பாஜக-ஜியோ -தேர்தல் ஆணையக் கூட்டணி.


2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதில் தொடங்கி, அடுத்தடுத்து நடைபெற்ற அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும் பி.ஜே.பி. வெற்றிபெற்றது மின்னணு இயந்திரங்களை `ஹேக்' செய்துதான் என ஹைதராபாத்தைச் சேர்ந்த கம்யூட்டர் ஹேக்கர் சையது சுஜா என்பவர் குற்றஞ்சாட்டியுள்ளது, டெல்லி அரசியலைக் கிடுகிடுக்க வைத்துள்ளது.

ஐரோப்பாவுக்கான இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், சையது சுஜா இந்தக் குற்றச்சாட்டைப் பகிரங்கமாக முன்வைத்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவரான சையது சுஜா, பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவிலிருந்து `ஸ்கைப்' வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக இந்நிகழ்வில் பங்கேற்றதாகக் கூறப்பட்டது.
இந்நிகழ்வுக்கு, இந்தியாவிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் மட்டும் கலந்துகொண்டார்.


 பல மூத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில்  ஜனவரி 21-ம் தேதி நடைபெற்ற நிகழ்வில், சையது சுஜா முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் `
இந்திய அரசியலையே தெறிக்கவிடும் .

 ``நான் 2004 முதல் 2014 வரையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான `எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.)' நிறுவனத்தில் பணிபுரிந்தேன்.
இந்நிறுவனம்தான் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கிறது. இஸ்ரோ, இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் போன்ற அமைப்புகளுக்கும் ரேடார் தொழில்நுட்பங்களைத் தயாரித்து வழங்குகிறது.

`மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா?' என்று ஜூன் 2013-ல் இ.சி.ஐ.எல். நிர்வாகிகள் எங்களை ஆய்வு செய்யச் சொன்னார்கள்.
எங்களது ஆய்வில், வாக்குப்பதிவு இயந்திரங்களை `ஹேக்' செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்தோம். குறைந்த அளவு அதிர்வெண் மூலம், வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள  டிரான்ஸ்மீட்டர் சிப்புகளை ஹேக் செய்ய முடியும். இதன்மூலம் நாம் அனுப்பும் தரவுகளை வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள் புகுத்தி, விரும்பிய கட்சிக்கு அதிக வாக்குகள் விழுந்தவாறு தேர்தலையே மாற்றியமைக்க முடியும்.
அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தொடாமலேயே, இதைச் செய்து முடிக்கலாம். 

எங்கள் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்த பின்னர், பி.ஜே.பி'-யின் மஹாராஸ்டிரா தலைவர் கோபிநாத் முண்டே எங்களை வந்து சந்தித்தார்.  ` `ஹேக்' செய்ய முடியாத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் உருவாக்குவோம்' எனக் கூறினார்.
அந்த நேரத்தில்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தலும் வந்தது.
ஏப்ரல் 13, 2014-ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து `சிக்னல்'கள் வெளியாவதை எனது டீம் கண்டுபிடித்தது.
இயந்திரங்களை `ஹேக்' செய்து பி.ஜே.பி மோசடி செய்வது தெரியவந்தது. எங்களுக்குத் தெரிந்ததை வெளியே சொல்லாமல் இருக்க, பி.ஜே.பி தலைவர்களை `பிளாக் மெயில்' செய்ய முடிவெடுத்தோம்.

 மே 13, 2014-ல், நான் உட்பட எனது 14 பேர் கொண்ட டீம்,  பி.ஜே.பி தலைவர் ஒருவரைச் சந்திக்க ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான `கிஷான்பாக்' சென்றோம்.

ஒருமணிநேரம் காத்திருப்புக்குப் பிறகு, காரில் வந்திறங்கிய அந்தத் தலைவர், எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் கடந்துசென்று, தன்னோடு வந்தவர்களிடம் எங்களைச் சுடச் சொன்னார்.

அவர்கள் எங்களைச் சரமாரியாகச் சுட்டதில், என்னுடைய டீம் மொத்தமும் கொல்லப்பட்டது.

எனக்கும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால், நான் இறந்துவிட்டதாகக் கருதி, சுவராஜ் மாஸ்டா வேனில் ஏற்றி எங்கோ கொண்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் எனக்கு மயக்கம் தெளிந்து விழிப்பு வந்தவுடன், அங்கேயிருந்து தப்பித்து எனது நண்பர்கள் உதவியுடன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தேன்.

