சனி, 11 மே, 2019

கோட்டையில் யார்க் கொடி?

2002-ல் குஜராத்தில்  நடந்த கலவரங்களைத் தொடர்ந்து  நரேந்திர மோடி தலைமையிலான அரசை கலைக்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.


போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் யஷ்வந்த் சின்ஹா. 


அப்போது அவர், 
“2002-ல் குஜராத்தில் மதக் கலவரங்கள் நடைபெற்றன. 
அதைத் தொடர்ந்து அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பதவியிலிருந்து நீக்க அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் முடிவெடுத்தார்.

 ஒரு வேளை அவர் பதவி விலக மறுத்தால், ஆட்சியைக் கலைக்கவும் முடிவு செய்திருந்தார். 
2002-ல் கோவா பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்துக்கு போகும் முன்பு இதுபற்றி வாஜ்பாய் முடிவு செய்திருந்தார்.

 இது பற்றி விவாதிக்க கட்சிக்குள் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டமும் நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில் மோடியை பதவியிலிருந்து நீக்கவும், அவருடைய ஆட்சியைக் கலைக்கவும் அத்வானி எதிர்ப்பு தெரிவித்தார். 
மோடி பதவியிலிருந்து நீக்கினால், தானும் பதவி விலகுவதாக அத்வானி வாஜ்பாயிடம் தெரிவித்தார். இந்த முட்டுக்கட்டையால் வாஜ்பாய் தனது முடிவை மாற்றிக்கொண்டார். 

நரேந்திர மோடியும் குஜராத் முதல்வராக தொடர்ந்தார்”
  என்று யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

 மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சொகுசு பயணத்துக்கு ஐஎன்எஸ் போர்க்கப்பலை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த யஷ்வந்த சின்ஹா, 
“இந்த விவகாரம் பற்றி முன்னாள் கடற்படை தளபதி விளக்கம் அளித்திருக்கிறாரே.

 பிரதமர் என்ற உயர் பொறுப்பில் உள்ளவர், இதுபோன்ற பொய்களைப் பேசக் கூடாது.” 
என்று பதில் அளித்தார்.
யாரால் காப்பாற்றப்பட்டு இந்த நிலைக்கு மோடி உயர்ந்தாரோ ,அந்த அத்வானியையே இன்று பொது வெளியில் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் மோடி.

தனது மனைவியையே வெளியுலகில் மறுத்தவர் எப்படி பட்டவராக இருப்பார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கோட்டையில் யார்க் கொடி?
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆர்பாட்டத்தினை மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியது நிச்சயம் நினைவிலிருக்கும்.
அறவழிப்போராட்டம் நடத்திய  அரசு ஊழியர்களை போலீஸை கொண்டு புரட்டி எடுத்தது, ஆசிரியைகளை மண்டபங்களில் சிறைப்படுத்தி நள்ளிரவு வரை தவிக்கவிட்டது என்று படுத்தி எடுத்தது அரசு.

‘தேர்தல் வரட்டும் உங்களை வெச்சு செய்றோம்’ என்று அப்போது கருவினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள். அதை இப்போது அப்படியே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆம், மாவட்ட அரசு அலுவலகங்களில் துவங்கி சென்னை தலைமை செயலகம் வரை அரசு ஊழியர்கள் பெரும்பாலும் ஆளும் அரசுக்கு எதிராக செயல்பட துவங்கிவிட்டனர் என்று பெரும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.


விவசாயம், கல்வி, மின்சாரம், உள்ளாட்சி என்று பல துறைகளிலும் அனுமதி உள்ளிட்ட பல விஷயங்களை வேண்டி வரும் ஆளுங்கட்சியினரை மதிப்பதேயில்லையாம் அரசு அதிகாரிகள்.
மீறி மீசையை முறுக்கினால் ‘என்ன?
ஆளுங்கட்சின்னு சொல்லப்போறீங்களா!
அந்த பந்தாவெல்லாம் இன்னும் பத்து நாளைக்குதான்.

 மே 23, 24ல் துடைச்சு தூக்கி எறியப்போறாங்க மக்கள். அப்ளிகேஷனை எடுத்துட்டு கெளம்பிடுங்க.’ என்று வெளிப்படையாகவே வெளுத்தெடுக்கிறார்களாம்.

 ‘அமைச்சரிடம் சொல்வேன்.’ என்று சொன்னால், ‘தாராளமா. எந்த கவலையும் இல்ல எங்களுக்கு’ என்று பதில் வருகிறதாம்.

இது எல்லா அமைச்சர்களின் கவனத்துக்கும் போக, சென்னை எடப்பாடியார் முதல் ராமநாதபுரம் மணிகண்டன் வரை அத்தனை பேரும் நொந்து நூடுல்ஸாகி விட்டார்களாம்.

