காரணம் கூட்டணிதான்

தென்னாட்டைப்பொறுத்தவரை மட்டுமல்ல இந்தியா முழுக்கவே எதிர்பாரா தேர்தல் முடிவுகள் தான்.பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் மக்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. எனினும் ஆள்வோரின் திருவிளையாடலும்,தேர்தல் ஆணையர்கள் கையாலாகாத்தனம் கலந்த பக்கசார்புதான் இந்த தேர்தல் முடிவுகள்.
இது ஏற்கனவே வாக்குப்பதிவு  எந்திரங்களில் எழுதி வைக்கப்பட்டவைதான்.

தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்களில் துடைக்கப்பட்ட பாஜகவை சென்ற முறை போலவே தூக்கி நிறுத்தியள்ளது வடமாநிலங்கள்.
அதற்கு காரணம் பாரதீய தேர்தல் ஆணையத்துடனான பாஜக க் கூட்டணிதான் .

அனால் ஒரு வித்தியாசம் .சென்றமுறைவாக்களித்தது இந்தி பேசும் மாநில மக்கள்.அவர்களை அந்த அளவு மோடி மஸ்தான் வித்தை காட்டி மயக்கியிருந்தது பாஜக.
ஆனால் இந்த முறை வாக்கு அள்ளித்தந்தது அம்மக்கள் அல்ல.


காரணம் பல ஊர்களில் வாக்களிக்கவே விடவில்லை.முதல் நாளே வீடுகளில் வந்து விரலில் வாக்களித்ததற்கு  அடையாளமான மையையும் ஐநூறூ ரூபாயையும் பாஜகவினர் கொடுத்து சென்றுள்ளனர்.காவல்துறையில் புகார் கொடுக்க சென்றவர்கள் அங்கிருந்து மிரட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான்,ம.பி மாநிலங்களிலும் இதே நிலைதான்.ஆளும்கட்சியான காங்கிரசும் வேடிக்கைதான் பார்த்துள்ளது.காவல்துறையினை  கையில் வைத்திருக்கும் முதல்வர் என்னதான் செய்தாரோ.துணைராணுவம் துணை செய்தாலும் நம் காவல்துறையை வைத்து தடுத்து பிரச்னையை உலகறிய செய்து கேவலப்படுத்தியிருக்கலாம்.
இது காங்கிரஸ் தவறு.

பல தனியார் கிடங்குகள்,கடைகள்,வீடுகள் போன்ற இடங்களில் இருந்து வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள்தான் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகள்,கார்கள் ஆட்டோ போன்றவற்றில் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளனர்.
இதை நேரடியாக பதிவு செய்து வெளியிட்டும் ஒரு பயனும் இல்லை.
இந்த காணொளிகள் சமூக வலரைத்தளங்களில்தான் பரவின.
பெரிய ஊடகங்கள்,தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப மறுத்துவிட்டன.

வாக்குப்பதிவுக்குப் பின்னர் கருத்துக்கேட்கவோ அதை ஒளிபரப்பவோ கூடாது என தேர்தல் ஆணைய தடை இருந்தும் கடைசி நாள் வாக்குப்பதிவின் போதே 2மணிக்கே  கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக ஒளிபரப்பானது.

தடை போட்ட தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளவில்லை.எந்த கண்டு கொள்ளலும்,நடவடிக்கையும் இல்லை.
 
உ.பி.யில் பாஜக சாமியாரின் ஆட்சிக்கு எதிராகவும்,பசு காவலர்கள் கொலைகள் காரணமாகவும்,தலித்துகள்,சிறுபான்மையினர் பாஜகவின் மீது கடும் அதிருப்தியில்,கோபத்தில் உள்ளனர்.
இது உலகறிந்த உண்மை.அவர்கள் வாக்குகள் வெற்றியைதீர்மானிக்கும் தொகுதியாகில் 12.ஆனால் அவற்றிலும் பாஜகவே .வென்றுள்ளது  ஐயத்தைத்தான் உண்டாக்குகிறது .

ஏற்கனவே கர்ப்பரேட்களுக்கு ஆதரவாகவும்,விவசாயிகள்,தொழிலார்களுக்கு எதிராகவுமே செயல்பட்ட பாஜக இன்னும் அதிகாரம் ஐந்தாண்டுகள் கையில் என்றால்  ஆட்டம் அதிகமாகிடுமே.
எட்டுவழியும் , ஹைட்ரோ கார்பன் திட்டமும் தமிழகத்தை அலைக்கழிக்கும் .
எய்ம்ஸ் மருத்துவமனை செங்களோடேயே நிற்கும்.
டுவிட்டரில்,முகநூலில் #கோ பேக் தொடரும் பெயரில் வேண்டு மானால் மாற்றம் இருக்கும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?