இந்தக் கொலைகளை மறைப்பதற்காக, அடுத்த நாள் மே 14-ம் தேதி, கிஷான்பாக் பகுதியில் செயற்கைக் கலவரம் ஏற்படுத்தப்பட்டது.

இதில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் மூவர் இறந்ததாகக் கணக்குக் காட்டினர்.
 உண்மையில், எனது டீம் உறுப்பினர்களின் பிணங்களை அப்புறப்படுத்தவும், இவ்விவகாரத்தை மூடி மறைக்கவுமே இக்கலவரம் ஏற்படுத்தப்பட்டது.
 இதை, டி.ஆர்.எஸ்., காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியினரும் கேள்வி எழுப்பவில்லை. இந்தியச் சட்டப்படி நான் இறந்துவிட்டதாகத்தான் பதிவு இருக்கிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை `ஹேக்' செய்துதான் 278 இடங்களை பி.ஜே.பி. கைப்பற்றியது.
201 இடங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியதற்கும் இதுதான் காரணம். ராணுவத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அலைவரிசையைக் கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பி.ஜே.பி `ஹேக்' செய்துள்ளது.
இதற்கான உதவியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செய்துகொடுத்துள்ளது.

 இதற்குத் தேவையான குறைந்த அதிர்வெண் சிக்னல்களை ஒலிபரப்ப இந்தியா முழுவதும் ஒன்பது இடங்களில் ஜியோ மையங்கள் உள்ளன. இவற்றிலிருந்துதான் தரவுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் புகுத்தப்பட்டு `ஹேக்' செய்யப்படுகிறது.
 இப்பணியைச் செய்யும் ஜியோ நிறுவன ஊழியர்களுக்குக்கூட, எதற்காகத் தாங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளோம் என்பது தெரியாது.
முகமது தன்சில் அகமது

இந்தப் பின்புலம் எல்லாம் தெரிந்ததால்தான், 2014 தேர்தல் முடிவுற்ற சில தினங்களிலேயே, பி.ஜே.பி தலைவர் கோபிநாத் முண்டே வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.

 இவ்விபத்தை விசாரித்து வந்த தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரி முகமது தன்சில் அகமது, கோபிநாத் முண்டே இறப்பு, கொலை என எப்.ஐ.ஆர். போட முடிவெடுத்தபோது, ஏப்ரல் 2, 2016-ல் அவரும் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இறுதியில் பழிவாங்கும் நோக்கத்திற்காக அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் வழக்கை மூடியது.


2015-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை `ஹேக்' செய்ய பி.ஜே.பி முயற்சி செய்தது.
நானும், எனது நண்பர்களும் இணைந்து அம்முயற்சியை முறியடித்தோம். பி.ஜே.பி'க்கு விழ வேண்டிய வாக்குகளை ஆம் ஆத்மிக்கு நாங்கள் மடைமாற்றியதால், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67-லில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை `ஹேக்' செய்ய பி.ஜே.பி முயன்றது. எனது டீம் அம்முயற்சியை முறியடித்ததால், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தனர்.

இந்திய தேர்தல் ஆணையம், பி.ஜே.பி., இ.சி.ஐ.எல். அமைப்புகள் எனது குற்றச்சாட்டுகளை மறுக்கும். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. உண்மை என்னவென்பதை கூறிவிட்டேன்.
 தேர்தல் ஆணையத்திடம் 14 விதமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. நாம் கேள்வி கேட்கும் பட்சத்தில், `ஹேக்' செய்யவே முடியாத இயந்திரங்களை நம்முன்னர் வைப்பார்கள்.
ஆனால், தேர்தலில் பயன்படுத்துவதோ, ஹேக் செய்யக்கூடிய இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள்.
கெளரி லங்கேஷ் 


இவ்விவரத்தை எல்லாம் மறைந்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷிடம் கூறினேன். அவரும் இதை வெளி உலகத்திற்குக் கொண்டு வர முயற்சி செய்தார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் வயர்களைத் தயாரிப்பது யார்?
எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பினார்.
அவர் மோப்பம் பிடித்துவிட்டார் என்பதை உணர்ந்தவர்கள், அவரையும் கொன்றுவிட்டனர்.

