காணாமல் போனது

 வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமல்ல.
தேர்தல் ஆணைய நம்பகத்தன்மையும்தான்.!
 இந்திய தேர்தல் ஆணையம் வாங்கிய மொத்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) 20 லட்சம் இயந்திரங்கள் காணாமல் போன அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக ஃபிரண்ட்லைன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்பவர் கேட்ட ஆர்.டி.ஐ கேள்விகளில் தான் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணையம் இரண்டு நிறுவனங்களிடம் இருந்து வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்களை கொள்முதல் செய்கிறது. கொள்முதல் அளவு, அவை பாதுகாக்கப்படும் முறை, பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முறை குறித்து தேர்தல் ஆணையத்திடம் ராய் ஆர்.டி.ஐ கேள்வியில் கேட்டுள்ளார்.

அதற்கு கிடைத்த பதிலில், வாங்கப்பட்ட மொத்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் 20 லட்சம் இயந்திரங்கள் கணக்கில் வராதது தெரிய வந்துள்ளது.

1989 - 2017 வரை ECIL (electronic corporation of India) நிறுவனத்திடமிருந்து 10,14,644 வாங்கப்பட்டுள்ளது.

 1989 - 2015 வரை BEL ( Bharath Electronics limited) நிறுவனத்திடமிருந்து 10,05,662 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால் பெல் நிறுவனத்திடம் கேட்கப்பட்ட ஆர்.டி.ஐ தகவலில், தங்கள் நிறுவனம் 19,69,932 இயந்திரங்களை கொடுத்துள்ளதாகவும், ECIL நிறுவனம் 19,44,593 இயந்திரங்களை தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பெல் நிறுவனம் கொடுத்ததாக கூறும் 9,64,270 இயந்திரங்களும், ECIL கொடுத்ததாக கூறும் 9,29,949 இயந்திரங்களும் என மொத்தம் 20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையம் கூறும் கணக்கில் இல்லை.
ஆண்டு வாரியாக வாங்கப்பட்ட இயந்திரங்களின் கணக்கிலும் முரண் உள்ளது. உதாரணமாக, 2003-2004 ஆண்டில் பெல் நிறுவனம் 1,93,475 இயந்திரங்களை கொடுத்ததாக கூறுகிறது. ஆனால், 1,67,850 இயந்திரங்களை தான் பெற்றோம் என்கிறது தேர்தல் ஆணையம். கிட்டத்தட்ட 25,625 இயந்திரங்கள் குறைவாக உள்ளன.
இயந்திரங்கள் வாங்க செய்யப்பட்ட செலவு கணக்கிலும், முன்னுக்கு பின் முரணான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

2006 -2007 முதல் 2016-2017 வரையிலான காலத்துக்கு இயந்திரம் வாங்கிய மொத்த செலவு 536,01,75,485 ரூபாய் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், 652,56,44,000 ரூபாயை கட்டணமாக பெற்றாதாக பெல் நிறுவனம் கூறுகிறது.

கிட்டத்த 116 கோடி ரூபாய் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது.

அப்படியானால் அந்த 20 லட்சம் இயந்திரங்கள் எங்கே போயின?. என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையத்திட பதில் இல்லை.

தேர்தல் ஆணையத்திடம் சரியான கொள்முதல் கணக்கும், பழுதடைந்த இயந்திரங்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன போன்ற தகவல்களை சேகரித்து வைக்க போதிய தொழில்நுட்பம் இல்லை என்கிறார் ராய்.

இது குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ராய் தாக்கல் செய்த மனுவுக்கு, பதிலளிக்குமாறு பல முறை கூறிய பிறகு, தேர்தல் ஆணையம் பதிலளித்தது. அதிலும், சரியான தகவல் எதையும் கூறவில்லை. இதுகுறித்த அடுத்த வழக்கு விசாரணை ஜூலை 17-ம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த கட்டுரை வெளியானதை அடுத்து, இதில் கூறப்பட்டுள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதிலும், தவறு நிகழவில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் எந்தக் தகவலையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தபோது, அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகனும், தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத்தும் சென்றிருந்தனர்.
 அந்த பயணம் பற்றி அப்போது பல கருத்துகள் எழுந்தன. அவர்கள் குடும்பத்தோடு பாஜகவில் இணைய போகிறார்கள், ரவீந்திரநாத்தை ஜெயிக்க வைக்கதான் அவர் போய் பார்த்துள்ளார். இப்படியாக பல கருத்துகள் எழுந்தன. அதை உறுதிசெய்யும் விதத்தில் தற்போது வாக்குப்பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளது என்ற சந்தேகமும் எழுகிறது.


