துள்ளது என்பதாக வணிக ஊடகங்கள் இச்செய்தியைஅணுகுகின்றன.

அதைப்போலவே, தொழில்களுக்கு வங்கிகள் வழங்கியுள்ள கடன்களின் வளர்ச்சி என்பது கடந்த ஆண்டின் 10.3 சதவீதத்திலிருந்து, 13.2 சதவீதமாக மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது.கடன்கள் என்றதுமே, வராக் கடன்கள் நினைவுக்கு வருவதால், திரும்பி வராதவை என்று கருத வேண்டியதில்லை.
ஒரு முதலாளித்துவப் பொருளாதாரத்தில், தொழில்களுக்கான வங்கிக் கடன்களின் வளர்ச்சி என்பதுதொழில் வளர்ச்சியாகவே பார்க்கப்படவேண்டும். இந்தக் கடன்களின் வளர்ச்சிக்கேற்ற தொழில்வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பது வேறு பிரச்சனை.

ரிசர்வ் வங்கி வாங்கியதுஆனால், வங்கிகள் வாங்காத அரசுப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்கியுள்ளது என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய செய்தி.
 2018-19நிதியாண்டில் மட்டும், ரிசர்வ் வங்கி ரூ.2.98 லட்சம்கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கியுள்ளது.
கடந்த காலங்களைவிட இது மிக அதிகம். பணப்புழக்கத்தைப் பராமரிப்பதற்காகவே இவ்வளவு மதிப்பிற்குப் பத்திரங்களை வாங்கியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

 பொதுச்சந்தைச் செயல்பாடுகளின்மூலம் வாங்கியது பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைதான்.அதிகரித்த ரொக்கப்பணப்புழக்கம் பணப்புழக்கம் என்பது நாணயமாகப் புழங்கும் பணம் மட்டுமல்ல என்றாலும், ரிசர்வ்வங்கி தெரிவித்திருக்கும் மற்றொரு தகவல் இங்குகவனிக்கத்தக்கது.
அதாவது, நிதியாண்டின் இறுதியில் மக்களிடையே புழக்கத்திலிருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.21.22 லட்சம்கோடி. (ஏப்ரலில் அது 21.62 லட்சம் கோடியாகிவிட்டது!)

 கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது புழக்கத்திலிருந்த ரொக்கப்பணம் ரூ.17-18 லட்சம் கோடிதான் என்பதுதான்.
கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலும்ரொக்கப்பணம் புழக்கத்திற்கு வந்துள்ளது என்பதிலிருந்து, ஒன்று ரொக்கப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தப்போவதாக மோடி அரசு கூறியதில் தோற்றுப்போய்விட்டது, அல்லது பணமதிப்புநீக்க நடவடிக்கையின் நோக்கம் வேறு எதுவாகவோ இருந்துள்ளது என்றுதான் கருதவேண்டியுள்ளது.

நிச்சயமாக இரண்டாவதுதான் சரி என்பதும், அந்த மாபெரும் ஊழல் குறித்த முழுமையான விபரங்கள் நிச்சயம் ஒரு கட்டத்தில் வெளியாகும் என்பதுமே மறுக்க முடியாத உண்மைகள்.52 சதவீதம் ரிசர்வ் வங்கியிடமிருந்துரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு என்ன காரணம் கூறப்பட்டாலும், ரிசர்வ் வங்கியின் நிதியிலிருந்து ரூ.2.98 லட்சம் கோடி, அரசுக்குக் கிடைத்துள்ளது.
முடிந்த நிதியாண்டில் பத்திர வெளியீட்டின்மூலம் அரசு திரட்டியுள்ள ரூ.5.71 லட்சம் கோடியில் இது 52.19 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.இதைத் தவிர, ரிசர்வ் வங்கியிடமிருந்து இடைக்கால ஈவு ஆக ரூ.28 ஆயிரம் கோடியைவலுக்கட்டாயமாக மத்திய அரசு பிப்ரவரி மாதத்தில் வாங்கியது. ரிசர்வ் வங்கி ஜூலையிலிருந்து ஜூன் வரையிலான ஆண்டைக் கணக்கீட்டிற்குப் பயன்படுத்துகிறது.

