இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 24 மே, 2019

தமிழகம் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள்.

இந்த முடிவுகளுக்காக
 நாம் கடந்த வந்த நிகழ்வுகள்.

 1. கடந்த ஐந்து ஆண்டுகளில் சுவஷ் பாரத் (Swachh Bharat), மேக் இன் இந்தியா (Make in India) போன்ற பல திட்டங்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி. ஆனால் பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்புகள் உருவாக்க தவறியது, விவசாய பிரிவில் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு மோடியின் அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.
 2. கடந்த சில மாதங்களாக நடந்த இந்த தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் துவங்கியது.
 3. தேசியம், தேசிய பாதுகாப்பை சுற்றியே பாஜகவின் தேர்தல் பிரசாரம் இருந்தது. ரபேல் விவகாரம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் சுற்றியே காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் அமைந்தது.
 4. இந்த முறை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் மோடி, அமித் ஷா மீது முறையிடப்பட்டது. ஆனால் அனைத்து முறையும் பிரதமர் மோடி விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்து.
 5. மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் 2:1 என்றே முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனால் அஷோக் வர்மா தேர்தல் ஆணையத்தின் மீட்டிங் கலந்து கொள்ளவில்லை.
 6. கடந்த டிசம்பர் மாதம் மத்திய இந்தியாவில் இருக்கும் 3 மாநிலங்களுக்குத் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிவாகை சூடியது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரையிறுதியாக அந்தத் தேர்தல் பார்க்கப்பட்டது. இந்த முறை மக்களவை தேர்தலுக்கு, காங்கிரஸ் இந்த அனைத்து மாநிலங்களிலும் தனியாக போட்டியிட்டுள்ளது. 
 7. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பாஜக தலைவர் அமித்ஷா, சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேசி தேசிய ஜனநாகயக் கூட்டணியை உறுதிபடுத்தினார். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள், ஓரணியாக திரளவில்லை. 
 8. உத்தர பிரதேசத்திலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாயாவதி, தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் கூட்டணி அமையாமல் போனது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், தனியாக போட்டியிட்டது. 
 9. மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு, பாஜக கடும் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. அங்கு மொத்தம் இருக்கும் 42 தொகுதிகளில் 23 இடங்களை பாஜக, கைப்பற்றப் பார்க்கிறது. 
 10. விவிபேட் இயந்திரத்தை, வாக்கு எண்ணிக்கைத் தொடங்கும் முன்னர் ஒப்பிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 5 விவிபேட் இயந்திரங்களில், வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் ஒப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  இந்திய அரசியல் ,தேர்தல் பார்வையாளர்கள் அனைவரும் கூறும் ஒரே கருத்து.
  "தமிழகத்தைப்போல் இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்ச்சிகள் அனைத்தும் பொது எதிரியான பாஜகவுக்கு எதிராக ஒன்றுபட்டு தேர்தலை அணுகியிருந்தால் இவ்வளவு பெரிய அசிங்கம் உண்டாயிருக்காது .
  மாயாவதி,மம்தா ,முலாயம் ஆகியோர்களுக்கு உண்டான பிரதமர் பதவி ஆசையே எதிர்கட்சிகளுக்குள் பிளவை உண்டாக்கி பாஜகவுக்கு சாதகமாக்கி விட்டது."
  என்பதுதான் .
  அவர்கள் கூறும் மற்றோன்று,


  "ஒற்றமையாக எதிர்க்கட்சிகள் செயல்பட்டிருந்தால் கூட தேர்தல் ஆணையத்தின் நடுநிலையற்ற செயல்பாடுகள் ,வெளிப்படையான பாஜக ஆதரவு செயல்பாடுகள்,வெளியிலிருந்து வந்த வாக்குப்பதிவு  எந்திரங்கள்,40 லட்சம் எந்திரங்களில் 20 லட்சம் எந்திரங்கள் கணக்கிலேயே இல்லாதது போன்றவை பாஜக வெற்றிக்கான காரணமாக அமைந்திருக்கும்."
  பாரதீய தேர்தல் ஆணைய E V M விளக்கம் ?

  ----------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிமுகவை முந்துகிறதா மய்யம்.?
கொங்கு மண்டலத்தில் பல தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அ.ம.மு.க ஐந்தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. மக்கள் நீதி மய்யத்தின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர். மகேந்திரன், 1 லட்சத்து 44 ஆயிரத்து 829 வாக்குகளும் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் மூகாம்பிகா 59 ஆயிரத்து 693 வாக்குகளும் (6%) பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

 அதேபோல, நீலகிரி தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ராஜேந்திரன் 41 ஆயிரத்து 169 (4.1%) வாக்குகளும், திருப்பூர் தொகுதி வேட்பாளர் சந்திரகுமார் 64 ஆயிரத்து 657 வாக்குகளும் (5.5%), ஈரோடு வேட்பாளர் சரவணக்குமார் 47 ஆயிரத்து 719 வாக்குகளும் (4.5%), சேலம் வேட்பாளர் பிரபு மணிகண்டன் 58 ஆயிரத்து 442 வாக்குகளையும் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

 தென்சென்னையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ரங்கராஜன் 1 லட்சத்து 35 ஆயிரத்து 465 வாக்குகளும் (12%), வட சென்னை வேட்பாளர் மெளர்யா 35 ஆயிரத்து 331 வாக்குகளும், மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர் 92 ஆயிரத்து 249 வாக்குகளும் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இதுதவிர, மதுரை நாடாளுமன்றத் தொகுதி உள்பட பல நகர்ப்புறப் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம், முதல் தேர்தலிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க, சூலூர் சட்டமன்றத்  தொகுதி இடைத்தேர்தலில் மட்டும் வெற்றிபெற, மற்ற இடங்களில் படுதோல்வி அடைந்துள்ளது.
கட்சி ஆரம்பித்து 18 மாதங்களிலேயே , சந்தித்த முதல் தேர்தலிலேயே, கொங்கு மண்டலத்தில் லட்சங்களில் வாக்குகள் பெற்றிருக்கிறது  மக்கள் நீதி மய்யம் .