கள்ள ஓட்டு போட்டது, மாதிரி வாக்குகளை அழிக்காமல் விட்டது இவையே மறுவாக்குப்பதிவு நடப்பதற்கு தேர்தல் ஆணையம் கூறிய காரணங்கள்.

அதன்படி மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு மட்டுமே மறுவாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு இரண்டு செட் இயந்திரங்கள் இருந்தாலே போதுமானது, ஆனால் இறங்கியதோ 50.

கூடுதலாக இரண்டு பெட்டிகள்கூட இல்லாமல் எப்படி அங்கு தேர்தல் நடந்திருக்கும் என்பதும் ஒரு கேள்வி. ஈரோட்டிலும் அதேபோல் ஒரே ஒரு வாக்குச்சாவடிதான் ஆனால் அங்கு இறங்கியதோ 20 விவிபேட்கள். அங்கிருந்து மற்ற வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் என வைத்துக்கொண்டாலும், மறுவாக்குப்பதிவு நடக்கும் மற்ற மாவட்டங்களான தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய ஊர்களும் அவ்வளவு அருகில் இல்லை. அதனால்தான் இவ்வளவு தூரம் சந்தேகம் நீள்கிறது.

இந்த சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் முக்கிய புள்ளியாக இன்னொரு சம்பவமும் இருக்கிறது. அதுதான் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்ததற்கும், தேர்தல் நடந்ததற்கும் இடையே உள்ள காலம். பொதுவாக இப்படி மறுவாக்குப்பதிவு நடத்துவதாக இருந்தால் அது ஒன்று, இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால் இந்தமுறை 20 நாட்கள் கழித்துதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் தவறுசெய்த அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

இதுபோன்ற கேள்விகள்தான், தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா, ரவீந்திரநாத்-ஐ ஜெயிக்கவைக்கதான் இப்படியான முயற்சிகள் நடக்கிறதா என்ற சந்தேகங்களை அனைத்து தரப்பிலும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சிகளும் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின்மீது குற்றம் சுமத்துகிறது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------


 





ஐந்தாண்டு:காணாமல் போன மோடி செல்வாக்கு.
அமெரிக்காவின் புகழ் பெற்ற செய்தி இதழ் 'டைம்' ஆகும். இந்த இதழில் இந்த மாதத்திற்கான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'பிளவுவாதிகளின் தலைவர்' என்ற பெயரில் அட்டைப்பட கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இது தேர்தல் நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் பிரபலமான 'டைம்' நாளிதழுக்கு உலகமெங்கும் 2 கோடிக்கும் மேற்பட்ட வாசகர்கள் உள்ளனர். டைம் இதழில் சத்தி வாய்ந்த தலைவர்கள் என்று வெளிவரும் பட்டியலில் தன்னுடைடைய பெயர் வராதா என்று எங்கும் பலர் உண்டு. இந்த இதழ் 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறப்பு நேர்காணல் நடத்தியது. அப்போது வெளிவந்த கட்டுரையில் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக அதிக விஷயங்கள் இடம் பெற்றிருந்தது.

2012ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, அவரது படத்தை அட்டைப்படமாக வெளியிட்டு, மிகப்பெரும் சக்தியாக அவர் உருவாகிக் கொண்டு இருப்பதாக இந்த இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.



2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகளை எட்டியுள்ள நிலையில், டைம் இதழில் வெளியிட்டுள்ள கட்டுரை பா.ஜ.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர் ஆதிஷ் தஷீர் என்பவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்த கட்டுரையில், அவர் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவின் மிக முக்கிய அடிப்படை கட்டமைப்புகள் மற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது.
 குறிப்பாக மாநில சுயாட்சி, சிறு நிறுவனம், பத்திரிக்கை சுதந்திரம், பல்கலைக்கழகங்கள் என நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன.

நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் முற்போக்குவாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அதிக அளவில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
2014ம் ஆண்டு தேர்தலின் போது பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகளை மோடி முன்வைத்தார். ஆனால் அவரின் கருத்துக்கள் ”ஜூம்லா, மாயாஜாலம்” போல் நடக்காமல் போலியாகப் போனது.

மதம் சார்ந்த தேசியத்தை, மதச்சார்பற்றத் தேசத்தில் மோடி அரசு உருவாக்கி விட்டது.

2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவுக்கான ஒரு மீட்பர் போல பார்க்கப்பட்டார். ஆனால், இப்போது தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதால், மறுபடியும் தேர்தலை சந்திக்க கூடிய, ஒரு சாதாரண அரசியல்வாதி போலத்தான், மோடியும் மக்களால் பார்க்கப்படுகிறார்.
என இவ்வாறு டைம் இதழ் தனது கட்டுரையில் தெரிவித்து உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?