 ஆட்சியில் இருக்கும் தங்களை அரசு அதிகாரிகள் அலட்சியமாய் நடத்துவது பற்றி வெளிப்படையாகவே புலம்புகிறார்  அ.தி.மு.க. புலவர் செல்வராஜ் “மக்களின் நியாயமான, பழைய கோரிக்கைகளை கூட நிறைவேற்றாமல் இழுத்தடித்தும், தவிர்த்தும் இந்த அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துக்கிறார்கள் அரசு முக்கிய அதிகாரிகள் .  ‘தி.மு.க. ஆட்சிக்கு வரப்போகிறது.’ என்று கனவில் மிதக்கிறார்கள்.
ஆனால் அது நிச்சயம் பலிக்கப்போவதில்லை. ” என்கிறார் கையாலாகாத ஆத்திரமும்  சேர.

ஆனால் அரசு ஊழியர்களின் சங்க நிர்வாகிகளோ அந்த விமர்சனத்தை மறுத்து, ‘நாங்கள் வழக்கம்போல் மக்கள் பணி செய்கிறோம்.
ஆனால் ஆளுங்கட்சி என்ற கோதாவில் எங்களை மிகக்கேவலமாக நடத்துகின்றனர் அதிமுகவினர்.’ என்கிறார்கள்.ஆனால், ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு உயரதிகாரிகள் என இரு தரப்புக்கும் நடுவில் நிற்கும் அரசியல் விமர்சகர்களோ “கோட்டையில் இப்போதே தி.மு.க.வின் ஆதரவு கொடி பறக்க துவங்கிவிட்டது.

ஆளுங்கட்சி புள்ளிகளின் உத்தரவை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை என்பது சரிதான்.
 அமைச்சர்களுக்கு கூட பெரிய மரியாதை இல்லை. அதற்கு அதிமுகவினர்,அமைச்சர்கள் செயல்பாடுகளும் ,பணம் முறைகேடுகளில் கடைசி காலம் போல் செயல்படுவதும்தான் காரணமாக்கப்படுகிறது.

தங்களின் நியாயமான போராட்டத்தின் போது தங்களை அவமப்படுத்தியதற்காக இப்போது பழி வாங்குகிறார்கள்.

நிச்சயம் தி.மு.க. ஆட்சி வந்துவிடும் என்று நம்புகிறார்கள் அரசு ஊழியர்கள்.
தேர்தல் முடிவு எப்படி இருக்கப்போகிறது என்பதையோ அதிமுக,பாஜக தங்கள் வெல்வதற்கு அணைத்து வித ஏற்பாடுகளையும் காவல்துறை,தேர்தல் ஆணையம் ஆதரவோடு மிகவும் கீழ்த்தரமாக செயல்படுவதையும் அறிந்தும்  இந்த விஷப்பரிட்சையில் விரும்பி இறங்கியிருக்கும் அரசு அதிகாரிகள்,ஊழியர்கள் துணிவு வியக்க வைக்கிறது.அதிமுகவே வென்றாலும் அதையும் சந்திக்கத் துணிந்து விட்டது போல் தெரிகிறது.

அதற்கு மூலக்காரணம் திமுக அரசு என்றால் தங்கள் கோரிக்கைகளை கூடுமானவரை வென்று விடும் தாங்கள் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆட்சிகளில் மட்டுமின்றி செல்வககே இல்லாத பழனிசசாமி கால  அதிமுக ஆட்சியிலும் உரிமைகள் மறுக்கபப்டுவதுடன் பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் கொடுமைப்படுத்தப்படுவதாகவே அரசு ஊழியர்கள் உணர்வதுதான் . ” என்கிறார்கள்.
 அரசு ஊழியர்னா சும்மாவா.!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் (Mechanical Engineer), தண்ணீரில் செயல்படக்கூடிய சுற்றுச்சூழலுக்கு பாதுக்காப்பான ஒரு இயந்திரத்தைத் தயாரித்துள்ளார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியாளரான சவுந்திரராஜன் குமாரசாமி என்பவர்தான் இந்த தனித்துவமான கண்டுபிடிப்பிற்குப் பின் இருப்பவர்.
 இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.