 டிசம்பரில் அரையாண்டுக் கணக்கைத் தணிக்கை செய்து முடித்தபோது கணக்கிடப்பட்ட உபரியை உடனடியாகத் தருமாறு அரசு நெருக்கடிகொடுத்து, ரூ.28 ஆயிரம்கோடியை வாங்கிக் கொண்டது.மேலே சொன்ன ரூ.2.98 லட்சம் கோடியுடன், இந்த ரூ.28 ஆயிரம் கோடியையும் சேர்த்தால், மொத்தம் ரூ.3.26 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசு வசூலித்திருக்கிறது.
உர்ஜித் பட்டேல்இப்போது, ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித்பட்டேல் பதவி விலகியதற்கான காரணமாகப் பேசப்பட்டதை நினைவுபடுத்திப் பாருங்கள்!
ரிசர்வ் வங்கியிடம் உபரியாக இருப்பதாக மத்தியஅரசு கருதிய ரூ.3.5 லட்சம் கோடியைத் தருமாறுநெருக்கடி கொடுத்ததாலேயே அவர் பதவி விலகினார் என்பது ஊரறிந்த மட்டுமல்ல, ஊரெல்லாம்பேசிய ரகசியம்!

ரிசர்வ் வங்கியின் ஜூன் 2018 வரையான அதன்கணக்கில், நாணயம், தங்கம் ஆகியவற்றின் மறுமதிப்பீட்டு நிதியாக ரூ.6.92 லட்சம் கோடியும், அவசரகால நிதியாக ரூ.2.32 லட்சம் கோடியும் காணப்பட்டன. இவற்றைச் சுட்டிக்காட்டித்தான், ரூ.3.5 லட்சம் கோடியை மோடி அரசு கேட்டதாகதகவல்கள் கூறின.

அவசரகால நிதியின் தேவைஅவசரகால நிதி என்பது, ரூபாய் மதிப்பு எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 2008-09இல்ரூ.1.99 லட்சம் கோடியாக இருந்த மறுமதிப்பீட்டு நிதி 2017-18இல் 6.92 லட்சம் கோடியாக, சுமார் மூன்றரை பங்காக வளர்ந்தாலும், அன்று ரூ.1.53லட்சம் கோடியாக இருந்த அவசரகால நிதி, இரண்டு பங்காகக்கூட வளராமல், ரூ.2.32 லட்சம்கோடியாகத்தான் உள்ளது என்பதே கவலைக்குரிய செய்திதான்.மறுபுறம், மறுமதிப்பீட்டு நிதி என்பது, தங்கம்,செலாவணி ஆகியவற்றின் மதிப்பில் ஏற்படும்மாற்றங்களின் விளைவுகளை எதிர்கொள்வதற்கானது.

உண்மையில், ரிசர்வ் வங்கியிடமுள்ளதங்கம், அந்நியச் செலாவணி ஆகியவற்றின் மதிப்புஉயரும்போது கிடைக்கும் லாபம் இதில்தான் சேரும். அதாவது, ரூபாய் மதிப்பு உயர்ந்தால் இது குறையலாம்.
தேயும் ரூபாய்ஆனால், 2013இல் மோடி பதவியேற்பதற்கு முந்தையநாள் ஒரு டாலருக்கு ரூ.58.52 ஆகஇருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, அவரது பதவிக்காலம் முடிந்த மே மாதத்தில் ரூ.70.98ஐத் தொட்டது எனும்போது, இது அதிகமாகத்தான் இருக்கவேண்டும்.

ஆனால், 2012-13இல் கையிருப்பிலிருந்த தங்கம், அந்நியச் செலாவணி ஆகியவற்றின் மதிப்பில் 31 சதவீதத்தை மறுமதிப்பீட்டு நிதியாக ரிசர்வ் வங்கி வைத்திருந்த நிலை, 2017-18இல் 25 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பதுதான் உண்மை.
எனவே, இந்த நிதியிலிருந்து எடுப்பது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகிவிடும் என்பதால்தான், மோடி குழுமத்தால் நியமிக்கப்பட்ட உர்ஜித் படேலே பதவியைவிட்டுச் சென்றுவிட்டார்.

திடீரென்று 200 ரூபாய்நோட்டை எப்படி ஏடிஎம்மில் வைப்பது, ஒரேமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை இரண்டு அளவுகளில் வெளியிட்டால் எந்திரம் மட்டுமல்ல, மனிதர்களே குழம்பிவிடுவார்கள் என்பனவற்றைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இன்றி மேகமூட்டத்தின் மறைவில் டிஜிட்டல் இந்தியாவிற்குச்சென்ற மோடி அரசால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியுமா?

 அதனால்தான், எது எப்படிப்போனாலும், தான் கேட்ட தொகையை ஏதோ ஒரு வழியில் வசூலித்திருக்கிறது.முதன்முறையாக இடைக்கால ஈவுரிசர்வ் வங்கியின் வரலாற்றில் இடைக்கால ஈவு என்பதே கடந்த ஆண்டில்தான் முதன்முறையாக வழங்கப்பட்டது.