மேலும் தமிழ்நாட்டில் பழைய  கட்சிகளாகிவிட்ட தினகரன் அமமுக ,சைமன் நாம்தமிழர் கடசிகளை விட அதிகமாக வாக்குகளை வாங்கி அவர்கள் வயிற்றில் புளியைக்கரைத்துள்ளது மய்யம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

இவனை எதனால் அடிக்கலாம்.பிய்ந்த செருப்பு, கழிப்பறை வாரியல்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அமமுக டெபாசிட் இழந்தது!
----------------------------------------------------------------------------------------------- -----------------------
தமிழகம் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள்.

பாஜக மீண்டும் முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதால்  காங்கிரஸ் ,முஸ்லிம்களை விட அதிக
இன்னல்களை சந்திக்க இருப்பது தமிழ் நாடுதான்.

தன்னால் காலூன்ற முடியா திராவிடம் என்று ஏற்கனவே நீட்,ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை,ஸ்டெர்லைட் ஆதரவு என்று கொடுமைக்கு ஆளாக்கிய பாஜக.
வரும் ஐந்தாண்டுகளில் தமிழக விவசாயிகள்,மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கவில்லை.மக்கலவைத்தேர்தலால் ஆறப்போட்டிருந்தனர்.ஆனாலும் பாஜக தலைகள் எட்டு வழிச சாலை,நீட்  பின்வாங்க மாட்டோம் என்றே சொல்லிவந்தார்கள்.
 ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஸ்டெர்லைட் வேதாந்தா அணில் அகர்வாலுக்கு 21 இடங்களில் குழாய் பதிக்க ஒப்பந்தத்தை கொடுத்துவிட்டதுதான் மோடி அரசின் இறுதி ஆணை.
கடைசி கட்டத் தேர்தல் நடக்கையிலேயே வேதாந்தா நெல்பயிரிட்ட வயல்வெளிகளில் பொக்லைன் வாகனங்களை இறக்கி  பயிர்களை நாசம் செய்த் குழிபறிக்க ஆரம்பித்து விட்டது.எதிர்த்த விவசாயிகளை காவல்த்துறை மூலம் சேற்றில் தள்ளி விட்டது.
அபாயம் ஆரம்பம் அங்கு.

 தமிழக மக்களவை உறுப்பினர்கள் 37 பேர்கள் தமிழக நாளக்குப்போராடினாலும் 350 உறுப்பினர்கள் முன் எடுபடுமா?பெரும்பான்மை ஆதரவுதான் கிட்டுமா?

நீட் முழுவேகத்துடன் ஆட்டம் போடும்.

 எட்டுவழிச் சாலை .ஏற்கனவே தமிழக முதல்வர் தனது சம்பந்தி மூலம் ஒப்பந்தம் போட்டது.இப்போது ஆட்சிக்கு ஆபத்தில்லை என்கிற போது விட்டு விடுவாரா?
முழுவேகத்துடன் விவசாயிகள் வாழ்க்கை நாசம் செய்யப்படும்.

ஏற்கனவே தமிழக வேலைவாய்யப்புகள் வட மாநிலத்தவர்களால் நிரப்பப்படுவது முழுமையாக வேகப்படுத்தப்படும்.
தமிழக அரசுப்பணிகளும் வடக்கினருக்கு ஒ.பன்னிரால் திறந்து விடப்பட்டு விட்டது.அதிமுக ஆட்சியை மாற்றல் அதைத்திருத்தம் செய்ய முடியாது.
 நடந்த 22இடைத்தேர்தலில் முழமையாக அதிமுகவை துடைத்திருந்தால் ஆட்சி மாற்றம் உண்டாயிருக்கும்.
பல பாஜக தடலடிகளில் இருந்து தமிழகம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.அதிமுக அரசு அடிமைத்தனத்தில் இருந்து மாறுபட்ட அரசு கிடைத்திருக்கும்.
காசுக்கு விலை போன சில பிட்சை வாக்காளர்களால் அதிமுக அரசை காலி  செய்யும் வாய்ப்பும் பறி போய்விட்டது.
பாதிப்புகளை அனுபவித்து நொந்து போன்றவர்களே 2000 பணத்தைக்கண்டதும் விலை  போவதும்,தங்கள் வாழ்க்கையை நாசமாக்குவதுடன் பிறர் எதிர்காலத்தையும் கெடுத்து விடுவதுதான் காசுக்கு வாக்களிக்கும் மிக மோசமான விலை போகல்.

காலமே எல்லாவற்றுக்கும் மருந்தாக அமையும்.அந்த எண்ணத்திலேயே காத்திருப்போம்.
நடக்கப்போகும் நடப்புகள் அரசியல் அதிரடியாக தமிழ்நாட்டுக்கு நன்மை விளைவிக்கும்.
அது இயற்கையாகவே நடக்கும்.
நம்பிக்கைதானே வாழ்க்கை.

 -----------------------------------------------------------------------------------------------------------------------------------