இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 22 மே, 2019

கணிப்பும்,எண்ணிக்கையும்.

ஜார்கண்டின் டியோகர் பகுதியில் லாரியில் வாக்குப் பதிவு எந்திரங்கள் கொண்டுசெல்லப்படுவதாக தகவல் பரவிய நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆர்.ஜே.டி மற்றும் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சந்தேகத்திற்கு இடமான லாரி ஒன்றை தடுத்து நிறுத்தினர்.

அதனை திறந்து பார்த்த போது உள்ளே வாக்கு எண்ணிக்கை எந்திரங்கள் வைக்கும் பெட்டிகள் இருந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அந்த லாரியை முற்றுகையிட்ட நிலையில் அங்கு வந்த அப்பகுதி தேர்தல் அதிகாரி, அவை வெறும் காலி பெட்டிகள் தான், ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் இடத்திற்கு அனுப்பியாகிவிட்டது.
வேண்டுமென்றால் நேரில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என கூறி மக்களை அப்புறப்படுத்தினார்.

இதேபோல் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் ,கடைகளில்,பாஜகவினர் அலுவலகங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல்வைக்கப்பட்டு  எதிர்கட்சிகளால் கண்டு பிடிக்கப்பட்டு  தேர்தல் ஆணையத்திடம் ஆதாரம் கொடுக்கப்பட்டும் எந்த  நடவடிக்கைகளும் இல்லை.

 அதனாலதான் பாஜக அதிக  இடங்களை வெல்லும் என்ற செய்தி நமக்கு உண்மையாக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தை தருகிறது.
கடைசி கட்ட தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என தெரிவித்துள்ளது.

 இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையே ஐயத்தையும் பலக் கேள்விகளையும் உண்டாகியுள்ளது.
இந்த  எதிர்வினை பாஜகவுக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அதிர்ச்சி உளவுத்துறையின் மூலம் அவர்கள் பெற்ற   அறிக்கை . அதன்படி  இருவருக்கும்)காங்கிரஸ் - பாஜகவுக்கு) தனிப்பெரும்பாண்மைக் கிடைக்காது.

மாநிலக் கட்சிகள் தயவு தேவை என்பதுதான்.

பாஜக ஆதரவான இந்த கருத்துக்கணிப்பின் பின்னணி ?
 வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்தால் யார் பிரதமர் வேட்பாளர்? எதிர்க்கட்சிகளுக்கு அதிக இடம் கிடைத்தால் யாருக்கு பிரதமர் பதவி?

 எந்தெந்தக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் என்ன இடம் என்பதையெல்லாம் பேசி இறுதி செய்து குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பம் அளித்துவிடாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு என்று கூறுகிறார்கள்.

 மே 23ஆம் தேதி எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை திசை திருப்பவே இந்த பாஜக ஆதரவான  கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது  என்று கூறுகிறார்கள்.

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த, அடுத்த சில நிமிடங்களிலேயே, பாஜக-தான் மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கார்ப்பரேட் ஊடகங்கள் கணிப்புக்களை வெளியிட்டன.

இந்த கணிப்புக்கள், எந்த அளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற விவாதங்கள் ஒருபுறமிருந்தாலும், கார்ப்பரேட் ஊடகங்களின் கருத்துக் கணிப்பில் ஏகப்பட்ட தகவல் பிழைகள் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
‘இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா’ கருத்துக் கணிப்புதான், பாஜக-வுக்கு மிகஅதிகளவிலான இடங்களை வாரி வழங்கியுள்ளது.
 ஆனால், அதில் ஏராளமான தகவல் பிழைகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக உத்தர்கண்ட் மாநிலத்தின் 5 மக்களவைத் தொகுதிகளின் பெயர்களும் தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளன. அதாவது இல்லாத தொகுதிகளைக் குறிப்பிட்டு,அந்த 5 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழ்நாட்டிலிருக்கும் மத்திய சென்னை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த தொகுதியில் போட்டியிடுவது திமுக.
 அப்படியிருக்க காங்கிரஸ் வேட்பாளர் எப்படி வெற்றி பெறுவார்? என்பதைக்கூட சரிபார்க்க நேரமில்லாமல் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

2 ஆயிரம் கிலோ லட்டு
இதனை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியதும், 10 நிமிடங்களிலேயே கருத்துக் கணிப்பு தகவல்களை ‘இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா’ நிறுவனங்கள் நீக்கவும் செய்துள்ளன.

 ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில ஊடகம் வெளியிட்ட வாக்குக் கணிப்பில் உத்தர்கண்ட் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை விட ஆம் ஆத்மி கட்சி சிறப்பு வாக்குகளை பெறும்.
அதாவது 2.9 சதவிகிதம் வரை வாக்குகளைப் பெறும் என்று குறிப்பிட்டுள்ளது.
 இதைப் பார்த்து ஆம் ஆத்மி கட்சியினரே அதிர்ச்சியடைந்திருக்கிறார் கள்.
ஏனெனில் உத்தர்கண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி போட்டியிடவே இல்லை என்பது தான்.
 போட்டியிடாத கட்சிக்குத்தான் ‘டைம்ஸ் நவ்’ 3 சதவிகித வாக்குகளை வழங்கியுள்ளது.

மற்றொரு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், சண்டிகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 43 சதவிகித வாக்குகளையும்; பாஜக 38 சதவிகித வாக்குகளையும் பெறும் என்று கூறிவிட்டு, ஆனால் இந்த தொகுதியில் வெற்றிபெறுவது என்னவோ,பாஜக-தான் என்று முடிவு வெளியிட்டுள் ளது.
 5 சதவிகிதம் குறைவான வாக்குகளைப் பெறும் கட்சிதான் வெற்றிபெறும் என்று புதிய தியரியையே அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் தவறு என்றால், அது ஹரியானா மாநிலம்குறித்த கருத்துக் கணிப்புதான்.

 ஹரியானா மாநிலத்தில் 22 தொகுதிகளில் பாஜகவெற்றிபெறும் என்று ஒரு கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொடுமை என்னவென்றால், இங்கு இருப்பதே 10 தொகுதிகள்தான்.
 ஆனால், அந்த 10 தொகுதிகள் மட்டுமல்லாமல், குமாரசாமியின் கூட்டல் கணக்கு பார்முலா அடிப்படையில், இல்லாத 12 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதேபோன்ற ஒரு கணிப்பை ‘தந்தி டிவி’யும் நடத்தியுள்ளது.
அந்தக் கணிப்பில்காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 3 முதல் 6 சதவிகிதம் வரை வாக்குகளைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளரே போட்டியில் இல்லை.
காஞ்சிபுரம் தொகுதியை மக்கள் நீதி மய்யம் அதன் கூட்டணி கட்சியான இந்திய குடியரசுக் கட்சிக்கு ஒதுக்கியிருந்த நிலையில், அந்த கட்சியின் வேட்பாளரின் மனு,பரிசீலனையின்போதே தள்ளுபடி செய்யப் பட்டு விட்டது. ஆனாலும், தேர்தலில் வாக்குப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்த 6 சதவிகித வாக்காளர்கள், மக்கள் நீதி மய்யத்தின் ‘டார்ச் லைட்’ சின்னத்திற்கு வாக்களித்ததாக ‘தந்தி டி.வி.’யிடம் கூறியிருக்கிறார்கள்.

சிரிப்பை வரழைக்கும் மற்றொரு கருத்துக் கணிப்பு தகவலும் உண்டு. அது என்னவென்றால், சேலம் மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் - அதிமுகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறதாம். இப்படியும் ஒரு கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகி இருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் வடக்கு மும்பை தொகுதியில் பாஜக சார்பாக கோபால் ஷெட்டி போட்டியிடுகிறார்.
இவர் காங்கிரஸ் வேட்பாளரும், பிரபல நடிகையுமான ஊர்மிளா மடோன்ட்கரை எதிர்த்து களத்தில் நிற்கிறார்.