இது குறித்து  அவர் அளித்த பேட்டியில், "இந்த இயந்திரத்தை உருவாக்க எனக்கு பத்து வருடங்கள் தேவைப்பட்டன.
 உலகிலேயே, இந்த மாதிரியான கண்டுபிடுப்புகளில் இதுவே முதல் கண்டுபிடிப்பு. இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும்.
இந்தியாவில் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் என் கனவு.
இதற்காக இந்திய அரசு மற்றும் இந்தியாவில் உள்ள பல தயாரிப்பாளர்களின் ஆலுவலக கதவுகளையும் தட்டியுள்ளேன்.
 ஆனால், அங்கு எனக்கு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை.
 அதனால், நான் ஜப்பான் அரசாங்கத்தின் பார்வைக்கு இதை எடுத்துச் சென்றேன். அங்கு எனக்கு வாய்ப்பும் அளிக்கப்பட்டது.
இன்னும் சில நாட்களில், இந்த இயந்திரம் ஜப்பான் நாட்டில் பயன்பாட்டிற்கு வந்துவிடும்" எனப் பொறியாளர் சவுந்திரராஜன் கூறியுள்ளார்." என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த இயந்திரம், சில நாட்களுக்கு முன்னர், ஜப்பானில் அறிமுகமாகிவிட்டது.
இந்தியாவிலும் வெகுவிரவில் அறிமுகமாகும் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
சுத்தமான காற்றுக்கும்,குடிநீருக்கும் அலையும் காலம் வந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்த பின்னரும் இந்திய அரசு,முதலாளிகள் அதை தயாரிக்கும் வழியைத்தேர்ந்தெடுக்காமல், இருக்கும் காற்றையும்,நீரையும் மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளைத்துவக்கவே வெறி கொண்டு அலைகின்றனர் .
காரணம் "சின்ன கல்லு பெத்த லாபம் 'குறிக்கோள்தான்.
ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டனர். வருங்கலங்களில் சுத்தமான காற்றை சுவாசிக்கவும்,குடி நீருக்காகவும் உலகமே ஏங்கித்தவிக்கும் காலம் வரும் என்பதைத்தான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தாண்டு இறுதிக்குள், ‘செட்டாப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி’ வசதியை அறிமுகப்படுத்த, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, ‘டிராய்’ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மொபைல் போனில், எண்ணை மாற்றாமல், தொலை தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங் களை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி, ‘மொபைல் போர்ட்டபிளிட்டி’ எனப்படுகிறது. அதுபோல, விருப்பமான, ‘டிவி’ மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க உதவும், ‘செட் டாப் பாக்ஸ்’ சாதனத்தை மாற்றாமல், அதேசமயம் கேபிள் ஆப்பரேட்டர்களின் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதி, ‘செட் டாப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி’ எனப்படுகிறது.

தற்போது, ஒரு பகுதியில், ஒருவர் பயன்படுத்தும், ‘செட் டாப் பாக்ஸ்’ வேறு பகுதியில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதாவது, செட் டாப் பாக்ஸ் மூலம், ‘டிவி’ நிகழ்ச்சிகளை பார்க்கும் ஒரு குடும்பம், வேறு பகுதிக்கு இடம் மாறினால், அந்த செட் டாப் பாக்ஸ் சாதனத்தை பயன்படுத்த முடியாது.குடியேறும் புதிய இடத்தில், மீண்டும் பணம் செலுத்தி, செட் டாப் பாக்ஸ் வாங்கினால் மட்டுமே, ‘டிவி’ நிகழ்ச்சிகளை காண முடியும். இதனால், நுகர்வோருக்கு வீண் செலவு ஏற்படுகிறது.


தேங்கும் செட் டாப் பாக்ஸ் சாதனங்கள் மூலம் பெருகும் மின்னணு கழிவுகள், சுற்றுச் சூழலையும் பாதிக்கின்றன.இதையொட்டி, செட் டாப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி வசதியை விரைவாக அறிமுகப்படுத்த, ‘டிராய்’ திட்டமிட்டு உள்ளது.இந்த ஆணையம் எடுத்த நடவடிக்கையால், மக்கள் விரும்பிய, ‘டிவி’ சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்கும் வசதி, சமீபத்தில் அமலுக்கு வந்தது.

அடுத்து, எந்த இடத்திற்கு சென்றாலும், ஒரே செட் டாப் பாக்ஸ் மூலம், அந்த பகுதியில் உள்ள கேபிள் ஆப்பரேட்டர்களின் சேவையை பெறும் வசதி அறிமுகமாக உள்ளது.இந்த வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து, டிராய், இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிஉள்ளது.

செட் டாப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி வசதி தொடர்பாக, டில்லியில் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இதில், கேபிள் ஆப்பரேட்டர்கள், செட் டாப் பாக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், டி.டி.எச்., சேவை நிறுவனங்கள், எம்.எஸ்.ஓ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, சி.ஏ.எஸ்., எனப்படும், செட் டாப் பாக்ஸ் வாயிலாக, நிகழ்ச்சிகளை பதிவிறக்கி பார்க்கும் வசதியை பயன்படுத்தி, போர்ட்டபிளிட்டி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த தொழில்நுட்ப செயலாக்கம் தொடர்பாக, சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும். அதற்கு முன், தொலை தொடர்பு சேவை துறையைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களிடம், ஒட்டுமொத்த கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்படும். செட் ஆப் பாக்ஸ் போர்ட்டபிளிட்டி வசதி, விருப்பமான சேவையை தேர்வு செய்யும் உரிமையை நுகர்வோருக்கு வழங்கும். பொருளாதார வளர்ச்சிக்கும், போட்டி அதிகரிக்கவும் துணை புரியும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------