அதாவது, எப்படியிருந்தாலும் ஆறு மாதம் கழித்து வரப்போகிற தொகையைக்கூட, இப்போதே வாங்கி செலவழிக்கிற நிலையில்தான் அரசின் நிதிநிலை இருந்திருக்கிறது என்பது எப்படிப்பட்ட மோசமான நிர்வாகத்தை மோடி அரசு நடத்தியிருக்கிறது என்பதற்கான உதாரணம்.பங்கு விற்பனை உள்ளிட்ட அனைத்திலும் உரிய விலை கிடைக்காவிட்டாலும், நிர்ணயித்த தொகைக்கு அடிமாட்டு விலைக்காவது விற்றது உள்ளிட்ட வருவாய்களுக்குப் பின்னரும் இத்தகைய நெருக்கடி நிலவியதால்தான், விதைநெல்லை விற்பதுபோல, ரிசர்வ் வங்கியின் அவசரகால நிதியையும் எடுத்து செலவிட முயற்சித்திருக்கிறது மோடி அரசு என்பதிலிருந்து, விடுதலை இந்திய வரலாற்றின் மிகமோசமான அரசு இதுதான் என்பது வெளிப்பட்டிருக்கிறது!

இரண்டாவது ஆட்சிக்காலத்தில்  இருக்கிற எல்லாவற்றையுமே விற்றுவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது..!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் முதல்வர் .
திண்டுக்கல்  தி.மு.க. வேட்பாளரான வேலுச்சாமி 7லட்சத்து 46ஆயிரத்து 523 ஓட்டுக்களும்,
அ.தி.மு.க. வேட்பாளரான ஜோதிமுத்து 2லட்சத்து 7ஆயிரத்து 551 ஓட்டுக்களும் வாங்கினார்.


இதன்மூலம் வேலுச்சாமி 5லட்சத்து 38ஆயிரத்து 972 வாக்கு வித்தியாசத்தில் தமிழகத்திலேயே வேலுச்சாமி அதிக ஓட்டுக்கள் வாங்கி வெற்றிபெற்று சாதித்துள்ளார்.

 அதுமட்டுமல்ல இந்திய அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தையும் வேலுச்சாமி பிடித்து சாதனை படைத்து இருக்கிறார்.

ஆனால் மாயத்தேவர் மகத்தான வெற்றி மூலம் இரட்டை இளைக்கும்,அ.தி.மு.க.விற்கும்  அடித்தளம் போட்ட திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் உள்ள
ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய இரு சட்ட்மன்ற தொகுதிகளில் காப்புத்தொகை (டெபாசிட்) கூட அ.தி.மு.க. வாங்கவில்லை  என்பதுதான் அதிமுக ஆரமப கால தொண்டர்களின்  வேதனை.

  முதல்வர் பழனிசசாமியின்  சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் 800 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.சென்ற தேர்தலில்  திமுக அங்கு மொத்தமாக 200க்கும் குறைவாகவே வாக்குகளை பெற்றது..

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள்.

தி.மு.க - 1,38,77,622 வாக்குகள்

அ.தி.மு.க - 78,30,520 வாக்குகள்
காங்கிரஸ் - 54,05,674 வாக்குகள்
பா.ஜ.க - 15,51,924 வாக்குகள்.


வாக்கு விழுக்காடு 
தி.மு.க கூட்டணி - 52.3 %


தி.மு.க - 32.96%

அ.தி.மு.க கூட்டணி - 29.75%

அ.தி.மு.க - 18.48%

 மக்கள் மன்றத்தில் களமாட புறப்படும் தமிழ்மண்ணின் படைப்பாளிகளுக்குவாழ்த்துகள்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய், ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்தா போஸ்,

கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி போபண்ணா ஆகியோரை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்தது.

நான்கு பேரையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த, 22ல், உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, நான்கு பேரும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக, நேற்று பதவியேற்றனர்.

அவர்களுக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 இதன்மூலம் 27 பேராக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

நீதிபதி கவாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக, 2025ம் ஆண்டு பொறுப்பேற்பார்.
இந்தப் பதவியில், அவர், ஆறு மாத காலம்நீடிப்பார்.

அவருக்கு பின், தலைமை நீதிபதியாக, நீதிபதி சூர்யகாந்த் பொறுப்பேற்பார்.
2027ம் ஆண்டு பிப்ரவரி வரை, அவர், தலைமை நீதிபதியாக இருப்பார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------