கருத்துக்கணிப்பில் வெற்றி கனவு கண்ட அவர் தனது  வெற்றியை கொண்டாடுவதற்காக 2 ஆயிரம் கிலோ லட்டுவை ஆர்டர் செய்திருக்கிறார்.

உலகத்தமிழர்களை உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்துக்கும் தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி100 நாட்களாக நடைபெற்ற தூத்துக்குடி மக்களின் அமைதிப் போராட்டம் கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்தது.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த கிளாஸ்டன், மினிசகாயபுரத்தைச் சேர்ந்த ஸ்நோலின், தாமோதரநகரைச் சேர்ந்த மணிராஜ், குறுக்கு சாலை தமிழரசன், மாசிலாமணிபுரம் சண்முகம், அன்னை வேளாங்கன்னிநகர் அந்தோணி செல்வராஜ், புஷ்பா நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், மில்லர்புரம் கார்த்திகேயன், திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜான்சி, சிவந்தாகுளம் ரோடு கார்த்திக், மாப்பிள்ளையூரணி காளியப்பன், உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன், சாயர்புரம் செல்வசேகர் உள்ளிட்ட13 பேர் கொல்லப்பட்டனர்.

 இவ்விவகாரம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தனி நபர் ஆணையம் ஆண்டுக்கணக்கில் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை  11 கட்டங்களாக 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் உள்ள பெல் ஹோட்டலில் இன்று நினைவேந்தல் கடைப்பிடிக்கப்படுகிறது.
 இதில் 500 பேர்கள் மட்டும் கலந்து கொள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது.
 உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலமாகச் செல்கின்றனர்.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்ன கரணம்?
காங்கிரஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் ஆசிரியருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெறுவதாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

ரபேல் பைட்டர் ஜெட் விமானம் வாங்கியதில் அனில் அம்பானி நிறுவனம் ஊழல் செய்ததாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்ததோடு, நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையும் கட்டுரை வெளியிட்டிருந்தது.


இதையடுத்து ரிலையன்ஸ் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது குழுமம் மீது அவதூறு பரப்பியதாக, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் குறிப்பிட்ட பத்திரிக்கை ஆசிரியர் மீது ரிலையன்ஸ் நிறுவனம் அகமதாபாத் நீதிமன்றத்தில், 5,000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து விட்டதாக ரிலையன்ஸ் குழுமத்தின் வழக்கறிஞர் ரஸேஸ் பரிக்(rasesh parikh) தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் எல்லாம் பாஜக வெற்றி என்று புலம்பினாலும்,பங்கு வர்த்தகத்திற்காக அப்படி கூவச்ச்சொன்ன அவற்றை நடத்தும் கார்பரேட்களுக்கு உண்மை தெரியத்தானே செய்யும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பொய் வேந்தர் பாண்டே டி.வி.
நாம் தமிழர் கட்சியினர் ஒரு யூட்யூப் சேனல் நடத்துகிறார்கள். அதில் அவர்களுக்கே உரிய பாணியில் ஆபாசம், முட்டாள்த்தனம், லூசுத்தனம் என எல்லாவற்றையும் கலந்துகட்டி காணொளி போடுவார்கள்.

அப்படியான காணொளி ஒன்றில் இன்று பாண்டேவை புகழ்ந்திருந்தார்கள்.
அதாவது பீகாரில் இருந்து இங்கு வந்து நம்மூர் இளைஞர்களுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்கிறாராம்.

அவரைப் போல தமிழக இளைஞர்கள் தமிழார்வத்தோடு இருக்க வேண்டுமாம்! இந்த மண்டுக்களை பார்ப்பன அடிவருடிகள் என சுபவீ சொன்னதில் என்ன தவறு? சரி விஷயத்துக்கு வருகிறேன்.