அமெரிக்காவில் அடைக்கலம் கோருவதற்காக, என்னிடமுள்ள ஆதாரங்கள் அனைத்தையும் அமெரிக்க அதிகாரிகளிடத்தில் சமர்ப்பித்துள்ளேன்.
என்னை அணுகும் எந்தப் பத்திரிகையாளருக்கும் அந்த ஆதாரங்களைத் தரச் சம்மதிக்கிறேன்" என்றார்.

 கம்ப்யூட்டர் ஹேக்கர் சையது சுஜா வீசியுள்ள குண்டு, டெல்லி அரசியலை அதிரச் செய்துள்ளது.
இதன் பாதிப்பு எங்கேயெல்லாம் ஏற்படப் போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஏற்றம். 


2014 லோக்சபா தேர்தலில், திமுக 23.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த திமுக, இத்தேர்தலில், 32.76 சதவீத வாக்குகளை பெற்று அசத்தியுள்ளது. 
 

2014 தேர்தலில், 4.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ், இந்த தேர்தலில், 12.76 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி2014 தேர்தலில் 4.4 சதவீதம். , இந்த தேர்தலில் 5.42 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
 2014 லோக்சபா தேர்தலில் மொத்தமாக 12.8 சதவீத வாக்குகளை பெற்றிருந்த மற்ற கட்சிகள், இம்முறை 24.62 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன.


இறக்கம்.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில், அதிமுகவின் வாக்கு கடுமையாக சரிவடைந்துள்ளது. 2014ல் 44 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த அதிமுக, இந்த தேர்தலில், 18.49 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

2014 தேர்தலில் 5.5 சதவீத வாக்குகளை பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி, இந்த தேர்தலில் 3.66 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில், 5.1 சதவீத வாக்குகளை பெற்ற தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தேமுதிக) இம்முறை, 2.19 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் வரும்  3 நாட்களுக்கு

 ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை 
முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

 என சென்னை வானிலை ஆய்வு மையம் 
தெரிவித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 விலகி ஒதுங்க வேண்டாம்.
மேதியில் கடந்த 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்தது மீண்டும் நடைபெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் மக்களவை தேர்தல் கடந்த 1952 ஆம் வருடம் நடைபெற்றது. அப்போதிருந்து தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி புரிந்து வந்தது. காங்கிரஸ் கட்சியின் முதல் பிரதமராக நேரு பதவி ஏற்றார். அவர் மறைவுக்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். அவர் மிகக் குறுகிய காலத்தில் மரணம் அடைந்ததால் இந்திரா காந்தி பதவி ஏற்றார்.

கடந்த 1977 ஆம் வருட மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை இழந்தது. இந்தியாவின் இரும்புப் பெண்மணி என உலகப் புகழ் பெற்ற இந்திரா காந்தி அம்முறை அமேதி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். அவரை ஜனதா கட்சி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ராஜ் நாராயணன் தோற்கடித்தார். அதன் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அமேதியின் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்த வருடம் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்துள்ளார். கடந்த 1977 ஆம் ஆண்டு தேர்தலின் போது இந்திரா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தார். தற்போதைய தேர்தலில் ராகுல் காந்தியை பாஜகவின் ச்ம்ரிதி இரானி 55120 வாக்குகளில் வென்றுள்ளார். 1977 ஆம் வருடம் இந்தியா காந்தியை ஜனதாவின் ராஜ் நாராயணன் 55,202 வாக்குகளில் வென்றார்.
இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்

அதுமட்டுமின்றி, மீண்டும் தலைவர் பதவியில் செயலாற்றி, “கட்சியை முழுமையாக மறு சீரமைப்பு செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், “இந்த கடினமான காலக்கட்டத்தில்” இருந்து கட்சியை ராகுல் காந்தி வழிநடத்த வேண்டும்.
அவரது தலைமைப் பண்பு குறித்து யாரும் ஐயம் கொள்ளவில்லை.
இந்தச் சூழ்நிலையில் கட்சியை ஒருவரால் வழிநடத்த முடியுமென்றால் அது ராகுல் காந்தி மட்டும் தான். எதிர்க்கட்சிக்கு ஒருவரால் தலைமைத் தாங்க முடியுமென்றால் அது ராகுல் காந்தி மட்டும் தான்” என்றார்.


கட்சித் தீர்மானத்தில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு எதிர்க்கட்சியாக பணியை சிறப்பாக செய்ய வேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.
ராகுல் காந்தி நமது சித்தாந்தத்தின் படி கட்சியை வழிநடத்தி, இந்தியாவின் இளைய தலைமுறை, விவசாயிகள், எஸ்சி/எஸ்டி/ஓபிசி-க்கள், சிறுபான்மையினர், ஏழைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்” என்றார்.