பாண்டே வேந்தர் டிவியில் பணிக்கு சேர்ந்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது.
வேதாளம் மீண்டும் முருங்கைமரம்(செடி) ஏறியிருக்கிறது. தந்திடிவியில் இருந்து துரத்திவிட்ட பின், 24 மணி நேரமும் பத்திரிகை வேலை பார்த்து சலித்து விட்டது அதனால் தந்தி டிவி வேலையை விட்டு செல்வதாக தனக்குத்தானே அறிவித்துக் கொண்டு சில மாதங்கள்தான் ஆகியிருக்கும்.

இதற்கிடையில், சாணக்கியா என்கிற பெயரில் யூ-டியூப் சேனலை தொடங்கி முக்கிப் பார்த்தார்.
இரண்டு லட்சம் subscribersகூட இதுவரை எட்ட முடியவில்லை.
இவர் ஏதாவது ஒரு வீடியோ தயாரித்து அதனை தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தால் 50 லைக்குகள் வாங்கவே திணறினார்.

அந்த வீடியோக்களும் மயிலாப்பூரில் உருவானவை என்பது பளிச்சென்று பல்லிளித்தது. சாணக்கியா லோகோவில் குடுமி வைத்த பாண்டேவின் சொந்தக்காரர் ஒருவர் இடம்பெற்றிருக்கிறார்.
 இவ்வளவு மெனக்கெட்டும், தந்தி டிவியால் ஊரறிந்த பிரபலத்துக்கு 50 லைக்குகள், 100 லைக்குகள் என்றுதான் வந்தது.

காரணம் வேறொன்றும் இல்லை. பாண்டே யார் என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. அதனால்தான் தமது அபிமான பாஜகவை போலவே தமிழக மண்ணில் வளர முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்தார்.

இடையில் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வீடியோ ஒன்றை வெளியிடப் போவதாக ஃபிலிம் காட்டி செம பல்பு வாங்கிய கூத்தும் நடந்தது. பாஜக அதிமுக தோளில் ஏறியது போல், பாண்டே பாரிவேந்தர் தோளில் ஏறியிருக்கிறார்.

பாஜக தமிழகத்தை சீரழிக்கிற கட்சி என்றும் மக்களிடையே வேற்றுமையைத் தூண்டுகிறது என்றும் சுற்றிச்சுற்றி பிரச்சாரம் செய்த பாரிவேந்தர், தேர்தல் முடிந்ததும் பாஜகவின் முகமூடி எடுத்து வேந்தர் டிவியின் முகத்துக்கு போட்டுவிட்டிருக்கிறார்.
 தமிழின உரிமைக்காக உதயமான திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டுவிட்டு தேர்தல் முடிவு வெளியாவதற்குள் திமுகவை வேறோடு வெட்டி வீழ்த்தத் துடிக்கும் பாண்டேவுக்கு பல்லாக்கு கொடுத்திருக்கிறார் பாரிவேந்தர்!

தமிழர்களுக்கான செய்தித்தாளாக ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட தினத்தந்தி நிறுவனத்தில் ஏற்கனவே இருந்து, தமிழக மக்களுக்கு எந்த வகையில் எல்லாம் கெடுதல் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து பார்த்துவிட்டு, இன்னும் திருப்தி அடையாமல் இப்போது வேந்தர் டிவியில் அரங்கேறுகிறார்.

தமிழர்களுக்காக, தமிழினத்தின் முன்னேற்றத்துக்காக பேசும் ஊடகவியலாளர்கள்தான் வேலை கிடைக்க திண்டாடுகிறார்களே தவிர, தமிழர் விரோத ஊடகவியலாளர்களுக்கு தமிழகத்தில் வேலை பஞ்சம் ஏற்படுவதே கிடையாது.
பத்திரிகை உலக வேந்தர் பாலசுப்ரமணிய ஆதித்தன் கைவிட்டால் என்ன? இதோ நானிருக்கிறேன் என்று சொல்லி தாங்கிப் பிடித்திருக்கிறார் கல்வி உலக பாரிவேந்தர்!