நரேந்திர மோடி வழிநடத்தும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி இரண்டாவது முறையாக மாபெரும் சக்தியாக ஆட்சியை பிடித்திருக்கிறது.
பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை வென்றது.
காங்கிரஸ் தனித்து 52 இடங்களை மட்டுமே வென்றது.
இருப்பினும், வங்கித் துறை, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் பாஜக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘காங்கிரஸ் தேர்தலில் தோற்றிருக்கலாம், ஆனால், நமது தைரியம், போராடும் குணம், நமது சித்தாந்தங்கள் இதுவரை இல்லாததைவிட அசுர பலம் பெற்றிருக்கிறது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே ராகுல்காந்தியின் செயல்பாடுகள் நல்லமுறையில் இருந்த்து எனலாம்.பிரியங்கா வந்தால் வாக்குகளை அள்ளலாம் என்றுதான் உ.பி.மாநிலத்தில் பரப்புரை முழுக்க அவரை வசம் ஒப்படைக்கப்பட்டது.அமேதியில் ராகுல்காந்தி தோல்வியைத்தழுவியத்தான் மிச்சம்.

காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணம் பாஜக தேர்தல் ஆணைய கூட்டணியினரின் தில்லு முல்லுகள்தான்.
உபி,ராஜஸ்தான் ,மபிக்களில் வாக்கு எந்திரங்கள் பட்டப்பாட்டை லகம் முழக்கவே பார்த்தது அதிர்ந்தது.
வெளிநாடுகள் ஊடகங்கள் கூட "மோடியின் வெற்றி தேர்தல் ஆணையத்தின் தில்லு,முல்லு மூலம் கிடைத்த வெற்றி.அவர் இரண்டாம் முறை பிரதமரானது இந்திய மக்களாட்சிக்கு  ஆபத்து "என்றுதான் எழுதியுள்ளன.

காங்கிரஸ் இந்த தேர்தலில் செய்த தவறு ,மாபெரும் தவறு ஒன்று மட்டுமே.
தமிழ்நாட்டில் திமுகவுடன் பலமான கூட்டணி அமைத்து வெற்றியை போல் மற்ற மாநிலங்களிலும் வலுவான கூட்டணியை மாநிலக்கட்சிகளுடன் வைக்காததுதான்.
மேலும் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ராஜஸ்தான்,ம.பி.மாநிலங்களில் பாஜக-தேர்தல் ஆணைய தில்லு முல்லுகளை சரிவர எதிர் கொள்ளாததுதான்.காவல்துறையை கையில் வைத்துள்ள காங்கிரஸ் முதல்வர்கள் அவற்றை எளிதாக தடுத்திருக்கலாம்.அல்லது பிரச்னையை பூதகரமாக்கி தேர்தல் ஆணையம்,பாஜகவுக்கு நெருக்கடி தந்திருக்கலாம்.
ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய செயல்பாடுகளை அசிங்கபப்டுத்தியிருக்கலாம்.
தேனி தொகுதிக்கு முன்னறிவிப்பின்றி வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டுவந்த தேர்தல் ஆணையம் எவ்வளவு திணறல்களை திமுக மற்றும் எதிர்கட்சிகளால் எதிர்கொண்டு தனது பித்தலாட்டங்களை செய்தது என்பதை காங்கிரஸ் அறிந்ததுதானே அதையே தான் ஆளும் மாநிலங்களை கூட செய்யாதது ஏன்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேர்தல் முடிந்தவுடன் வடமாநிலங்களில் மோடிக்கு ஓட்டு போட்ட பசு குண்டர்கள் மீண்டும் வன்முறையை ஆரம்பித்துவிட்டார்கள்..

மத்திய பிரதேசத்தில் மாட்டுக்கறி எடுத்து சென்றதாக கூறி மூன்று முஸ்லிம்கள் மீது ஆர்எஸ்எஸ் ஹிந்துத்துவா கும்பல் கொடூர தாக்குதல்.. "ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லச் சொல்லி தாக்குதல்..

இப்படியான கலவரங்களை தென் மாநிலங்களில் செய்யத்தான் பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பல் கடுமையாக முயற்சிக்கிறது..
மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..
-----------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?