வரலாற்றில் தொடக்கம் முதலே வேந்தர்கள் ஆரியர்களிடம் மண்டியிடுவதும் அல்லது ஏதாவது ஒரு சூழ்ச்சி செய்து வேந்தர்களை ஆரியர்கள் வீழ்த்துவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

தேர்தலுக்கு முன்பாக பாரிவேந்தர் இந்த பாண்டேவை தமது நிறுவனத்தில் பணி அமர்த்தியிருந்தால், கண்டிப்பாக சூடு சொரணையுள்ளோரின் வாக்குகளை பெற்றிருக்க முடியாது.
அதனால்தான் தேர்தல் முடிந்த பின்னர் செய்திருப்பார். தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்க திமுக; ஊடக வியாபாரத்துக்கு தமிழர் விரோத பாண்டே - இது தான் வேந்தர் கணக்கு போலும்!

தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தான் வாக்களித்த மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுவார்கள். ஆனால் பாரிவேந்தரோ, வாக்குகளை எண்ணத் தொடங்குவதற்கு முன்னரே ஏமாற்றி இருக்கிறார்!

ஆனால் ஒன்று பாரிவேந்தரே!
பாண்டேவால் உங்களின் இமேஜ் ஒரு அங்குலம் கூட உயராது.
 உங்கள் பணத்தால் பாண்டேவின் தொந்தி மட்டும் தான் நிறையும்.
                                                                                                      -முனியாண்டி ஐயங்கார்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 அதெப்படி சூத்திராள் தங்கம்,நம்மவா வெள்ளி?
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியதாகத் தகவல் வெளியானது.
இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார் கோமதி மாரிமுத்து.
அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்தியதற்கான சாத்தியங்கள் இருப்பதாகச் செய்தி வெளியிட்டது டெக்கான் ஹெரால்டு பத்திரிகை.

போலந்து நாட்டில் இந்திய தடகள வீராங்கனைகளுடன் இணைந்து கோமதி மாரிமுத்து பயிற்சி பெறுவதாக இருந்தது.
அந்தத் திட்டத்தில் மாற்றம் இருக்கலாம் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இதுகுறித்து அதிகாரபூர்வத் தகவல் எதுவும் தனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் தேசிய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்லே சுமாரிவல்லா.

இந்த விவகாரம் குறித்துப் பேட்டியளித்த கோமதி மாரிமுத்து, இந்தத் தகவல் பொய்யானது என்று தெரிவித்துள்ளார்.

 “இப்படி ஒரு தகவலைப் பத்திரிகை பார்த்துத் தெரிந்து கொண்டேன். தேசிய தடகள சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டுள்ளேன். எந்த அடிப்படையில் செய்தியை வெளியிட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தத் தகவலை அவர்கள் எங்கு பெற்றார்கள்? இது குறித்து என்னிடம் ஏன் கருத்துக் கேட்கவில்லை” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தால் போலந்து செல்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக வெளியான செய்திக்கும் கோமதி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“என் வாழ்க்கையில் நான் தடை செய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தியதில்லை. ஆசிய தடகளப் போட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்தினேன்.
எனவே, நான் ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்ததாக வெளியான செய்தி தவறு. பயிற்சிக்காக போலந்து செல்வதில் எந்த சிக்கலும் இல்லை. நாங்கள் வியாழக்கிழமை போலந்து புறப்பட்டுச் செல்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தங்கம் வென்ற  செய்தியை சிறிதாகவும்,வெள்ளி வென்றவரை வண்ணமாக நான்குகால செய்தியாக வெளியிட்ட ஊடகங்களில் திட்டமிட்ட சதிதான் இது என்றே தெரிகிறது.அதெப்படி சூத்திராள் தங்கம்,நம்மவா வெள்ளி?
------------------------------------------------------------------------------------------------------------------------------------